Salt Bae shares clip of 24 karat gold-coated steak  Twitter
உலகம்

Salt Bae : 1.1 கோடி ரூபாயில் பில் - சர்ச்சைக்கு கூலாக பதிலளித்த சால்ட் பே

இந்த பில்லை பார்த்ததும், சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். பட்டினியால் வாடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளிக்க இந்த பணத்தை செலவழித்திருக்கலாம் என்று கூறினார்.

Priyadharshini R

Nusret என்பவர் சால்ட் பே என்ற புனைப்பெயரால் அழைக்கபடுகிறார். 2017 ஆம் ஆண்டில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை வித்தியாசமாக தூவுவதன் மூலம் இணையத்தில் புகழ் பெற்றார் சால்ட் பே.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சால்ட் பே, 2010 இல் துருக்கியில் தனது முதல் உணவகத்தைத் திறப்பதற்கு முன்பு, வரை பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தார்.

ஆனால் தற்போது துருக்கியில் ஒன்பது உணவகங்கள் மற்றும் அமெரிக்காவில் ஏழு என மிகவும் புகழ் பெற்றவராக உள்ளார்.

கோல்டன் பர்கர், கோல்டன் ஜெயண்ட் டோமாஹாக் ஸ்டீக், கோல்டன் ஜெயண்ட் ஸ்ட்ரிப்ளோயின் மற்றும் கோல்டன் கஃபேஸ் ஆகியவை உணவகத்தின் சிறப்புகளாகும்.

ஆனால் தற்போது அவரது நட்சத்திர உணவகத்தின் பில் அவரது Instagram பின்தொடர்பவர்களை கோபப்படுத்தியுள்ளது.

அங்கு உணவருந்துபவர்கள் மதுவிற்கு மட்டும் கிட்டத்தட்ட £115,000 மற்றும் மாமிசத்திற்கு £1,000 க்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

அதாவது இந்திய மதிப்பில் 1.11 கோடியாகும். சால்ட் பேயின் துபாய் உணவகத்தில் உணவுக்காக 14 விருந்தினர்கள் தலா £10,000 செலவழித்துள்ளனர்.

இந்த பில்லை பார்த்ததும், சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். பட்டினியால் வாடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளிக்க இந்த பணத்தை செலவழித்திருக்கலாம் என்று கூறினார்.

இனி சால்ட் பேவை ஆதரிக்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் சால்ட் பே, அவர் மீது வைக்கும் விமர்சனங்களை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்க இலைகளால் மூடப்பட்ட இறைச்சியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் சால்ட் பே பில் குறித்து "தரம் ஒருபோதும் விலை உயர்ந்ததல்ல" என்ற தலைப்புடன் வெளியிட்டார். உணவு நன்றாக இருந்தால் எவ்வளவு வேண்டுமாலும் விலை கொடுக்கலாம் என்றார், இது அவரது 49 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை கோபப்படுத்தியது.

”நான் ஒரு பெரிய ரசிகனாக இருந்தேன், ஆனால் இதைப் பார்த்தபோது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அடிப்படை உணவு கிடைக்காமல் மக்கள் தினமும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?