340 டன் எடை கொண்ட உலக வரலாற்றிலேயே கனமான உயிரினம்! ஆய்வாளர்கள் கண்டறிந்தது என்ன?
340 டன் எடை கொண்ட உலக வரலாற்றிலேயே கனமான உயிரினம்! ஆய்வாளர்கள் கண்டறிந்தது என்ன? Twitter
உலகம்

340 டன் எடை கொண்ட உலக வரலாற்றிலேயே கனமான உயிரினம்! ஆய்வாளர்கள் கண்டறிந்தது என்ன?

Antony Ajay R

பெருவில் விஞ்ஞானிகள் பிரம்மாண்டமான திமிங்கலத்தின் புதைப்படிமத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த வகை திமிங்கலங்கள் உலகில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கின்றன.

ஆய்வாளர்கள் கூறுவதன்படி இதுவரை உலகில் இருந்ததிலேயே இதுதான் மிகவும் எடை மிகுந்த உயிரினமாக இருந்திருக்கும் என்கின்றனர்.

தெற்கு பெருவில் உள்ளா ஐகா பள்ளத்தாக்கில் இந்த ராட்சத உயிரினத்தின் இடுப்பு எலும்பு, 13 முதுகெலும்புகள் மற்றும் நான்கு விளா எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் முதுகெலும்பு ஒன்று மட்டும் 100 கிலோ இருக்கும் என்கின்றனர். 1.4 மீட்டர் நீளமான விளா எழும்புகள் கிடைத்திருக்கின்றன. இது 39 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் என்கின்றனர்.

இது என்ன உயிரினம் எனத் தெரியவில்லை. திமிங்கல வகையாக இருக்கலாம் எனக் கூறும் ஆய்வாளர்கள் பெருசெட்டஸ் கொலோசஸ் ( Perucetus Colossus) எனப் பெயரிட்டுள்ளனர்.

இதன் எலும்புகளின் அளவை இப்போது இருக்கும் திமிங்கலங்களுடன் ஒப்பிட்டு இந்த உயிரினத்தின் அளவு மற்றும் எடையை ஆய்வாளர்கள் கூறியுள்ளானர்.


இது 65.6 அடி நீளமானது மற்றும் 340 டன் எடை உள்ளது எனக் கூறுகின்றனர். நாம் அறிந்ததில் 200 டன் எடை இருக்கும் திமிங்கலம் தான் மிகவும் எடை மிகுந்தது.


இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான ஜியோவானி பியானுசி, இந்த எலும்புகள் மிகவும் அடர்த்தியாகவும் கச்சிதமாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதிரியான எலும்புகள் இப்போது இருக்கும் செட்டாசியன்களில் கிடையாது. மாறாக, கடல் பசு, மனாடீஸ் போன்ற சைரெனியன்களில் (Sirenians) காணப்படும்.

ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த திமிங்கலத்தையும் கடல்பசு போன்ற வடிவத்தில் தான் உருவாக்கியுள்ளனர்.

இதன் மண்டை ஓடு மற்றும் சில படிமங்கள் கிடைத்தாலே உணவுப்பழக்கம் மற்றும் விவரங்கள் குறித்து உறுதியாக கூற முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?