பிட் அடிக்காமல் இருக்க முகமூடிகள் Twitter
உலகம்

Exam-ல் காப்பி அடிக்காமல் இருக்க முகமூடிகள்- கவனம் பெறும் பிலிப்பைன்ஸ் பள்ளியின் பலே ஐடியா

Antony Ajay R

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது மோசடி செய்வதை தடுக்க விதவிதமான தலைக்கவசங்கள் அணிவது உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பது காலகாலமாக பள்ளிகளில் நடைபெறும் சிக்கலாகும். இதனைத் தடுக்க ஆசிரியர்கள் என்ன தான் முயன்றாலும் மாணவர்கள் வித விதமான பிட்டுகளை எடுத்து வந்து காப்பி அடித்து விடுவார்கள். இந்த சிக்கலுக்கு மாணவர்களே தீர்வு கண்டால் எப்படியிருக்கும்?

பிகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் பேராசிரியரான மேரி ஜாய் மண்டேன்-ஓர்டிஸ் தனது மாணவர்கள் அடுத்துள்ளவரின் விடைத்தாளைப் பார்த்து எழுதாமலிருக்க, ஒரு எளிய தலைக்கவச அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மாணவர்கள் வகுப்பிலிருக்கும் குப்பைகளைக் கொண்டே இதனை உருவாக்கியிருக்கின்றனர். இப்படி மோசடி செய்யாமல் தடுக்கும் உத்தியை தாய்லாந்தில் நடந்த இதே போன்ற சம்பவத்திலிருந்து பெற்றதாக மண்டேன்-ஓர்டிஸ் பிபிசி தளத்திடம் கூறியுள்ளார்.

2013ல் பாங்காக் மாணவர்கள் இது போன்று தேர்வு எழுதும் புகைப்படம் வைரலானது.

பேராசிரியர் மண்டேன்-ஓர்டிஸ், இந்த திட்டம் நன்றாகவே வேலை செய்ததாக கூறியுள்ளார். இது மாணவர்கள் நேர்மையாக இருக்க உதவுவதுடன் அவர்களது திறனையும் வெளிப்படுத்துகிறது என்றும் சில நேரங்களில் வெறும் 5 நிமிடத்தில் அருமையான தலைக்கவசத்தை அவர்கள் உருவாக்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த திட்டத்தால் மாணவர்கள் விரைவாக தேர்வு எழுதி முடித்ததாகவும், இதனைத்தாண்டி யாரும் தேர்வு மோசடியில் சிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் தலைக்கவசத்துடன் தேர்வு எழுதும் புகைப்படங்களை பேராசிரியர் மண்டேன்-ஓர்டிஸ் பேஸ்புக்கில் பகிர்ந்து வர அது ஆயிரக்கணக்கில் லைக்குகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் பல பள்ளிகள் இது போன்ற நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?