Maggi Twitter
உலகம்

தாய்லாந்தில் 14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ் - காரணம் என்ன?

நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த போதிலும் உடனடியாக நூடுல்ஸ் விலையை உயர்த்த அரசு மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Priyadharshini R

பெரும்பாலான மக்கள் நூடுல்ஸை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். வெளிநாட்டு உணவாகக் கருதப்படும் இது இந்தியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நாட்டவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகையாக உள்ளது.

இதற்கிடையில் 14 ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்தில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸின் விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தாய்லாந்து நாட்டை பொருத்தவரை நூடுல்ஸ் என்பது பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு என்பதால் அந்த உணவின் விலையை உயர்த்தலாம் என்று தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தாய்லாந்தில் 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருக்கும் நிலையில் தற்போது விலைவாசி காரணமாக அவற்றின் விலையை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இந்த கோரிக்கையைத் தாய்லாந்து அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் தகவல்களின் படி, நூடுல்ஸை உற்பத்தி செய்ய 6 பாட் (பாங்காக் கரன்ஸி) முதல் 7 பாட் வரை செலவாகிறது என்றும், விற்பனை விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 14 முதல் 15 ரூபாய் வரை.

நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த போதிலும் உடனடியாக நூடுல்ஸ் விலையை உயர்த்த அரசு மறுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கம் இருந்தாலும் தாய்லாந்து மக்கள் நூடுல்ஸ் உணவை அதிகம் பயன்படுத்துவதால் அவர்கள் மீது அதிக சுமை சுமத்துவதை அனுமதிக்க முடியாது என்று தாய்லாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் சிறிய அளவில் விலையை உயர்த்த விரைவில் அரசு அனுமதிக்கும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?