ரஷ்யாவின் நிழல் அரசன்; இவரை கொல்லவே முடியாதா? - ரஸ்புடின் குறித்த 5 வதந்திகள் & உண்மைகள் twitter
உலகம்

ரஷ்யா நிழல் அரசன் ரஸ்புடின் : இவர் ஒரு காம காட்டேரியா? ரஷ்யாவின் ரகசிய ஆட்சியாளரா?

Gautham

ரஷ்ய கதைகளில், போற்றப்பட்ட, கொண்டாடப்பட்ட, விமர்சிக்கப்பட்ட தூற்றப்பட்ட, மனிதர் ரஸ்புடின். கிரிகோரி எஃபிமோவிக் ரஸ்புடின் (Grigory Efimovich Rasputin) வழக்கமான பாலுறவுகளிலிருந்து மாறுபட்டவர், யோகி போல நோய் நொடிகளைத் தீர்க்கக் கூடியவர், அரசியல் சதிகாரர், துரோகம் இழைத்த சந்நியாசி என ரஸ்புடினுக்கு எத்தனையோ வண்ணங்களும் கதைகளும் இருக்கின்றன.

இன்றைய பிரபல அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களைப் போல ஒரே பிறப்பில் மிகப்பெரிய புகழையும், மிகக் கடுமையான விமர்சனங்களையும் நிந்தனைகளையும் எதிர்கொண்டவர். பல்வேறு காரணங்களுக்காக, பல குழுக்களால் பலி கொடுக்கப்பட்டார் என்கிறது வரலாறு.

சைபீரியாவில் பிறந்து உலகை உலுக்கிய அந்த மனிதரைக் குறித்து ஐந்து வதந்திகள் மற்றும் உண்மைகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

1. அவரிடம் மாய சக்திகள் இருந்தன

மேற்கு சைபீரியாவில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ரஸ்புடினுக்கு இளம் வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது நாட்டம் இருந்தது. எனவே சிறு வயதிலேயே மதத்தை உள்வாங்கத் தொடங்கினார். சிறு குழந்தையாக இருக்கும் போது, உள்ளூரில் ரஸ்புடினிடம் ஏதோ மாய மந்திர சக்திகள் இருப்பதாக வதந்திகள் இருந்தன. 

சராசரி ஆணைப் போலத் திருமணம் செய்து கொண்டு 7 குழந்தைகளுக்கு தகப்பனான பிறகும், தன் குடும்பத்தை விட்டு கிறிஸ்தவ மதத்தை நோக்கிப் பயணித்தார். பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, மத ரீதியிலான போதனைகளைக் கேட்டு, ஒருகட்டத்தில் மத போதனை செய்யத் தொடங்கி கடைசியில் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்கை வந்தடைந்தார்.

பலரின் அறிமுகம் மூலம் ஜார் நிகோலஸ் மற்றும் அவரது மனைவி ஜரினா அலெக்ஸாண்ட்ரா ஆகியோரோடு நெருக்கமானார். இந்த அரச குடும்ப வாரிசுக்குத் தொடர்ந்து உடலில் உள்ள காயம் வழி ரத்தம் வடியும் பிரச்சனை (hemophilia) இருந்தது. ஒருநாள் இரவு ரஸ்புடினை அழைத்து பிரச்சனையைத் தீர்க்குமாறு கூறினர் அரசியார். 

ரஸ்புடின் அந்த சிறுவனோடு கொஞ்ச நேரம் செலவிட்ட பிறகு, சட்டென ரத்தப் போக்கு தற்காலிகமாக நின்றது போலத் தெரிந்தது. ஆனால் உண்மையில் மனிதர்களின் ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் ஆஸ்பிரின் மருந்து கொடுப்பதை நிறுத்தினார். இது மாய மந்திர சக்தி எல்லாம் ஒன்றுமில்லை என்கிறது டைம் பத்திரிகை.

2. ராணியின் காதலர் & வழக்கமான பாலுறவு விஷயங்களிலிருந்து மாறுபட்டவர்

ரஸ்புடின் பாலியல் ரீதியில் மற்றவர்களைச் சுரண்டுவது அவர் காலத்திலேயே காட்டுத் தீ போலப் பரவியது. வயிறு முட்டக் குடித்துவிட்டு, விலைமாதுகளின் வீடுகளுக்குச் செல்வது அவர் வழக்கமாக இருந்தது. இது அவருடைய மதமாச்சரியங்களுக்கு எதிரானதாக இருந்தது. ரஸ்புடின் அவ்வப்போது சலூன்களில் மற்றவர்களை மகிழ்வித்தாலும், அவர் பாலுறவு தொடர்பான் விஷயத்தில் வெறிபிடித்தவர் என்பதற்கோ, ரஷ்ய நாட்டு ராணியைக் காதலித்தார் என்பதற்கோ எந்த வித ஆதாரங்களும் இல்லை. 

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெடித்த புரட்சியின் போது, கிளப்பிவிடப்பட்ட விஷயங்கள் இது என்கிறது டைம் பத்திரிகை.

3. ரஷ்யாவின் ரகசிய ஆட்சியாளர்:

முன்பே கூறியது போல, ஜரினா அலெக்ஸாண்ட்ராவின் மகனின் ரத்தப் போக்கை நிறுத்திய காரணத்தினால், ரஸ்புடினுக்கு ரஷ்ய அரசவையில் ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி தனக்கென அரசு அதிகாரிகள், தேவாலய அமைச்சர்களை நியமித்தார் என்பதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் இவர்தான் நிழல் அரசாங்கம் நடத்தினார் என்பது வேடிக்கையானது. ரஸ்புடின் அவ்வப்போது சில ஆலோசனைகளை அரசருக்கும், அரசிக்கும் கூறியது உண்மைதான் என்றாலும், நிழல் அரசாங்கம் எல்லாம் நடத்தவில்லை.

ரஸ்புடின் & அலெக்ஸாண்ட்ராவின் ஆலோசனையைக் கேட்டு 1915ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மன்னர் ராணுவத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதற்குப் பின் போர்க்களத்தில் ரஷ்யா கண்ட தோல்விகளுக்கு எல்லாம் ஜார் நிகோலஸ் மன்னரே பொறுப்பேற்க வேண்டி வந்தது என்றால் நிலைமையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

4. ரஸ்புடினை கொல்ல முடியவில்லை

ரஸ்புடின் கொல்லப்படுவதற்கு முன், ரஸ்புடின் அப்பாவிகளை பாலியல் ரீதியில் தூண்டுகிறார் என ஒரு பிச்சை எடுக்கும் பெண், 1914ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஸ்புடினின் வயிற்றில் கத்தியால் குத்தினார். நிறைய ரத்தம் போனது, கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டு, மீண்டும் பிழைத்துக் கொண்டார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1916 டிசம்பர் 30ஆம் தேதி ஃபிளிக்ஸ் யுசுபொவ் என்பவர் ரஸ்புடினை ஒரு விருந்துக்கு அழைத்தார். அந்த பிரமாதமான விருந்தில் பரிமாறப்பட்ட அனைத்து உணவிலும் விஷம் கலக்கப்பட்டு இருந்தது எனக் கூறப்படுகிறது. அப்பேர்பட்ட உணவைச் சாப்பிட்ட பிறகும் மனிதர் எந்த வித தலைச்சுற்றல், சோர்வு போன்ற விஷயங்கள் அவரிடம் தென்படவில்லை. அதன் பிறகு அவர் சுடப்பட்டு, தலையில் குண்டு பாய்ந்து இறந்து போனார். அவரது உடலை ஆய்வு செய்த போது, உடலின் எந்த பகுதியிலும் விஷம் இல்லை என்று கூறப்படுகிறது.

5. ரஸ்புடின் உயிர்த்து எழுந்து வந்தார்

எல்லா நாயகர்களின் கதைகளைப் போல, விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட பிறகு, ரஸ்புடின் சுடப்பட்டு உறைந்து கொண்டிருந்த ஆற்றில் தூக்கி எரியப்பட்டார். அப்படி எறியப்பட்ட மனிதர், ஒரு குழுவால் ஆற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் ரஸ்புடினின் உடல் கடும் குளிரில் மலயா நெவகா ஆற்றில் எரியப்பட்டது. ரஷ்ய காவல்துறைக்கு ரஸ்புடினின் உடலைக் கண்டுபிடிக்கவே கிட்டத்தட்டப் பல நாட்கள் ஆனது என்கிறது டைம் வலைதளம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?