Aramco Twitter
உலகம்

சவூதி அரேபியா அராம்கோ : அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சிய அரபு எண்ணெய் நிறுவனம்

NewsSense Editorial Team

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ சவுதி அரேபியாவில் உள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு இலாபம் 82% உயர்ந்து 39.5 பில்லியன் டாலர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது, இது உலகின் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் அராம்கோ இன்னொரு சாதனையையும் படைத்துள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக மாறியிருக்கிறது அராம்கோ. இந்நிறுவனம் 8.8 பில்லியன் டாலர் டிவிடண்ட் மற்றும் 4பில்லியன் டாலர் மதிப்புள்ள போனஸ் பங்குகளை அதன் முதலீட்டாளர்களுக்கு அல்லது பங்குதாரர்களுக்கு வழங்குவதாகக் கூறியது. அராம்கோ நிறுவனம் எதிர்பார்த்ததை விடத் தீவிரமாகச் செயல்பட்டதே இந்த இலாபத்திற்குக் காரணம்.

உலகெங்கிலும் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் உக்ரைன் மீது படையெடுத்த பிறகு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் உலகில் பெரும் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. போரின் காரணமாகப் பிரிட்டனில் உள்ள பிபி BP மற்றும் ஷெல் Shell போன்ற கச்சா எண்ணெய் நிறுவனங்களும் கடந்த ஒரு பத்தாண்டில் இல்லாத பெரும் இலாபத்தை ஈட்டியிருக்கின்றன.

Aramco

ஆசியாவில் எரிவாயுவுக்கான தேவை உயர்ந்துள்ளது. மற்றும் குளிர்காலம் காரணமாகவும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகிறது. தேவைக்கு ஏற்ப அளிக்க முடியாததால் கச்சா எண்ணெய்யின் விநியோகம் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு வடக்கு அக்கோளத்தில் வெப்பநிலை குறைந்ததால் எண்ணெய் நிறுவனப் பங்குகளின் மதிப்பு குறைந்தன. ஆனால் ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 70% அதிகரித்து 107.91 டாலராக ஆக உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் போட்டிருந்த முதலீடுகளைத் திரும்பப் பெற்ற போதிலும் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் லாபம் உயர்ந்துள்ளது.

BP எனப்படும் பிரிட்டீஷ் பெட்ரோலியத்தின் இலாபம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 6.2பில்லியன் டாலராக அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் உள்ள மற்றொரு நிறுவனமான ஷெல் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 9.1பில்லியன் டாலர் இலாபத்தை ஈட்டியிருக்கிறது. இது பெரும் சாதனையாகும்.

கச்சா எண்ணெய்

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் குழுவான ஓபெக்+ OPEC+, இந்த மாதம் அதன் மாதாந்திர எண்ணெய் உற்பத்தி இலக்கில் மிதமான அதிகரிப்புக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் ரஷ்யா உற்பத்தி செய்யும் 7 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய்யை மற்ற நாடுகளின் உற்பத்தியாளர்கள் பதிலீடு செய்வது சாத்தியமில்லை என்று கூறியுள்ளன.

மற்ற எண்ணெய் நிறுவனங்களோடு ஒப்பிடும் போது சவுதி அராம்கோவின் உற்பத்திச் செலவு மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் அதன் எண்ணெய்யின் பெரும்பகுதி கரையோரத்தில் அல்லது ஆழமற்ற நீரில் எளிதில் எடுக்கக் கூடிய எண்ணெய் வயல்களில் உள்ளது. இதனாலும் அராம்கோவின் லாபம் அதிகரிக்கிறது. அராம்கோ நிறுவனம் சவுதி அரசாங்கத்திற்குச் சொந்தமானது.

அராம்கோவின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான அமீன் எச் நசீர், “அதிகரிக்கும் எரிபொருள் தேவை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நம்பகமான மற்றும் மலிவு எரிசக்திக்கான உலகத் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவனம் உதவுகிறது" என்றார்.

Ameen Naseer

"எரிசக்தி பாதுகாப்பு இன்றியமையாதது. மற்றும் நாங்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்கிறோம். எதிர்பார்க்கப்படும் உலகின் தேவையைப் பூர்த்தி செய்ய எங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் திறனை விரிவுபடுத்துகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

"புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ஆராய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். மேலும் காலநிலை மாற்றத்தைக் கணக்கில் கொண்டு தூய்மையான போக்குவரத்து தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா மதிப்பு சங்கிலிகளை நிறுவுவது வரை, நாங்கள் எப்போதும் செய்யக்கூடிய நேர்மறையான பங்களிப்பைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் தற்போதைய உலகளாவிய ஆற்றல் மாற்றத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று அவர் கூறினார்.

உக்ரைன் போரினால் உலக எரிபொருள் விலை உயர்ந்து அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உலக அளவிலான எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை வைத்து பெரும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. இந்தியாவில் மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட உக்ரைன் போருக்குப் பிறகு பெரும் இலாபம் ஈட்டியிருப்பதாக அல்ஜசிரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?