Space: இதுவரை எத்தனை விண்கலன்கள் ஏவப்பட்டுள்ளன? இந்தியாவின் பங்கு என்ன? தீமைகள் என்ன? Twitter
உலகம்

Space: இதுவரை எத்தனை விண்கலன்கள் ஏவப்பட்டுள்ளன? இந்தியாவின் பங்கு என்ன? தீமைகள் என்ன?

சந்திரனுக்கும், சூரியனுக்கும், பிறக் கோள்களுக்கும் நம் விண்கலன்களை அனுப்பி வருகிறோம். இப்படி நாம் அனுப்பிய பல பொருட்கள் விண்வெளியில் குப்பைகளாக தங்குகின்றன. நாம் இதுவரை விண்வெளியில் எத்தனைப் பொருட்களை வீசி எரிந்துள்ளோம்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைக் காணலாம்.

Antony Ajay R

மனிதன் கண்ணுக்கு எட்டிய எதையும் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் உடையவனாக இருக்கிறான். இதுவே மனித இனத்தை உலகை ஆழும் ஒன்றாக மாற்றியிருக்கிறது.

அப்படித்தான் நமக்கு விண்வெளியும். விண்வெளியில் புதிர்களை ஆராய்வது முதன்முதலில் வானத்தை அண்ணாந்து பார்த்தது முதல் மனிதர்களுக்கு இருக்கும் ஆவல்.

அந்த ஆவலின் விளைவாக சந்திரனுக்கும், சூரியனுக்கும், பிறக் கோள்களுக்கும் நம் விண்கலன்களை அனுப்பி வருகிறோம். இப்படி நாம் அனுப்பிய பல பொருட்கள் விண்வெளியில் குப்பைகளாக தங்குகின்றன.

நாம் இதுவரை விண்வெளியில் எத்தனைப் பொருட்களை வீசி எரிந்துள்ளோம்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைக் காணலாம்.

முதல் விண்கலம்

பூமியில் இருந்து நாம் வியந்து பார்த்து கதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த விண்ணுக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலம் ஸ்புட்னிக் (Sputnik).

1957ம் ஆண்டு ரஷ்யா இந்த செயற்கைக்கோளை அனுப்பியது. இது பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் யார் மிகப் பெரிய வல்லரசு என்பதை நிரூபிக்க போட்டிப்போட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அமெரிக்காவுக்கு ஸ்புட்னிக்கின் வெற்றி அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது.

ரஷ்யா ஸ்புட்னிக் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இதில் சோதனைக்காக லைகா என்ற நாயையும் வைத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

USSR sputnik satellite

ரஷ்யாவுக்கு இணையாக விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா வெறியுடன் இருந்தது. எதிர்பாராதவிதமாக அமெரிக்காவின் முதல் இரண்டு விண்வெளிப்பயண முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

1958ம் ஆண்டு ஒருவழியாக அமெரிக்கா எக்ஸ்ப்லோரர் எனும் தனது முதல் செயற்கை கோளை ஏவியது. பின்னர் சோவியத் ரஷ்யா இன்னொரு செயற்கை கோளை ஏவியது. இப்படி விண்வெளிப் போட்டி இரு நாடுகளுக்கும் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

விண்வெளிப்போட்டியில் அமெரிக்கா, ரஷ்யா மட்டுமல்லாமல் மேலும் சில நாடுகள் இணையத் தொடங்கின. அலோட்டே செயற்கை கோளை ஏவி 1962ம் ஆண்டு கனடா பட்டியலில் இடம் பெற்றது.

1965ம் ஆண்டு பிரான்ஸ் அஸ்டெரிக்ஸ் என்ற செயற்கை கோளை ஏவியது. இது பூமிக்கு மிக அருகில் Low Earth ஆர்பிட்டில் ஏவப்பட்டது.

இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்காக 1962ம் ஆண்டு INCOSPAR தொடங்கப்பட்டது. 1969ம் ஆண்டு இஸ்ரோ உருவாக்கப்பட்டது. 1960கள் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆரியபட்டா

1975ம் ஆண்டு இந்தியா ஆரியபட்டா செயற்கை கோளை அனுப்பி வரலாற்றில் தடம் பதித்தது. அப்போது தொடங்கி இன்று வரை இந்தியா பல செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது.

குறிப்பாக 2017ம் ஆண்டு ஒரே திட்டத்தில் 107 செயற்கை கோள்களை அனுப்பி சாதித்தது இஸ்ரோ.

இன்றுவரை ஆயிரக்கணக்கான ராக்கெட்கள், செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இன்னும் பல ஏவுதலுக்கு காத்திருக்கின்றன.

இந்தியாவின் மங்கல்யான் 2, அமெரிக்காவின் லூனார் ட்ரைப்லேசர், ரஷ்யாவின் லூனா 26 திட்டம், சீனாவின் 2030 நிலா திட்டம் ஆகியவை அடுத்தடுத்து வரவிருக்கும் மிகப் பெரிய திட்டங்கள்.

செயற்கை கோள்கள் மட்டுமல்லாமல், லேண்டர்கள், கூட்டு விண்கலன்கள், விண்வெளி நிலைய விமானங்கள் போன்ற பொருட்கள் இங்கிருந்து விண்வெளியில் வீசப்பட்டுள்ளன.

இவற்றில் பல பூமியின் ஆர்பிட்டில் சுற்றுகின்றன. சில அதையும் தாண்டி பயணித்துள்ளன.

இதுவரை அமெரிக்கா 7,325 பொருட்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா - 3,658, சீனா - 866, இங்கிலாந்து - 581, ஜப்பான் - 306, பிரான்ஸ் - 139, இந்தியா - 133, ஜெர்மனி 116 இந்த பட்டியலில் இல்லாத நாடுகள் 14,281 பொருட்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர்.

விண்வெளி குப்பை

அரசுகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இப்போது விண்வெளிக்கு தங்களது செயற்கை கோள்களையும் விண்கலன்களையும் அனுப்புகின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் நாசா பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதிக அளவிலான விண்வெளித் திட்டங்களினால் விண்வெளியில் குப்பை அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் ஏவப்படும் பொருட்களின் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் பூமியின் சுற்றுப்புறத்துக்கு மட்டுமல்லாமல் விண்வெளியின் சுற்றுபுறத்துக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?