தென் கொரியா: நாய் விற்பனைக்குத் தடை! Twitter
உலகம்

தென் கொரியா: நாய் விற்பனைக்குத் தடை!

தென் கொரிய அரசு நாய்கறி விற்பனைக்கு தடையை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து 2027ம் ஆண்டில் இந்த தடை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Antony Ajay R

தென் கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக மக்கள் சிலர் நாய்கறி உண்பதை மறுத்து வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் நாய்கறி உண்பதை வெறுக்கின்றனர். நாய் இறைச்சிக்கு எதிரான பிரச்சாரங்களும் அதிகரித்திருக்கின்றன.

தென் கொரிய அரசு நாய்கறி விற்பனைக்கு தடையை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து 2027ம் ஆண்டில் இந்த தடை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நாய் இறைச்சிக்கடைகள், இறைச்சிக்காக நாய் வளர்க்கும் கால்நடைப் பண்ணைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் பாதிக்கப்படும் நபர்கள் மறுவாழ்வுக்கான திட்டங்களை கொரிய அரசு வகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாய் இறைச்சி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துவருகிறது, இதற்கும் மாற்றுத் தேவை. நாய் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டாலும், நாய் உண்பது சட்ட விரோதமாக கருதப்படாது என அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் சட்டம் அமலுக்கு வந்த பிறகு நாய் இறைச்சியை விற்பனை செய்தால் தண்டனை வழங்கப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?