இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி, தீ வைப்பது பொதுமக்கள் மீது தடியடி என அரங்கேறிவருகிறது.
இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்திருக்கிறார். இலங்கையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை முக்கிய அரசியல் தலைவர்கள் திருகோணமலை படைத்தளத்தில் அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி குறுகியக் கால யோசனைகளை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் உள்ளிட்ட 4 பிரதானக் யோசனைகளை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
இதன்படி தற்போதையப் நாடாளுமன்றம் 6 மாதங்களுக்குள் கலைக்கப்பட்டு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அக்கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp