Ukraine vs Russia: ஓராண்டில் நடந்த முக்கிய தாக்குதல்கள் என்னென்ன?  twitter
உலகம்

Ukraine vs Russia: ஓராண்டில் நடந்த முக்கிய தாக்குதல்கள் என்னென்ன?

இந்த ஓராண்டு காலத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் நடத்திய முக்கிய தாக்குதல்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

Keerthanaa R

`உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நாளை, பிப்ரவரி 24 ஆம் தேதியோடு ஓராண்டு முடிவடைகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின், கிழக்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள டானெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கை சுதந்திர நாடுகளாக அறிவித்தார்.

இதனை அறிவித்து சிறிது நேரத்திலேயே, இவ்விரண்டு நாடுகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக கிழக்கு உக்ரைன் மீது சிறப்பு ராணுவ ஆப்பரேஷன் ஒன்றினை நடத்தப்போவதாகவும் புதின் அறிவித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் கீவ் நகரத்தில் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கை இது எனவும் புதின் பேசியிருந்தார்.

அன்று தொடங்கிய ரஷ்ய உக்ரைன் போர், நாளையுடன் ஓராண்டை நிறைவுசெய்கிறது.

இந்த ஓராண்டு காலத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் நடத்திய முக்கிய தாக்குதல்களின் தொகுப்பை இங்கு காணலாம்

பிப்ரவரி:

பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைன் மீது நான்கு திசைகளிலிருந்து ரஷ்ய ராணுவம் படையெடுத்தது. வடக்கு, வடகிழக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து, உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி இந்த படைகள் நகர்ந்தன.

  • வடக்கு பகுதி - ரஷ்ய படைகள் பெலாரஸ் மூலம் உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை அடைந்தன.

  • வடகிழக்கு - ரஷ்யா வழியாக மேற்கு திசையிலிருந்து கீவ் நோக்கி நகர்ந்தன.

  • கிழக்கு - டான்பாஸ் வழியாக ரஷ்ய படைகள் கார்கீவ் நகரை நோக்கி படையெடுத்தன.

  • தெற்கு - ரஷ்யப் படைகள் கிரிமியாவிலிருந்து மேற்கில் ஒடேசா, வடக்கே சபோரிஜியா மற்றும் கிழக்கில் மரியுபோல் நோக்கி நகர்ந்தன..

மார்ச்

உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சனை கைப்பற்றுகிறது ரஷ்யா. கெர்சனை கைப்பற்றியதை தொடர்ந்து, சபோரிஜியாவின் பெரும் பகுதியும் கைப்பற்றப்படுகிறது. இதில் ஐரோப்பியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமும் அடக்கம்.

இத்தனை நாட்களாக பொதுமக்களை தாக்காமல் இருந்த ரஷ்ய படைகள், முதன் முதலில் மார்ச் மாதம் தான் மரியுபோல் நகரில் உள்ள ஒரு திரையரங்கை தாக்குகிறது. அங்கு தஞ்சம் புகுந்திருந்த நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள் அந்த தாக்குதலில் பலியாகினர்.

ஏப்ரல்

உக்ரைனின் கிழக்கு நகரமான க்ரமாடார்ஸ்க்கில் அமைந்திருக்கும் ரயில் நிலையம் தாக்கப்படுகிறது. இதில் சுமார் 52 உக்ரைன் மக்கள் கொல்லப்படுகின்றனர். அசோவ் கடலில் மரியுபோல் நகரை கைப்பற்ற போர் வலுபெறுகிறது.

ஏப்ரல் 13 ஆம் தேதி உக்ரைன் ஏவுகணைகள் ரஷ்யாவின் வரலாற்று சிறப்புமிக்க ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை தாக்கி, மறுநாள் அது கடலில் மூழ்கியது.

மே

கிட்ட தட்ட மூன்று மாதங்கள் தாக்குபிடித்த பிறகு, மரியுபோலின் மாபெறும் கோட்டையாக கருதப்பட்ட அசோவ்ஸ்டல் ஸ்டீல் மில்லினை ரஷ்ய படைகளிடம் ஒப்படைக்கிறது உக்ரைன்.

மே 18 ஆம் தேதி ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நாடோ உடன் இணைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறது.

ஜூன்

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் HIMARS ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட, மேற்கு உலக நாடுகளின் ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஜூன் 30ல் ரஷ்ய படைகள் பாம்பு தீவிலிருந்து பின்வாங்குகின்றன.

ஜூலை:

ஜூலை 29 அன்று, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒலெனிவ்கா பகுதியை ஏவுகணை தாக்குகிறது. மரியுபோலில் கைப்பற்றப்பட்ட உக்ரைன் வீரர்கள் சிறைவைக்கப்படிருந்த பகுதி அது. சுமார் 53 பேர் இதில் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட்:

க்ரிமியா நகரிலுள்ள விமான தளம் தாக்கப்படுகிறது. ஒருவாரத்திற்கு பிறகு, அங்கு அமைந்துள்ள துணை மின் நிலையம், வெடிமருந்து கிடங்குகள் தாக்கப்படுகின்றன.

பின்னர் உக்ரைனின் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர், க்ரிமியா மீது தாக்குதல் நடத்தியது கீவ் படைகள் என்பதை ஒப்புக்கொண்டார்.

செப்டம்பர்:

பல மாதங்களாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைனின் வடகிழக்கு பகுதியான கார்கீவ் மீது உக்ரைன் மறு தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு பிறகு முக்கிய பகுதிகளை கைப்பற்றியிருந்த ரஷ்ய படைகள் பின்வாங்க தொடங்கின.

தொடர்ந்து புதின் ரஷ்ய படைகளில் சேர 300,000 பேருக்கு அழைப்பு விடுக்கிறார். இதனால் நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் (ஆண்கள்) படைகளில் சேர்க்கப்படாமல் இருக்க அருகில் உள்ள நாடுகளுக்கு தப்பி சென்றனர்.

அதே சமயத்தில் உக்ரைனின் டானெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், சபோரிஜியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கவேண்டுமா என்ற சட்டவிரோதமான வாக்கெடுப்பை நடத்தினார். இதனை உக்ரைன் மற்றும் மேற்கு பகுதிகள் நிராகரித்துவிட்டன.

அக்டோபர்

க்ரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. இதற்கான பழியை புதின் உக்ரைன் மீது சுமத்தினார். இந்த பாலம் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் அணுமின் நிலையங்கள், முக்கிய கட்டிடங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை தாக்கியது.

நவம்பர்

உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதல்களின் விளைவாக கெர்சன் பகுதியில் இருந்த ரஷ்ய படைகள் பின்வாங்கின.

டிசம்பர்

ரஷ்யாவின் இரண்டு தளங்களை குறிவைக்க உக்ரைன் டிரோன்களை பயன்படுத்தியாக ரஷ்யா குற்றம்சாட்டுகிறது. இதே மாதத்தில் உக்ரைன் ரஷ்யா மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது.

ஜனவரி:

புத்தாண்டு பிறந்த ஒரு சில நிமிடங்களிலேயே உக்ரைன் மகீவ்கா நகரின் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலின் காரணமாக சுமார் 89 ரஷ்ய படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை உண்மையில் நூற்றுக்கணக்கில் இருந்தன என உக்ரைன் தரப்பு கூறுகிறது.

ஜனவரி 14ல் உக்ரைனின் ஆற்றல் உற்பத்தி ஆலயங்கள் மீது ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் ஒரு ஏவுகணை டினிப்ரோ பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது, 45 பேர் இதில் மரணித்தனர்.

பிப்ரவரி:

இம்மாதத்தில் இதுவரை எந்த விதமான தாக்குதலும் நடைபெறவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?