Putin - Modi

 

Twitter

உலகம்

ரஷ்யா போர் : பெட்ரோல் அரசியல் - சிக்கலில் அமெரிக்கா, இந்தியாவுக்கு வாய்ப்பு

Govind


இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தின் மதிப்பு 1 பில்லியன்டாலரைத் தொட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்தியா தனது இறக்குமதியை அதிகப்படுத்துவதை விரும்புவதாக ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கடந்த வெள்ளியன்று கூறினார்.

உக்ரைன் போர் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், ரசியா மீது அதிகரித்து வரும் நிலையில், ரசியாவின்பொருளாதாரமும், எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுவருகிறது. அதனால் ரசியா தனது நெருக்கடியைத் தவிர்க்க இந்தியாவின் முதலீட்டை அதிகம் வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்திருக்கிறது.

மார்ச் 11 அன்று ரசிய துணை பிரதமர் இந்தியாவின்பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் பேசினார். அப்போது அவர் ரசியாவில் எண்ணெய் எரிவாயுத் துறையில் முதலீடு செய்யுமாறு இந்தியாவை வரவேற்றார்.

Joe Biden

போர் காலத்திய பொருளாதாரத் தடை நிலவும் நேரத்தில் இந்தியா தனது 1 பில்லியின் டாலர் இறக்குமதியை அதிகப்படுத்த நல்ல வாய்ப்பிருக்கிறது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய துணை பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதை இந்தியாவில் இருக்கும் ரசியதூதரகம் ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. மேலும்ரசியாவின் எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை நிலைய வலைப்பின்னலை இந்தியாவில் விரிவுபடுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகவும் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக்கூறியிருக்கிறார்.

தற்போதைய நிலையில் ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 0.2% மட்டும்தான். மேலும் ரஷ்யாவின் பொதுத்துறையான கேஸ்ப்ரோம் நிறுவனத்துடன் இந்தியா2018 ஆம் ஆண்டில் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதன்படி இந்தியா வருடந்தோறும் 2.5 மில்லியன் டன் எல்என்ஜி (இயற்கை வாயுவின் நீர்ம வடிவம்) வாயுவை கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

எண்ணெய்க்கு அப்பாற்பட்டு நிலக்கரியையும்ரசியாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் நிலக்கரியில் 1.3% ரசியாவில்இருந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா 1.8 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.

மோடி மற்றும் புடின்

எண்ணெய் தேவைக்காகச் சவுதி அரேபியாவிடம் செல்லும் அமெரிக்கா

உக்ரைன் மீதான ரசிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யாவின் எண்ணெய்யைத் தடை செய்த நிலையில் அமெரிக்கா எண்ணெய் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா சவுதி அரேபியாவை அணுகினாலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் இளவரசர் அபுதாபி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைப்பேசியில் பேசுவதற்கு மறுத்து விட்டனர்.

இந்தக் கோரிக்கையை இந்தியா ஏற்றால் அமெரிக்காவின் பகையைச் சம்பாதிக்க நேரிடும். ஏற்காவிட்டால் இந்தியாவிற்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்காது. மோடி அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?

இப்படி சவுதி இளவரசர்கள் அமெரிக்க அதிபருடன் பேச மறுத்ததற்குக் காரணம், அமெரிக்கா, மத்திய கிழக்கில் பின்பற்றி வரும் வெளியுறவுக் கொள்கைகளே காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தக் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பணவீக்கத்தின் நிச்சயமற்ற தன்மையால் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் பங்குகளின் விலை சரிந்தன. மேலும் அமெரிக்காவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 5.7% உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் விலையும் உயர்ந்திருக்கிறது.

உக்ரைன் போரால் ரசியா மீது பொருளாதாரத் தடை போட்டதால் அமெரிக்கா சிக்கலைச் சந்தித்து வரும் நிலையில் சவுதியிடமிருந்து எண்ணெயே பெறுவதில் பிரச்சினை. பொருளாதாரத் தடை காரணமாக முன்பைவிட அதிகம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குமாறு இந்தியாவை ரசியா கோருகிறது. இந்தக் கோரிக்கையை இந்தியா ஏற்றால் அமெரிக்காவின் பகையைச் சம்பாதிக்க நேரிடும். ஏற்காவிட்டால் இந்தியாவிற்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்காது. மோடி அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?