வைரமுத்து
வைரமுத்து Twitter
உலகம்

உக்ரைன் - ரஷ்யா : "2023 ரத்தக் கசிவோடு பிறக்கும்; போரை நிறுத்துங்கள்" - வைரமுத்து ட்வீட்

Priyadharshini R

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி உக்ரைன் - ரஷ்யா இடையே போர் இப்போது வரை நடைபெற்று வருகிறது.

உக்ரைனை விரைவில் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் முனைப்பில் இருக்கிறார் புதின். ரஷ்யாவுடன் இறுதி வரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி.

இதற்கிடையில் உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

crimea bridge

இந்த பயங்கர குண்டு வெடிப்பில் அந்த பாலம் சேதம் அடைந்தது. இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

"ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் 2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலிதானா: அசைவ உணவுகளை தடை செய்த உலகின் முதல் நகரம் பற்றி தெரியுமா?

குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

அம்பானி வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள்!

ஆந்திரப் பிரதேசம்: ஸ்ரீசைலம் கோயிலில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு!

பறவையின் எச்சம் நிறைந்த சூப்பை பருக ஆர்வம் காட்டும் சீன மக்கள் - ஏன் தெரியுமா?