army

 

Twitter

உலகம்

உக்ரைன் ரஷ்யா போர் - அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலை என்ன?

Antony Ajay R

இராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைனின் இடங்களை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை, இராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

உக்ரைனின் ராணுவ ஏவுகணை கட்டளை மையங்கள் மற்றும் கீவ்வில் உள்ள ராணுவ தலைமையகத்தைத் தாக்கியதாக உக்ரைனின் உள்ளூர் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன.

ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனிய நகரங்களைத் தாக்குவதை மறுத்துள்ளது. அது ராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் விமானப் படைகளை, “உயர் துல்லியமான ஆயுதங்களுடன்” குறி வைப்பதாகக் கூறியுள்ளது.

தாக்குதல்

அதிகாலை முதல் உக்ரைனின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து தாக்குதல் நடைபெற்று வந்தது.

உக்ரைனின் வடக்கு எல்லையில் இருக்கும் பெலார்ஸ் நீண்ட காலமாக ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டுள்ளது. பெலார்ஸ் மூலமாக ஊடுருவி உக்ரைனின் வடக்கு எல்லையில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது ரஷ்யா.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாகவும் சர்வதேச நாடுகளில் கண்டனங்களைத் திரட்டுவதற்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.


அதோடு, அமெரிக்க அதிபர் இன்று, ஜி7 தலைவர்களைச் சந்திப்பதாகவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் “ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும்” என்றும் கூறியவர், “யுக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.

தாக்குதல்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புக்களை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன.


ரஷ்ய ராணுவம் நாட்டின் கிழக்கிலுள்ள உக்ரைனிய படைப் பிரிவுகள் மீது தீவிர தாக்குதல்களைத் தொடங்கியதாக யுக்ரேனிய ஆயுதப் படைகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.


கீவ் அருகே உள்ள போரிஸ்பில் விமான நிலையம் மற்றும் பல விமான நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வான் வழித் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் விமானப் படை போராடி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 ரஷ்ய விமானங்களைச் சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் இராணுவம் கூறியிருக்கிறது.

கீவ் அருகே உள்ள போரிஸ்பில் விமான நிலையம் மற்றும் பல விமான நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வான் வழித் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் விமானப் படை போராடி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 ரஷ்ய விமானங்களைச் சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் இராணுவம் கூறியிருக்கிறது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது இராணுவப் போருடன் சைபர் தாக்குதலையும் மேற்கொண்டு உக்ரைன் அரசு இணைய தளங்களை முடக்கியுள்ளது ரஷ்யா. Data Erasing மால்வேர் மூலம் பல முக்கிய தகவல்களை அழித்துள்ளது.

இந்தியா-வின் ஐநா தூதர் திருமூர்த்தி இந்த தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் உலக அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

உக்ரைனில் இருக்கும் 20000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை அழைக்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் போரினால் திரும்பி வந்தது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவ டெல்லியில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1800118797 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது. இந்தியர்களின் நிலையை அறிய மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?