Putin - Xi 

 

NewsSense

உலகம்

சீனா அதிபர் ஷி - ரஷ்ய அதிபர் புதின் நட்பு எவ்வாறு உருவானது? அது எப்படிப்பட்டது?

இன்றைய சூழலில் ரஷ்யாவிற்கு சீனா முன்பை விட அதிகமாகத் தேவைப்படும் இடத்திற்கு முற்றிலும் மாறிவிட்டது, மாறாக, தொழில்நுட்பம், அல்லது அரசியல் சக்தி, பல்வேறு அளவுருக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவிற்கு ரஷ்யா தேவையில்லை. எனவே, இந்த சமன்பாட்டில் ரஷ்யா ஒரு இளைய பங்குதாரர்.

NewsSense Editorial Team

உக்ரைன் படையெடுப்பில் இருந்து பெய்ஜிங் விலகியிருந்தாலும் சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களுக்கிடையிலான நட்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்புதான் சீன அதிபர் ஷி ஷின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, சந்தித்துக் கொண்டனர்.

5,000 வார்த்தைகள் கொண்ட அறிக்கையாக வெளியான அச்சந்திப்பு, அவர்களின் கட்டற்ற உறவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

உக்ரைன் போர்

உக்ரைன் படையெடுப்பு

பிப்ரவரி 24 அன்று, யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத சம்பவத்தை ரஷ்யா நிகழ்த்தியது. அது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பாகும்.

உக்ரைன் மீதான படையெடுப்பு பற்றிய திட்டத்தை முன்கூட்டியே புதின் ஷியிடம் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஆனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளமை, பெருநிறுவனங்களின் வெளியேற்றம், உக்ரைனின் எதிர்பாராத ராணுவ பலன் அதனால் ஏற்பட்ட பின்னடைவு ஆகிய காரணமாக, ரஷ்யா சீனாவிடம் பொருளாதார மற்றும் இராணுவ உதவி கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

"ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஆதரிக்க சீனா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சீனா பொறுப்பேற்கும், அதற்காக சீனா நிறைய விலை கொடுக்க வேண்டி வரும்" என்பதை அமெரிக்க அதிபர் பிடன் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

China

கைவிடாது

வாஷிங்டன், DC க்கு வெளியே உள்ள ஆதாய நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பான CNA - இன் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி எலிசபெத் விஷ்னிக், பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் ஷி மற்றும் புதினுக்கு இடையிலான இணக்கமான உறவை பிரதிபலிப்பதால், சீனா ரஷ்யாவைக் கைவிடுவது சாத்தியமில்லை என்றார்.


2019 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தங்கள் உறவுகளை "புதிய சகாப்தத்திற்கான ஒருங்கிணைந்த கூட்டாண்மை"யை வளர்க்கத் தொடங்கின. இது ஆழமான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் சைபீரியா வழியாக அமைக்கப்பட்ட ஒரு புதிய எரிவாயு குழாய் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது - இருப்பினும் கடந்த சில பத்தாண்டுகளில்புதின் மற்றும் ஷியின் சந்திப்பானது அவர்களின் பிணைப்பைத் தெளிவாக்குவதாக எலிசபெத் விஷ்னிக் கூறுகிறார்.

"இது ஒத்திசைவான திருமணம் அல்ல என்றாலும் மேற்குலக எதிர்ப்பு எனும் புள்ளியில் அவர்கள் இணைகிறார்கள். அமெரிக்கா பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது அல்லது பிற நாடுகளுக்கு எதிராக சாதுரியமாகக் காய் நகர்த்துவதை இவர்கள் எதிர்கிறார்கள். இதனால் இவர்கள் உறவு இன்னும் இறுக்கமாகிறது” என்று அவர் கூறினார்.

நற்பெயரைக் காக்க நிறைய விலைகொடுத்தாலும் சீன-ரஷ்ய கூட்டாண்மையில் சீனா எந்த பெரிய மாற்றத்தையும் எதிர்காலத்தில் செய்ய வாய்ப்பில்லை. ஷி ஷின்பிங்கிற்கு ஒரு நுட்பமான சமநிலை மனப்பான்மை உள்ளது - அவர் எதிர்த்து நிற்றலில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறார், ஆனால் அவர் சீன-ரஷ்ய கூட்டாண்மையிலிருந்து விலகினால், அது சினா இது காலம் பேணி வந்த ரஷ்ய உறவில் தோற்றுவிட்டது போல் ஆகும் என்றும் எலிசபெத் விஷ்னிக் கூறுகிறார்.

