பைடன் செளதி பயணம் Twitter
உலகம்

பைடன் செளதி பயணம்: அரபு இளவரசருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய அமெரிக்க அதிபரின் ஒற்றைக் கேள்வி

தொடக்கத்தில் இருந்தே ஜமால் கசோக்ஜி படுகொலையை கடுமையாக விமர்சித்து வருகிறார் பைடன். இந்த படுகொலைக்கும் அரபு இளவரசருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு துறை குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனால், இதை செளதி மறுத்து வருகிறது.

NewsSense Editorial Team

செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் ஜமால் கஷோக்ஜி கொலை குறித்து பேசியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பயணம்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை முடித்து பைடன் நேற்று சவுதி அரேபியா புறப்பட்டார். இந்த பயணத்தில் ஜமால் படுகொலை தொடர்பாக செளதி பட்டத்து இளவரசரிடம் பேசியதாக தெரிகிறது.

தொடக்கத்தில் இருந்தே ஜமால் கசோக்ஜி படுகொலையை கடுமையாக விமர்சித்து வருகிறார் பைடன். இந்த படுகொலைக்கும் அரபு இளவரசருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு துறை குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனால், இதை செளதி மறுத்து வருகிறது.

முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செளதியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த பைடன் தற்போது அந்நாட்டுடனான உறவை மேம்படுத்த அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜமால் படுகொலை

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமால் கஷோக்ஜி கொலை அமெரிக்காவிற்கு மிக முக்கியமான விஷயம் என்றுதெரிவித்தார் ஜோ பைடன்.

ஜமால் கஷோக்ஜி வாசிங்டன் போஸ்ட்டில் தொடர்ந்து அரபு குடும்பத்தை விமர்சித்து எழுதி வந்தார். இப்படியான சூழலில் 2018ஆம் ஆண்டு அவர் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

ஜோ பைடன், “ ஜமால் கொலை குறித்து அமெரிக்க கேள்வி எழுப்பி இருந்தாலும், பிற விஷயங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.

துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி 2018ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் செளதி அரசை விமர்சித்தது.

இந்த கொலையை அனுமதித்ததாக செளதி இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுத் துறை அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

இந்நிலையில் பைடனின் தற்போதைய இந்த பயணம் செளதி அரசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது என பலர் விமர்சித்துள்ளனர்.

ஜமால் கொலை விவகாரத்தில் செளதியை கடுமையாக விமர்சித்த துருக்கி அதிபர் எர்துவானும் அண்மையில் செளதிக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

செளதி அரசின் நிலைப்பாடு

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை செளதி இளவரசர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்த படுகொலைக்கும் அரசுக்கும் தொடர்ப்பு இல்லை. சில முரட்டுத்தனமான செளதி உளவாளிகளால் நடந்த சம்பவம் என செளதியின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு நீண்ட விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இப்படியான சூழலில் செளதி சென்ற அமெரிக்க அதிபர் பைடன், “நான் கஷோக்ஜியின் கொலை குறித்து பேசினேன். அந்த சமயத்தில் நான் என்ன நினைத்தேன் என்றும், தற்போது என்ன நினைக்கிறேன் என்றும் தெரிவித்தேன்,” என்று கூறி உள்ளார்.

“ஒரு அமெரிக்க அதிபராக மனித உரிமை தொடர்பான ஒரு விஷயத்தில் என்னால் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் எங்களின் கொள்கைகளின் பக்கம் எப்போதும் உறுதியாக நிற்போம்,” என்றும் கூறினார்.

தனிப்பட்ட முறையில் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என இளவரசர் சல்மான் பைடனிடம் தெரிவித்ததாக ஏபி செய்தி முகமை கூறுகிறது.

.

மிஸ்டர் பைடன்… நீங்கள் செய்தது நியாயமா?

பைடனின் இந்த செயலை கஷோக்ஜியை திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரின் காதலி ஹாட்டிஸ் சென்கிஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பைடனும் சல்மானும் நட்புபாராட்டும் படத்தை பகிர்ந்த அவர், “எனது நேசத்துக்கு உரியவரின் கொலைக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிப்பீர்கள் என்று நீங்கள் சொன்னது இதுதானா? முகமது பின் சல்மானின் அடுத்த பலியின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது,” என கஷோக்ஜி இந்நேரம் நினைத்திருப்பார் என ட்வீட் செய்துள்ளார்.

விமர்சித்த வாஷிங்டன் போஸ்ட்

ஜமால் கஷோக்ஜி பத்தி எழுத்தாளராக இருந்த வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும் பைடன் சல்மானை சந்திப்பை விமர்சித்துள்ளது.

இது ‘அவமானகரமானது’ என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.

ஆயில் அரசியல்

கஷோக்ஜியின் கொலையை தவிர்த்து, எண்ணெய் வரத்தகம் குறித்தும் பைடனும் இளவரசர் சல்மானும் பேசியதாக தெரிகிறது.

“பெரும் எண்ணெய் உற்பத்தியாளரான செளதி, அடுத்தடுத்த வாரங்களில் எரிபொருள் சந்தையை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டதாக பைடன் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?