Rose Day: History and Significance - Viral Memes Canva
உலகம்

Rose Day: தொடங்கியது Valentine வாரம்! இணையத்தை ஆக்கிரமித்த மீம்கள்

சிங்கிளாக இருக்கும் நம் சூப் பாய்ஸ் வழக்கம் போல மீம்கள் மூலமாக தங்கள் கதறல்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றில் சில

Keerthanaa R

உலகெங்கிலும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரோமில் வாழ்ந்த கத்தோலிக் மதகுருவான செயிண்ட் வாலண்டைனின் பெயரால் காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

காதலர் தினத்தின் வரலாறு...

மக்கள் இந்த காதலர் தினத்தை ஒரு வாரக் காலம் கொண்டாடுகின்றனர். பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஸ் டேவில் தொடங்கி 14 ஆம் தேதி காதலர் தினம் வரை இது நீள்கிறது.

முதல் நாளான இன்று, பிப்ரவரி 7 ஆம் தேதி, ரோஸ் டே அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூவை பரிசாக அளித்து காதலை பறிமாற்றிக்கொள்வார்கள். காதலர்கள் மட்டுமல்ல, அன்பின் அடையாளமாக, நன்றியை வெளிப்படுத்தவும் யார் வேண்டுமானாலும் யாருக்கும் ரோஜா பூவை வழங்கலாம்.

ரோஸ் டே ஏன் கொண்டாடப்படுகிறது?

ரோமானிய புராணங்களின்படி, ரோஜாக்கள் அழகு மற்றும் காதலின் கடவுளாக கருதப்படும் வீனஸ் உடன் தொடர்புடையது. ரோஜாக்கள் அவற்றின் நிறம் மற்றும் வாசனைக் காரணமாக காதலுடன் ஒப்பிடப்பட்டது.

விக்டோரியர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக ரோஜாக்களை முன்வைப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்தியதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜா தினமாக அனுசரிக்கப்படுகிறது

இதில் ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

  • சிகப்பு நிற ரோஜா - காதல்

  • ஆரஞ்சு நிற ரோஜா - ஏக்கம், சில நேரங்களில் நட்பு

  • வெள்ளை நிற ரோஜா - தூய்மை

  • மஞ்சள் நிற ரோஜா - நட்பு

  • இளஞ்சிவப்பு ரோஜாக்கள் - பாராட்டு மற்றும் நன்றி

  • ப்ளூ ரோஸ் - மர்மம்

இந்த ரோஸ் டே கொண்டாடுவதற்கு பின்னால் இவ்வளவு சமாச்சாரங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் சிங்கிளாக இருக்கும் நம் சூப் பாய்ஸ் வழக்கம் போல மீம்கள் மூலமாக தங்கள் கதறல்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றில் சில

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?