பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்! canva
உலகம்

பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!

இந்த பீர் நிரப்பப்படும் பாட்டில்கள் பெரும்பாலும் ஒரே நிறத்தில் இருக்கிறது என்பதை கவனித்திருக்கிறீர்களா? அது ஏன் என்பது தெரியுமா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Keerthanaa R

மதுபானம் அருந்துவது என்ன தான் உடல்நலத்திற்கு கேடு தரும் என்று நாம் கூறினாலும், அதனை அருந்துபவர்கள் அல்லது விற்பவர்களின் எண்ணிக்கையில் ஏறுமுகமே இருந்துள்ளதே தவிர, குறைந்து நாம் பார்த்ததில்லை.

மதுபானங்களில் பல வகைகள் உள்ளன. அதில் பரவலாக அறியப்படுவது பீர். இந்த பீர் பல ஃபிலேவர்களிலும், பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இந்த பீர் நிரப்பப்படும் பாட்டில்கள் பெரும்பாலும் ஒரே நிறத்தில் இருக்கிறது என்பதை கவனித்திருக்கிறீர்களா? அது ஏன் என்பது தெரியுமா? இந்த பதிவில்...

பீர் பாட்டில்கள் பெரும்பாலும் பச்சை அல்லது பழுப்பு நிறங்களில் தான் இருக்கும். இதன் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.

எகிப்து நாட்டில் தான் பீர் தயாரிப்பு தொடங்கியது என தகவல் கூறுகின்றன. பீர் தயாரிப்பு தொடங்கிய சமயத்தில் பெரும்பாலும் இவை டிரான்ஸ்பாரென்ட் அதாவது வெளிப்படையான தன்மை கொண்ட பாட்டில்களில் தான் விற்கப்பட்டன. ஆனால் சில நாட்களில் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

வெளிப்படையான தன்மை கொண்ட பாட்டில்களில் சூரிய ஒளி எளிதில் ஊடுருவியது. இதனால் உள்ளிருந்த பானம் சுவை மாற்றம் ஏற்பட்டு, வேதியல் மாற்றமடைந்தது. இந்த வேதியல் மாற்றம் அடைந்த பீரை அருந்தியவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை அடுத்து ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.

நாம் கண்களுக்கு பயன்படுத்தும் கண்ணாடிகளில் எப்படி சன் ப்ரொடெக்ஷன் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டதோ, அதுபோல, பீரை நிறப்பவும் சன் கிளாஸ் தொழில்நுட்பத்தில், ஒளியை சிதறவைக்கும் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த பாட்டிலுக்குள் நிரப்பப்பட்ட பானமும் நீண்ட நேரத்திற்கு கெட்டுப்போகாமல் இருந்தது. இப்படி தான் பழுப்பு நிற பாட்டில்கள் முதன் முதலாக வந்தன.

இரண்டாம் உலகப்போரின்போது இந்த பீரின் தேவை அதிகரித்தது. பல நிறுவனங்களாலும் பீர் பாட்டில்கள் வாங்கமுடியாமல் போனது. எனவே பழுப்பு நிறத்திற்கு அடுத்தபடியாக பச்சை நிற பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனால் தான் பெரும்பாலும் பீர் பாட்டில்கள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கின்றன. ஆனாலும், வெளிப்படையான தன்மை கொண்ட பாட்டில்களிலும் பீர் விற்பனை செய்யப்பட்டு தான் வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?