ராய்யனா பர்னாவி  ட்விட்டர்
உலகம்

சவுதி அரேபியா: "மாற்றம்" விண்ணில் கால் பதிக்கும் முதல் சவுதி வீராங்கனை

தங்கள் தேசத்தின் மீது இருக்கும் பழமைவாத பிம்பத்தை மாற்றியமைக்கும் மற்றொரு முயற்சியாக, சவுதி வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை விண்ணுக்கு அனுப்பவுள்ளது.

Keerthanaa R

சவுதி அரேபியா தனது முதல் விண்வெளி வீராங்கனையை விண்ணுக்கு அனுப்பிவைக்கவுள்ளது. இவ்வாண்டின் பிற்பகுதியில் ராய்யனா பர்னாவி அவரது விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தேசத்தின் மீது இருக்கும் பழமைவாத பிம்பத்தை மாற்றும் முயற்சியாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.

அரபு தேசமான சவுதியில், பெண் உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து சில மாற்றங்களை கடந்த 2017ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து ஏற்படுத்தி வருகிறார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.

21 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் பாஸ்போர்ட் பெறவும், வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலைக்குப் போகும் பெண்களின் சதவிகிதம் 17இல் இருந்து 37 ஆக உயர்ந்திருக்கிறது என மிண்ட் தளம் தெரிவிக்கிறது. இருப்பினும், திருமணம், குழந்தை பேறு, விவாகரத்து போன்ற விஷயங்களில் இன்னும் பழமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது எண்ணெய் தேசம்.

ராய்யனா பர்னாவி - அலி அல் கர்னி

இந்நிலையில், தங்கள் தேசத்தின் மீது இருக்கும் இந்த பிம்பத்தை மாற்றியமைக்கும் மற்றொரு முயற்சியாக, சவுதி வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை விண்ணுக்கு அனுப்பவுள்ளது.

ராய்யனா பர்னாவி என்ற விண்வெளி வீராங்கனை, அலி அல் கர்னி என்ற விண்வெளி வீரருடன் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு மிஷனுக்காக பயணிப்பார் என்று சவுதி செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டிருக்கிறது.

இவர்கள் ஏ எக்ஸ் 2 விண்வெளி மிஷனில் இணையவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து இந்த அணி புறப்படவுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் முதன்முறையாக விண்ணுக்கு தங்கள் தேசத்து வீரரை அனுப்பிய முதல் அரபு தேசமானது. ஹஸ்ஸா அல் மன்சூரி என்ற விண்வெளி வீரர் 8 நாட்கள் ஐஎஸ்எஸ் -ல் பணியாற்றினார். யூ ஏ இ ஐ தொடர்ந்து தற்போது சவுதியும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.

ஹஸ்ஸா அல் மன்சூரி - யூ ஏ இ

இது சவுதியின் முதல் விண்வெளி பயணம் இல்லை. 1985ல் சவுதி இளவரசரும் விமானப்படை விமானியுமான சுல்தான் பின் சல்மான் பி அப்துலசீஸ் அமெரிக்காவின் விண்வெளி மிஷன் ஒன்றில் பணியாற்றினார்.

ஸ்பேஸுக்கு பயணித்த முதல் அரபு இஸ்லாமியர் இவர் தான். தவிர, 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் விண்வெளி திட்டங்களை வகுத்தும் இருக்கிறது. தற்போதைய இளவரசரின் விஷன் 2030ன் அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மற்றொரு விண்வெளி வீரரான சுல்தான் அல் நெயாடி இந்த மாதம் மற்றொரு மிஷனுக்காக விண் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 41 வயதாகும் நெயாடி சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மிஷனில் பணியாற்றவுள்ளார். 6 மாதங்கள் இந்த மிஷன் நடைபெறவுள்ள நிலையில், விண்வெளியில் ஆறு மாதங்கள் செலவழித்த முதல் அரபு விண்வெளி வீரர் ஆவார் நெயாடி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?