நிருபமா ராஜபக்ஷ NewsSense
உலகம்

இலங்கை : நாட்டைவிட்டு வெளியேறுகிறதா ராஜபக்சே குடும்பம், என்ன நடக்கிறது அங்கே?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய உறவினரான நிருபமா ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

NewsSense Editorial Team

இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமடைந்து வரும் சூழலில் பக்சே குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களது நண்பர்களும் ஒவ்வொருவராக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

நாட்டைவிட்டு வெளியேற்றம்


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய உறவினரான நிருபமா ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட EK-655 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ்

உலகளவில் பிரமுகர்களால் முறைகேடாக சேமிக்கப்பட்ட சொத்துக்களை பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் அம்பலப்படுத்தியது. இதில், நிருபமா ராஜபக்சவும், அவரது கணவர் குமார் நடேசனும் முறைகேடாக சொத்து சேமித்ததாக ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கோட்டாபய ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் இலங்கை அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய சகாவான அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி இலங்கையைவிட்டு ரகசியமாக வெளியேறினார்.


நாமல் ராஜபக்சேவும் நாட்டைவிட்டு வெளியேறினார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது

அந்நிய செலவாணி, கடன் போன்ற பல சிக்கல்களால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா தலைமையிலான கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நேற்று விலகினர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிடியாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில் தான் பதவி விலகப் போவதில்லை என ராஜபக்சே அதிரடியாக அறிவித்தார். அவர் பதவி விலகக்கோரி இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?