Salto de Castro Twitter
உலகம்

ஸ்பெயின் : வெறும் 2 கோடி ரூபாய் விலைக்கு வரும் கிராமம் - ஏன் தெரியுமா?

Antony Ajay R

ஸ்பெயினில் 44 வீடுகள் உடைய கிராமம் ஒன்று வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆள்த்தியுள்ளது.

இந்த பணத்தில் ஸ்பெயினின் தலைநகரமான மாண்ரிட்டில் ஒரு அறைக்கொண்ட வீட்டைக் கூட வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் வீடுகள் மட்டுமின்றி பள்ளி, தேவாலயம், விடுதி, நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானங்கள், பார் வசதி என எல்லாமும் இந்த கிராமத்தில் உள்ளது. காவலர்கள் தங்குவதற்கான வீடுகளும் இங்கு உள்ளதாக ஸ்பானிஷ் ரியல் எஸ்டேட் வலைத்தளம் கூறுகிறது.

சால்டோ டி காஸ்ட்ரோ என்ற இந்த கிராமம் தலைநகர் மாண்ரிட்டில் இருந்து 3 மணி நேர பயணத்தில் செல்லக்கூடியது. இங்கிருந்து போர்ச்சுகல் நாட்டின் எல்லையும் மிகக் குறைந்த தொலைவிலேயே இருக்கிறது.

ஒரு முழு கிராமமும் இப்படிக் குறைந்த விலையில் விற்கப்பட காரணம் என்ன?

கைவிடப்பட்ட கிராமம்

இப்போது பரிதாபமான நிலையிலிருக்கும் இந்த கிராமம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தமாக கைவிடப்பட்டது.

1950களில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமத்தை உருவாக்கி, அங்கு மக்களை குடியமர்த்தியது. அவர்கள் இந்த கிராமத்துக்கு அருகில் இருக்கும் அணையில் தொழிலாளர்களாக பணியாற்றினர்

கிராமத்தின் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 80களின் பிற்பகுதியில் கிராமம் கைவிடப்பட்டது.

இப்போது இந்த கிராமத்தை சொந்தமாக வைத்திருக்கும் நபர், இதனை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்துடன் வாங்கியதாகக் கூறியிருக்கிறார். ஆனால் அது தடைபட்டதனால் 5 மில்லியன் யூரோ விலைக்கு இதனை விற்க நினைத்திருக்கிறார். யாரும் வாங்க முன் வராததனால் 2 மில்லியன் டாலர்கள் என விலையை தற்போது குறைத்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?