Prince Charles Twitter
உலகம்

பின்லேடன் இடமிருந்து பணம் பெற்றாரா பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ? - வெடிக்கும் சர்ச்சை

NewsSense Editorial Team

பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் சமூகத் தொண்டு நிறுவனங்களில் ஒன்று, ஒசாமா பின் லேடன் குடும்பத்திடமிருந்து 1 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் பணத்தை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டதாக நேற்று (ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை) ஒரு செய்தி வெளியானது.

பின் லேடன் குடும்பத்திலிருந்து நன்கொடையைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என அப்போதே அதிகாரிகள் கூறியதாகவும், அதையும் மீறி தொண்டு நிறுவனம் பெற்றுக் கொண்டதாகவும் ஒரு தரப்பினர் சார்லஸைக் குற்றம்சாட்டுகின்றனர்.

சமூகத் தொண்டுக்கான நிதி தொகுப்பு இளவரசர் சார்லஸின் பெயரில் இருக்கலாம். ஆனால் அந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்தது அதன் டிரஸ்டிகள் தானே ஒழிய இளவரசர் சார்லஸ் அல்ல என மறு தரப்பினர் சமாதானம் சொல்லி வருகின்றனர்.

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சேரிடபிள் ஃபண்ட் என்கிற பெயரில் உள்ள சமூகத் தொண்டு நிதித் தொகுப்புக்கு கடந்த 2013ஆம் ஆண்டு பின் லேடன் குடும்பத்தைச் சேர்ந்த பக்ர் பின் லேடன் மற்றும் அவரது சகோதரர் ஷஃபிக், மில்லியன் கணக்கில் பணத்தை நன்கொடியாகக் கொடுத்ததாக தி சண்டே டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

இவர்கள் இருவருமே அல்கொய்தாவின் தலைவர் மற்றும் அமெரிக்காவில் 9 / 11 இரட்டை கோபுர தாக்குதலைத் திட்டமிட்ட ஒசாமா பின் லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அல்கொய்தாதான் 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அமெரிக்க சிறப்புப் படையினரைக் கொன்றனர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

2013ஆம் ஆண்டு லண்டனில் வைத்து பக்ர் பின் லேடனை இளவரசர் சார்லஸ் சந்தித்ததாகவும், அவர்களுடைய பரிசை சார்லஸ் ஏற்றுக் கொள்ள சம்மதித்ததாகவும் கூறினார். அப்போது அரசு ஆலோசகர்கள் பலரும், அப்பரிசை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என இளவரசர் சார்லஸுக்கு அறிவுறுத்தியதாகவும் சண்டே டைம்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பக்ர் பின் லேடனிடமிருந்து நன்கொடை பணத்தைப் பெற்றுக் கொண்டதை இளவரசர் சார்லஸின் அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவர்கள் பணத்தை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை டிரஸ்டிக்கள் தான் தீர்மானித்ததாகவும், அதற்கும் இளவரசர் சார்லஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளித்துள்ளது.

நிதி தொகுப்பில் டிரஸ்டிகளாக இருந்த ஐவருமே அந்த நன்கொடையை ஏற்றுக் கொள்ள முழுமையாக ஏற்றுக் கொண்டதாக இளவரசர் சார்லஸின் நிதி தொகுப்பின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி இயான் செஷிர் (Ian Cheshire) கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் இளவரசர் சார்லஸ் இது போல சில சர்ச்சைக்குரிய நன்கொடைகளை பெற்றுள்ளார்.

கடந்த மாதம் கத்தார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜசிம் பின் ஜபர் அல் தானியிடமிருந்து (Sheikh Hamad bin Jassim bin Jaber Al Thani) 3 மில்லியன் டாலர் நன்கொடையைப் பெற்றதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

ஒரு சௌதி பில்லியனருக்கு பல்வேறு மரியாதைகள், விருதுகளை வழங்குவதற்கும், குடியுரிமை வழங்குவதற்கும் பகரமாக பிரின்செஸ் ஃபவுண்டேஷன் நன்கொடையைப் பெற்றுக் கொண்டதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது.

மஃபூஸ் மரே முபாரக் பின் மஃபூஸ் (Mahfouz Marei Mubarak bin Mahfouz) என்கிற பணக்காரர் பெரிய தொகையை இளவரசர் சார்லஸின் பல மீளுருவாக்க திட்டங்களுக்கு நன்கொடை செலுத்தி இருந்தார்.

அவ்வமைப்பின் தலைவராக இருந்த மைக்கேல் ஃபாசெட் (Michael Fawcett) கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் உள் விசாரணையைத் தொடர்ந்து ராஜினாமா செய்தது நினைவுகூரத்தக்கது.

மஃபூஸிடமிருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக நன்கொடைகளை நெறி முறைப்படுத்தும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அமைப்பு விசாரித்து வருவதாக கடந்த நவம்பர் மாதம் கூறியது. இது தொடர்பாக ஒரு காவல்துறை விசாரணையும் நடந்து வருகிறது.

பணச்செலவைச் செய்த ரஷ்ய வங்கியாளர் ஒருவரிடமிருந்து பிரின்செஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு ரொக்கத்தைப் பெற்றுக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை, அவ்வமைப்பை மேற்பார்வை செய்து வரும் ஸ்காட்லாந்து நன்கொடை நெறிமுறையாளர் தனியே விசாரித்து வருவதாகவும் டி டபிள்யூ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?