Jews Twitter
உலகம்

"ஹிட்லர் ஒரு யூதர்" - ரஷ்யா கூறுவது உண்மையா? - விரிவான தகவல்கள்

NewsSense Editorial Team

அடால்ஃப் ஹிட்லருக்கு யூத இரத்தம் இருந்தது என்று ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இத்தாலி டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்து, ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் வம்சாவளியில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளும் சதி கோட்பாட்டின் சமீபத்திய பதிப்பாகும்.

சென்ற வார இறுதியில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மேற்கண்ட கருத்துக்கள், இஸ்ரேலுடன் இராஜதந்திர தகராறைத் தூண்டிவிட்டன. இந்தப் பிரச்சினை 1920களில் இருந்த ஹிட்லரின் தந்தை வழி தாத்தாவின் அடையாளம் குறித்த வதந்திகளை மீண்டும் உசுப்பியிருக்கிறது.

ஹிட்லர்

வதந்திகள் முதலில் 1920களில் தொடங்கியது

ஹிட்லரின் தந்தை அலோயிஸ், ஒரு முறைகேடான குழந்தை என்று கூறப்படுகிறது. அவரது சொந்த தந்தை யார் என்று தெரியவில்லை, என்று ஆஸ்திரிய வரலாற்றாசிரியர் ரோமன் சாண்ட்க்ரூபர் கூறினார்.

கடந்த ஆண்டு ஹிட்லரின் தந்தை, அலோயிஸ் ஹிட்லரின் முதல் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட சாண்ட்கிரபர், அடால்ஃப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வரத் தொடங்கியபோது, ​​இத்தகைய வதந்திகள் முதன்முதலில் 1920களில் பரவ ஆரம்பித்தன என்று விளக்கினார்.

1933ல் நாஜித் தலைவரான ஹிட்லர் ஜெர்மனியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதால், இந்த கோட்பாடு ஹிட்லரின் அரசியல் போட்டியாளர்களால் ஊக்குவிக்கப்பட்டது.

ஹிட்லர் தனது சொந்த வம்சாவளியைப் பற்றித் தேடுமாறு கோரினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போரின் போது ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தை ஆட்சி செய்த நாஜி போர்க் குற்றவாளி ஹான்ஸ் ஃபிராங்கின் நினைவுக் குறிப்புகள் இந்தக் கதையை மீண்டும் பேசுபொருளாக்கின.


1946ம் ஆண்டு போர்க் குற்றங்களுக்காக அவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட அவரது நினைவுக் குறிப்புகளில், நாஜித் தலைவரின் வேண்டுகோளின்படி ஹிட்லரின் வம்சாவளியை ரகசியமாக ஆராய்ந்ததாக பிராங்க் கூறினார்.

"இது 1930களின் இறுதியிலிருந்திருக்க வேண்டும்" என்று அந்த நேரத்தில் ஜெர்மனியின் டெர் ஸ்பீகல் பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தியில் ஃபிராங்க் எழுதினார்.

இந்த விவகாரத்தில் மருமகன் ஒருவரால் தான் பிளாக்மெயில் செய்யப்படுவதாக ஹிட்லர் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.

ஹிட்லரின் பகுதி யூத பரம்பரை

ஹிட்லரின் தந்தைவழி பாட்டி மரியா அன்னா ஷிக்ல்க்ரூபர் 1837ல் ஹிட்லரின் தந்தை அலோயிஸைப் பெற்றெடுத்தார்.

அந்த நேரத்தில், ஆஸ்திரிய நகரமான கிராஸில், ஃபிராங்கன்பெர்கர் என்ற யூத குடும்பத்திற்கு மரியா சமையல்காரராக பணியமர்த்தப்பட்டதைக் கண்டுபிடித்ததாக ஃபிராங்க் கூறினார்.

