இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் நேற்று மறைந்தார். இந்நிலையில், தங்களது பாஸ்போர்ட் செல்லுமா செல்லாதா என்ற சந்தேகம் அந்நாட்டு மக்களை ஆட்கொண்டுள்ளது.
70 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த மகாராணி எலிசபெத்,ம்ம் பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தனது 27வது வயதில் தந்தை ஜார்ஜ் VI இறந்த பிறகு இவர் பிரிட்டனின் மகாராணி என அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து மகாராணிக்கு சில சிறப்பு சலுகைகள் உள்ளன. இவருக்கு ஓட்டுநர் உரிமம் கிடையாது. அதே போல இவருக்கு பாஸ்போர்ட் கிடையாது. ஏனென்றால் இவரது பெயரில் தான் பிரிட்டன் நாட்டில் பாஸ்போர்ட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மகாராணியின் மறைவுக்கு பின்னர், தங்களது பாஸ்போர்ட் செல்லுமா, அல்லது புதிய பாஸ்போர்ட் வாங்கவேண்டுமா என்ற சந்தேகம் பிரிட்டன் மக்களுக்கு தோன்றியிருக்கிறது. இதனை பலரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் கேட்டு வருகின்றனர்.
அந்த பாஸ்போர்டில், "இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மகாராணியின் பாதுகாப்பில் இருப்பவர்கள். இவர்களை எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒருவர், "தற்போது ராணி இறந்துவிட்டார். இதற்கு நாம் நம் பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யவேண்டும் என அர்த்தமா? ஏனென்றால், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் நாங்கள் "ராணியின் பாதுகாப்பில் இருப்பதாக" இருக்கிறது" எனக் கேட்டிருந்தார்.
ராணி எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு அவரது மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் அடுத்த அரசராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து ராணி இறக்கும்வரை அனுபவித்து வந்த சலுகைகள் அனைத்தும் இனி இவருக்கு வரும்.
அப்படியிருக்கையில், இன்னும் சில நாட்களில், அந்நாட்டு பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் "Her Majesty" என்பது, அரசர் சார்லஸின் பெயரில் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அவரவர் பாஸ்போர்டின் தேதி காலாவதி ஆன பிறகு அப்டேட் செய்ய தான் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர் மற்றவர் அனைவருக்கும் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் அவசியம். அந்நாட்டில் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற பிரஜை ராணி எலிசபெத் மட்டும் தான்.
மேலும், அந்நாட்டு ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்ப் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்படும். இதுவரை இங்கிலாந்தின் தேசிய கீதத்தில் உச்சரிக்கப்பட்ட, God save the Queen என்ற வாசகமும் God save the King என மாற்றமடையும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust