நாய் (Representational) Twitter
உலகம்

29 நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்கள் - எங்கே?

நாய்கள் தங்களது மகன்களை கடித்ததாக நாய்களைக் கொன்றவர்கள் கூறியுள்ளனர்.

Antony Ajay R

தெருவில் சுற்றித்திரியும் நாய்களை சில மனிதர்கள் இரக்கமற்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் சமுக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா நாடான கத்தாரில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து மிருகநல அமைப்புகள் மற்றும் ஆர்வளர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

PAWS என்ற விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு, "நாய்கள் இருந்த தொழிற்சாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிலர் 29 நாய்களை சுட்டுக் கொன்றனர். சில நாய்கள் காயமடைந்தன." எனக் கூறியதாக செய்து தளங்கள் கூறியிருக்கின்றன.

அந்த நாய்கள் தங்களது மகன்களை கடித்ததாக நாய்களைக் கொன்றவர்கள் கூறியுள்ளனர்.

கத்தாரின் தற்போதைய ஆட்சியாளர், தமிம் பின் ஹமத் அல் தானி (Tamim bin Hamad Al Thani) -யின் சகோதரியான ஷேகா அல் மயாசா இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து துபாய் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் கண் முன்னே நிகழ்ந்திருக்கிறது என்றும் கும்பலாக வந்த ஆண்களில் இருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் விலங்குகள் மிட்பு அமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.

சுடப்பட்ட நாய்களில் ஒரு குட்டி மட்டும் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை, "காட்டுமிராண்டித்தனமான செயல் மற்றும் கத்தார் சமூகத்திற்கு அச்சுறுத்தல்" என ரோனி ஹெலோ என்ற விலங்கு உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் சமுக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் துபாயில் மக்கள் மத்தியில் துப்பாக்கிகளின் புழக்கம் இருப்பது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?