அலோயிஸ் 14 வயதை அடையும் வரை மரியாவின் முதலாளி அவரை பராமரிக்கப் பணம் கொடுத்தார். மரியாவிற்கும் மரியாவின் குடும்பத்தினருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றம் இதை நிரூபித்ததாக பிராங்க் எழுதினார்.

சிறுவயதில் ஹிட்லர்

உண்மையில் ஹிட்லர் தனது பாட்டியும் அவளுடைய வருங்காலக் கணவனும் அந்த யூத மனிதனிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக அவனைத் தந்தை என்று நினைக்க அனுமதித்ததாக ஹிட்லர் தன்னிடம் கூறியதாக ஃபிராங்க் கூறினார்.

இவற்றுக்கு ‘ஆதாரம் இல்லை’ என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனாலும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

ஃபிராங்கின் கூற்றுகளை ஆதரிக்க உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சாண்ட்கிரபர் கூறுகிறார். ஒரு பிரச்சனை என்னவென்றால், பிரச்சினைக்குரிய இந்த நேரத்தில், யூதர்களுக்கு கிராஸ் நகரில் வாழ உரிமை இல்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

அப்படியானால் ஹிட்லரின் தாத்தா யார்? என்ற கேள்விக்கு இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்தித்தாளில் திங்களன்று வரலாற்றாசிரியர் ஆஃபர் அடெரெட் ஒரு பதிலை எழுதினார், "இது பதில் இல்லாத கேள்வி.” உண்மையில் இது யாருக்கும் தெரியாது.

ஹிட்லர்


சில நாஜிக்கள் இன்னும் இந்த கோட்பாட்டை "இரண்டாம் உலகப் போரில் தங்கள் தோல்விக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியாக" ஒளிபரப்பினர், என்றும் அவர் வாதிடுகிறார்.

"ஹிட்லர் யூதர்களைத் துன்புறுத்தியதன் விளைவாக, அவரது பகுதியளவு யூத வம்சாவளியைப் பற்றிய அவமான உணர்வுகள் ஏற்பட்டதாக மற்ற அறிக்கைகள் கூறுகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

"இருப்பினும், இவற்றில் எதற்கும் வரலாற்று ஆதாரம் இல்லை என்பதே இதன் அடிப்பகுதி."

லாவ்ரோவின் கருத்துக்களால் இஸ்ரேல் மகிழ்ச்சியடையவில்லை

இஸ்ரேலின் பிரதம மந்திரி நஃப்தலி பென்னட், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவின் கருத்துக்களை "பொய்" என்று கண்டனம் செய்தார். மேலும் வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவின் தூதரை விளக்கமளிக்க அழைத்துள்ளது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் திங்களன்று லாவ்ரோவின் கருத்துக்கள் "மன்னிக்க முடியாத மற்றும் மூர்க்கத்தனமான அறிக்கை மற்றும் ஒரு பயங்கரமான வரலாற்றுப் பிழை" என்று கண்டனம் செய்தார்.

"ஹோலோகாஸ் எனப்படும் யூத இனப்படுகொலை முகாமில் யூதர்கள் தங்களைத் தாங்களே கொலை செய்யவில்லை" என்று லாபிட் மேலும் கூறினார். இந்த வகையான கூற்று மிக மோசமான யூத எதிர்ப்பு ஆகும், என்றார் அவர்.

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு செய்து வரும் ரஷ்யா அந்த நாட்டை சின்னா பின்னப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது. அதை மறைப்பதற்கு உக்ரைன் நாடு புதிய நாஜிக்களால் ஆளப்படும் நாடு என்று சொல்கிறது.

உக்ரைன் அதிபரே ஒரு யூதர் எனும் போது உக்ரைன் எப்படி நாஜி நாடாகும் என்பதற்குத்தான் ரஷ்யா, ஹிட்லரே யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று ஒரு பச்சைப் பொய்யைப் பரப்புகிறது. போர் என்றால் மக்களை மட்டுமல்ல உண்மைகளையும் சேர்த்தே கொல்வார்கள் போலிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?