ரஷ்யா : வாக்னர் தலைவர் கொலை - புதினின் சூழ்ச்சிதான் காரணமா? - விரிவான தகவல்கள் Twitter
உலகம்

ரஷ்யா : வாக்னர் தலைவர் கொலை - புதினின் சூழ்ச்சிதான் காரணமா? - விரிவான தகவல்கள்

வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜினின் இறப்பை உறுதியாக வெளிப்படுத்தியது ரஷ்ய அதிபர் புதினின் இரங்கல் பதிவு தான். சரியாக பிரிகோஜின் புதினுக்கு எதிராக திரும்பிய இரண்டு மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

Antony Ajay R

ரஷ்யாவில் புதினுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் கலகத்தை ஏற்படுத்திய வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் இறந்துவிட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

கடந்த புதன் மாலையில் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளானது. ஆனால் அவர் இறந்துவிட்டாரா என்பதில் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜினின் இறப்பை உறுதியாக வெளிப்படுத்தியது ரஷ்ய அதிபர் புதினின் இரங்கல் பதிவு தான். சரியாக பிரிகோஜின் புதினுக்கு எதிராக திரும்பிய இரண்டு மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "இந்த சம்பவத்தில் நாங்கள் குறுக்கிட ஒன்றுமே இல்லை. இது யாருக்கு தொடர்புடையது என்பது எல்லாருக்குமே தெரியும் என நினைக்கிறன்" என்று புதினை மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து பேசும் போது, "என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால் புதினுக்கு மறைவாக எதுவும் நடக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.

ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றனர். ரஷ்யாவில் புதினுக்கு ஆதரவான சிலரும் கூட இது ஒரு படுகொலையாக இருக்கலாம் என்கின்றனர்.

உலகின் சந்தேகங்களை அதிகப்படுத்தும் படியான சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.

புதன் கிழமை விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்களின் பெயர் பட்டியலை ரஷ்ய விமானப்போக்குவரத்து அதிகாரி வெளியிட்டார். அதில் வாக்னர் கூலிப்படை தொடங்கியது முதல் பிரிகோஜினின் வலது கரமாக செயல்பட்டுவந்த டிமித்ரி உட்கின் பெயரும் இருந்தது.

மேலும் வாக்னர் கூலிப்படையின் 9 உயர்மட்ட குழுத்தலைவர்கள் பெயரும் இருந்துள்ளது. வாக்னர் குழு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, மாலி, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றது.



உலகளாவிய வலைப்பின்னலை சிதைக்க புதின் விரும்பவில்லை என சிலர் கூறுகின்றனர். ஒரு அறிக்கையின் படி, புதன் கிழமையே லிபியாவுக்கு சென்ற ஒரு ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் யுனஸ்-பெக் எவ்குரோவ், வான்கனர் படையினர் தொடர்ந்து அவர்களது நாட்டில் இருப்பர் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாக்னர் செயல்பட்ட எல்லா நாடுகளிலும் ரஷ்யாவின் மேலாதிக்கம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். எவ்ஜெனி பிரிகோஜனுக்கு பதிலாக வேறொரு தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?