Young Putin

பொதுவான காரணம்

1953 மற்றும் 1952 இல் முறையே ஒரு வருடத்திற்கும் குறைவான இடைவெளியில் பிறந்த ஷி மற்றும் புதின் ஆகிய இருவரும் பனிப்போரின் முடிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் உருவான உலகக் காட்சிகளில் பொதுத் தன்மையை உணர்ந்திருக்கலாம்.

சோவியத் யூனியனின் எச்சங்களில் இருந்து அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு புதிய ரஷ்யா உருவாக அந்நாடு போராடியபோது, ​​புதின் உளவுத்துறையின் அதிகாரமட்டத்திருந்து உயர்ந்து அதிபராக பதவியேற்றார் - அதிபர் போரிஸ் யெல்ட்சினின் உடல்நலக்குறைவு மற்றும் 1999-ல் செச்சினியாவில் நடந்த கொடூரமான போர் அதற்கு அட்சாரமாக அமைந்தது.

கொந்தளிப்பான காலங்களை ஓரளவு ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்ததற்காக புதின் ஆரம்பத்தில் மேற்கத்திய தலைவர்களால் பாராட்டப்பெற்றார். ஆனால் நல்மதிப்பைப் பெற்ற தேனிலவு காலம் குறுகியதாக இருந்தது.


“2000 களின் முற்பகுதியில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருடன் செச்சினியா மற்றும் அண்டை பகுதிகளில் கிளர்ச்சியை அடக்குவதற்கான தனது முயற்சிகளைப் புகுத்த புதின் முயற்சி செய்தார்”என்று சைனோ-என்கே ஆராய்ச்சி குழுவின் மூத்த ஆசிரியர் அந்தோனி ரின்னா கூறினார்.


​​புதின் ரஷ்யாவில் ஜனநாயகத்தை முன்னேற்றும் எண்ணம் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்று வாதிடுகிறார் அந்தோணி.


69 வயதான புதின் தனது பதவிக்கு சவாலான அச்சுறுத்தல்களை முறியடித்து, தனிப்பட்ட அதிகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறார்.


திருத்தப்பட்ட சட்டங்களின் கீழ், அவர் இப்போது 2036 வரை ஆட்சியில் இருக்க முடியும்.


இது சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி போன்ற விமர்சகர்கள் ரஷ்ய அதிபரை உக்ரைனில் இருந்து கிரிமியாவைக் கைப்பற்றுவதற்குப் பயமின்றி வந்த பித்திபிடித்த சீஸர் என்று அழைக்க வழிவகுத்தது.

Young Xi Jinping

சீனாவின் ஒப்பில்லா தலைவன்

ரஷ்ய தலைவரை தனது "சிறந்த நண்பர்" என்று முன்னர் விவரித்த ஷி மார்ச் 2013 இல் பதவியேற்றதிலிருந்து புதினைப் போலவே அதிகாரத்தை மையப்படுத்த முயன்றார்.

சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது மாகாணங்களில் "நேந்துவிடப்பட்ட இளைஞனாக" பல ஆண்டுகள் கழித்த, புனர் வாழ்வளிக்கப்பட்ட புரட்சியாளரின் மகன் ஷி முதலில் ஒரு ஒப்பிட முடியாத நிர்வாகியாக அறியப்பட்டார். அவரது சிறந்த திறமை எதிரிகளை உருவாக்கவில்லை என்று வரலாற்றாசிரியர் ஜோசப் டோரிஜிய கூறுகிறார்.

ஷி தனது லட்சியங்களை மறைப்பதிலும் கவனமாக இருந்தார்,

கடந்த காலங்களில், மாவோ சேதுங்கிற்குப் பிறகு எந்த சீனத் தலைவரையும் விட அதிக அளவில் ஷி அதிகாரத்தை தன்னிடம் குவித்துள்ளார். கட்சி, இராணுவம் போன்ற நிறுவனங்களின் மீதான தனது பிடியை உறுதிப்படுத்தினார், அதே நேரத்தில் மில்லியன் கணக்கில் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அகற்றினார்.

அவர் சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் ஒடுக்குமுறைகளை கட்ட வழித்துவிடக் காரணமாக இருக்கிறார். அதே நேரத்தில் சீன சிவில் சமூகம் கடுமையான இணைய தணிக்கையை எதிர்கொள்கிறது.

