பிபிசி தமிழ் நிருபர் ஜெரின்  Twitter
உலகம்

இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட பிபிசி தமிழ் நிருபர் ஜெரின் - என்ன நடந்தது?

NewsSense Editorial Team

இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட பிபிசி தமிழ் நிருபர் ஜெரின் சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக பிபிசி தமிழின் நிருபர், புகைப்பட கலைஞர் ஜெரின் இலங்கையில் தங்கி அங்கு நடைபெறும் அரசியல் மாற்றங்கள் குறித்த தகவல்களை ரிப்போர்ட் செய்து வருகிறார்.

இப்படியான சூழலில் நேற்று இரவு காலி முகத்திடலில் நடந்த சம்பவங்களைப் படம் பிடிக்கச் சென்றவரை இலங்கை ராணுவத்தினர் தாக்கி உள்ளனர்.

அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைப்பேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.

ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக பிபிசி பகிர்ந்துள்ள செய்தியில், “பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைப்பேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜெரின் பல போராட்டங்களைச் சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக வழங்கியவர்.

கொரோனா காலத்தில் முனகளப் பணியாளராக இருந்து பல உணர்ச்சிகரமான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் இவர்.

இலங்கை ஊடக சுதந்திரம்

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் 2022ஆம் ஆண்டிற்கான ஊடக சுதந்திர தரப்பட்டியலில் இலங்கை 146வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?