மெக்சிகன் காவல்துறையினர் ஒரு பொம்மையை கை விலங்கிட்டு கைது செய்தனர். அதன் மேல் ஒரு கத்தி ஒட்டியிருந்தது. ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான முடியிருந்த பொம்மையானது ஜீன்ஸ் உடையும் ஷூவும் அணிந்திருந்தது.
சக்கி (Chucky) என்ற பெயருள்ள அந்த பொம்மையை சுவரில் சாய்த்துவைத்து புகைப்படம் எடுத்தனர். சக்கி ஒரு பப்பட் பொம்மை. இதனை கையாளும் உரிமையாளரும் வடக்கு மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் பெயர் கார்ல்சன். இவர் இந்த "பேய் பொம்மையைப்" பயன்படுத்தி மக்களை பயமுறுத்தி, பணம் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பொம்மையும் அதன் உரிமையாளரும் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் கோஹுய்லா மாநிலத்தில் உள்ள மோன்க்ளோவாவில் உள்ள காவல் துறை அதிகாரி ஒருவர், சக்கியிடம் இருந்து சிரித்தபடி, நீளமான கத்தியை எடுத்து போஸ்கொடுத்துள்ளார்.
பொம்மையின் கைகளில் விலங்கு மாட்டிய காவல்துறை அதிகாரியை உயர் அதிகாரிகள் வேலையில் சீரியஸாக இல்லாததற்காக கண்டித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
கார்ல்சன் காவல்துறையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சக்கி பொம்மை குறித்து தக்வல்கள் இல்லை.
ஹாலிவுட் ஹாரர் படங்களின் தாக்கத்தால் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust