தன் பழைய உரிமையாளர்கள் மீது கொண்டிருந்த அளவுகடந்த அன்பினால், புதிய உரிமையாளர் வீட்டிலிருந்து சுமார் 64 கிலோ மீட்டர் நடந்தே சென்று பழைய உரிமையாளர்களை சந்தித்துள்ளது நாய் ஒன்று.
நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளில் மனிதர்களுடன் மிக நெருக்கமாக, எளிதாக ஒன்றிப்போவது நாய்கள் தான். ஒரு முறை கரிசனம் காட்டினால் போது காலம் முழுக்க நன்றிக் கடன் பட்டிருக்கும்.
அதுபோல தான் இருந்திருக்கிறது கூப்பர் என்ற கோல்டன் ரிட்ரீவர் நாய். இது ஒரு மீட்பு நாய். வடக்கு ஐயர்லாந்திலுள்ள டன்கனன் என்ற இடத்தில் ஒரு வீட்டில் இருந்தது கூப்பர்.
திடீரென கூப்பர் காணாமல் போனது, ஒரு மாதக் காலமாக அதனை தேடி வந்துள்ளனர். அப்போது கூப்பர் டன்கனன் என்ற இடத்திலிருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தில் தென்பட்டதாக மீட்புக் குழுவுக்கு தகவல் வந்தது.
கூப்பர் தனது பழைய உரிமையாளர்களை சந்திக்கவே தன் புதிய வீட்டை விட்டு வெளியேறி 64 கிலோ மீட்டர் தூரம் தனியே நடந்து சென்றுள்ளது. பரபரப்பான, வாகனங்கள் நிறைந்த சாலைகளையும், பல ஆபத்தான வழிகளையும் தனித்தே கடந்து சென்றுள்ளது கூப்பர்.
கூப்பரின் பழைய உரிமையாளரான நைகெல், இனி தன்னால் இந்த நாயை கவனித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் அதனை நாய்களை பாதுகாக்கும் காப்பகத்தில் விட்டுவிட்டார்.
தேவைப்படுபவர்கள், விரும்புபவர்கள் இந்த காப்பகங்களின் மூலம் தங்களுக்கு பிடித்த நாயை தத்தெடுத்துக்கொள்ளலாம். அப்படித்தான் கூப்பரை தத்தெடுத்தனர். புதிய வீட்டில் மாலி என்ற மற்றொரு நாயும் இருந்தது.
ஆனால் புதிய வீடு ஏனோ கூப்பருக்கு பிடிக்கவில்லை போலும். காணாமல் போன நாயை தேடி போஸ்டர்கள், சமூக வலைத்தளங்களில் தகவல்களுடன் கூடிய புகைப்படங்கள் பகிரப்பட்டன.
பழைய உரிமையாளரின் வீட்டின் அருகில் கூப்பர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை மீட்டனர்
தற்போது கூப்பர் தன் புதிய வீட்டில் புதிய நண்பர்களுடன் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust