ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் தெருவில் நிர்வாணமாக அலைந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
பின்னர் அதே வழக்குத் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு நிர்வாணமாக செல்ல முயன்றார்.
ஆச்சரியப்படும் விதமாக நீதிமன்றம் அவர் நிர்வாணமாக நடமாட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஏன்?
வலென்சியா மாகாண உயர்நீதிமன்றம், இதற்காக அந்த நபர் மீது கீழ் நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது தொடர்பாக ஸ்பானிஷ் சட்டத்தில் 'வெற்றிடம்' உள்ளதால் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அலெஜான்ட்ரோ கொலோமர் என்ற 29 வயது நபர் நிர்வாணமாக நடந்தபடியே நீதிம்னறத்துக்கும் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தனது கருத்தியல் சுதந்திரத்தை பறிப்பதாக அலெஜான்ட்ரோ வாதிட்டுள்ளார்.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில்,
"நான் 2020ம் ஆண்டு முதலே பொது இடங்களில் ஆடையில்லாமல் இருந்து வருகிறேன். என்மீது குற்றச்சாட்டுகளைவிட ஆதரவுகளே அதிகமாக வந்திருக்கின்றன. ஆனால் ஒருமுறை கத்திமுனையில் கூட மிரட்டப்பட்டேன். இவர்கள் அபராதம் விதிப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என கூறியுள்ளார்.
மேலும், "அவர்கள் என் செயலை obscene exhibitionism (ஆபாசமாக காட்சிப்படுத்துதல்) என புகார் கூறுகின்றனர். ஆனால் நான் செய்வது எந்த வித பாலியல் நோக்கமும் கொண்டது அல்ல" எனவும் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் ஆடை இல்லாமல் இருப்பது 1988 முதல் ஸ்பெயினில் சட்டப்பூர்வமானதாக இருந்து வருகிறது.
பார்சிலோனா, வல்லாடோலிட் போன்ற மாகாணங்கள் நிர்வாணமாக இருப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் இந்த நபர் சுற்றித்திரிந்த இடங்களில் எந்த வித சட்டமும் நிர்வாணமாக இருப்பதைக் கட்டுப்படுத்தவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust