Russia Yakutsk : -62°C இறங்கிய உலகின் குளிரான நகரம் - உறைந்துவிடும் அச்சத்தில் மக்கள்! Twitter
உலகம்

Russia Yakutsk : -62°C இறங்கிய உலகின் குளிரான நகரம் - உறைந்துவிடும் அச்சத்தில் மக்கள்!

கடந்த நவம்பர் மாதம் முதல் பெரும் குளிர்காலம் தொடங்கியது. பிப்ரவரி வரை இந்த கடுங்குளிர் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஜனவரியிலேயே நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் -40 டிகிரி வரை தாங்கிய மக்கள் இப்போது -62 டிகிரி வெப்பநிலையில் மரண பயத்துடன் இருக்கின்றனர்.

Antony Ajay R

உலகிலேயே மிக குளிரான மக்கள் வாழும் நகரமென்று கருதப்படும் ரஷ்யா நாட்டிலுள்ள யாகுட்ஸ்க் நகரில் இப்போது -62.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

இது ஃபாரஹீட் அளவில் -80.9 டிகிரி ஆகும். கடந்த 20 ஆண்டுகள் பதிவானதில் இதுவே மிகவும் குளிரான வெப்பநிலை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் -40 டிகிரி வரை தாங்கிய மக்கள் இப்போது -62 டிகிரி வெப்பநிலையில் மரண பயத்துடன் இருக்கின்றனர்.

இந்த நகரத்தின் மிகக் குறைந்த வெப்ப நிலை 1987 பிப்ரவரியில் -89 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகப் பதிவாகியிருக்கிறது.

மாஸ்கோவிலிருந்து 5000 கிலோ மீட்டர் கிழக்கில் இருக்கும் யாகுட்ஸ்க் வெப்பநிலை பெரும்பாலும் -40 டிகிரிக்கு குறைவாகவே இருந்து வருகிறது.

நம் ஃப்ரிட்ஜின் வெப்பநிலை சுமார் 4 டிகிரி செல்சியஸ் தான், ஃப்ரீசர் கூட -18 டிகிரி தான் இருக்கும். யாகுட்ஸ்கின் குளிர் என்பது நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவு!

கடந்த நவம்பர் மாதம் முதல் பெரும் குளிர்காலம் தொடங்கியது. பிப்ரவரி வரை இந்த கடுங்குளிர் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஜனவரியிலேயே நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கிறது.

இந்த குளிரைத் தாக்குபிடிக்க அதற்கு ஏற்ற கடினமான உடைகளை அணிவது அவசியமானதாக இருக்கிறது.

யாகுட்ஸ்கில் வசிக்கும் ஒரு சராசரி மனிதர் இரண்டு கையுறைகள், இரண்டு ஜாக்கெட்கள், வெப்பமாக வைத்திருக்கக்கூடிய காலணிகளை அணிந்துள்ளனர்.

கால்கள் குளிரத் தொடங்கினால் மொத்த உடலும் குளிரில் நடுங்கத் தொடங்கிவிடும். தலையை பனியிலிருந்து மறைக்க வேண்டியதும் மிக அவசியம்.

இந்த பனியில் உறைந்து சாகாமல் இருக்க ஒரே வழி தான் இருக்கிறது. உடலை சூடாக வைத்திருக்கும் உடைகளை அணிவது தான் அது. வேறெந்த மாய மந்திரமும் இந்த மனிதர்களிடம் இல்லை.

இங்கு உறைந்த மீன்களை எந்த ஃப்ரிட்ஜ் வசதியும் இல்லாமல் விற்கின்றனர்.

இங்கிருக்கும் மக்களை விட ஒரு சென்டி மீட்டர் நீளமான மூக்கு இருந்தால் கூட நம் கதை படுமோசமாகிவிடும்.

காலைக் கடனை கழிப்பது முதல் மூச்சு விடுவது வரை எல்லாமே இவர்களுக்கு சவாலானதாக உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?