மனித உரிமை ஆர்வலர்கள் அதற்காகப் போராடும் வழக்கறிஞர்களைக் கடுமையான சட்டங்களால் கட்டுப்படுத்துகிறது. அல்லது இயங்கவிடாமல் செய்கிறது.

இப்போது, ​​புதினைப் போலவே, ஷி சீனாவின் அதிபராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் தன்னிகரில்லாத வகையில் மூன்றாவது முறையாக பதவியில் இருப்பதன் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் தனது ஆட்சியை நீட்டிக்கவும் உள்ளார்.

Russia

மாறுபட்ட கோணம்

சீன அதிபர் ஷி-யின் சித்தாந்தம் மார்க்சியம், லெனினிசம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றின் பாரம்பரியத்திலிருந்து பெறப்பட்டாலும், புடின் ஒரு ஒரு உளவாளியாக, அதாவது பெரிதான சித்தாந்தமற்ற ஆனால் தனது நாட்டை நேசிக்கும், பாதுகாக்க நினைக்கும் ஒருவராகவே கருதப்படுகிறார்.

"விளாடிமிர் புதின் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ முயற்சிக்கிறார் என்று மக்கள் அடிக்கடி கூறுகின்றனர், மேலும் சோவியத் ஒன்றியத்தின் சரிவு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் பேரழிவு என்று அவர் வெளிப்படையாகக் கடந்த காலங்களில் கூறி இருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றியை பெருமிதமாக அவர் கருதுகிறார்,” என்று டோரிஜியன் கூறினார்.

புதின் மற்றும் ஷி இருவரும் தீவிரவாதத்தை விரும்பவில்லை என்றாலும், ஷி சீனப் புரட்சிக்கு முற்றிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக உணர்கிறார். தன்னை ஒரு கம்யூனிச கொள்கைவாதியாக பிரகடனப்படுத்த முயல்கிறார். ஆனால், அதே நேரம் இதற்கு மாறாக புதினுக்கு கம்யூனிச சித்தாந்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை என டோரிஜியன் கூறுகிறார்.

இரு தலைவர்களும் ஒன்றுடன் ஒன்று ஆனால் சில சமயங்களில் முரண்பட்ட பிராந்திய லட்சியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். புதின் முன்னாள் ரஷ்ய மற்றும் சோவியத் பிரதேசத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த முயன்றார். இதற்கிடையில், ஷி, 23.5 மில்லியன் மக்களைக் கொண்ட சுயமாக ஆளும் ஜனநாயக நாடான தைவானில் தமது பிடியை இன்னும் இறுக்கமாக முயல்கிறார்.

2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, ஏனெனில் பெய்ஜிங் உக்ரைனுடன் வலுவான பொருளாதார உறவுகளைப் பேணவும் விரும்புகிறது.

நிலையற்ற தன்மையை நோக்கிய நகர்வு

ஷி மற்றும் புதினின் உறவு எங்குச் செல்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரைன் படையெடுப்பில் இருந்து பெய்ஜிங் தன்னைத் தூர விலக்கிக் கொண்டாலும், குறுகிய காலத்தில் அது பெரிதும் வேறுபடாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் ஒரு சுதந்திர சிந்தனைக் குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் இயக்குனர் ராஜி பிள்ளை, இரு தரப்பினரும் இன்னும் தத்துவார்த்த ஒத்திசைவைப் பராமரிக்கும் அதே வேளையில், ரஷ்யாவிற்கு சீனா எவ்வளவு ஆதரவை வழங்கும் என்பதற்கு இன்னும் வரம்புகள் உள்ளன என்று கூறுகிறார்.

இன்றைய சூழலில் ரஷ்யாவிற்கு சீனா முன்பை விட அதிகமாகத் தேவைப்படும் இடத்திற்கு முற்றிலும் மாறிவிட்டது, மாறாக, தொழில்நுட்பம், அல்லது அரசியல் சக்தி, பல்வேறு அளவுருக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவிற்கு ரஷ்யா தேவையில்லை. எனவே, இந்த சமன்பாட்டில் ரஷ்யா ஒரு இளைய பங்குதாரர்.

புதினுடனான தனிப்பட்ட உறவுகள் இருந்தபோதிலும், ஷி இறுதியில் சீனாவிற்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்துச் செயல்படுவார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?