Sri Lanka: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- இலங்கையில் என்னென்ன பார்க்கலாம்? sigiriya / canva
உலகம்

Sri Lanka: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- இலங்கையில் என்னென்ன பார்க்கலாம்?

Antony Ajay R

இந்தியர்கள் இனி இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என அறிவித்துள்ளது இலங்கை அரசு.

ஒரு நாட்டுக் குடிமக்கள் நாட்டு எல்லையைத் தாண்டி பயணிக்க பாஸ்போர்ட் தேவை. அதேப் போல மற்றொரு நாட்டுக்குள் நுழைய அந்நாட்டின் விசா அவசியம்.

பிறநாடுகளுடனான நட்புறவு அடிப்படையில் விசா வழங்குவதில் இறுக்கமும் தளர்வும் இருக்கும். பல நாடுகளில் இந்தியர்கள் அங்கு சென்ற பிறகு கூட விசா வாங்கிக்கொள்ளலாம்.

இப்போது இலங்கை விசாவே தேவையில்லை என அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் விசா தேவையில்லை எனக் கூறியுள்ளது.

விசாவை தளர்வு செய்யும் நடவடிக்கை இலங்கையில் சுற்றுலாத்துறையை வளர்க்கும் என நம்பப்படுகிறது.

ஆசியாவின் வைரம் என போற்றப்படும் அளவு இயற்கையழகு மிகுந்த நிலம் இலங்கை. ஆன்மிக, வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலும் இலங்கை சுற்றுலா முக்கியத்துவம் பெறுகிறது.

வெப்பமண்டல பகுதியில் இருக்கும் தீவு என்பதனால் இங்கு அழகிய கடற்கரைகளுக்கு பஞ்சம் இருக்காது. உனவடுனா, மிரிசா, பெந்தோட்டா, அருகம் பே, ஹிக்கடுவா, டங்கல்லே, நெகம்போ, திரிகோணமலை கடற்கரை என இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருக்கின்றன.

டிசம்பர் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் இலங்கையில் திமிங்கலங்கள், டால்ஃபீன்களைக் காணலாம். உலகில் மிகவும் பெரியதான நீளத் திமிங்கலத்தையும் பார்வையிடலாம். 5 வகையான கடலாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதை பிப்ரவரி-மே மாதங்களில் காண முடியும்.

காட்டுயிர்களைப் பொருத்தவரை யானைகள், எறுமைகள், சிறுத்தைகளைப் பார்க்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அசையா கரடியைக் (Sloth) காணலாம். ஆகஸ்ட் செப்டம்பரில் உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத அளவு அதிக யானைகள் ஒன்றாக வலம் வருவதைப் பார்க்கலாம்.

இலங்கையின் காடுகளும், மலைகளும் நீர் வீழ்ச்சிகளும் இயற்கையின் அதிசயம் என்றேக் கூறலாம். தியாலுமா நீர் வீழ்ச்சி, அபெர்டீன் நீர்வீழ்ச்சி, பம்பரகந்த நீர்வீழ்ச்சி, துன்ஹிந்த நீர்வீழ்ச்சி, பேக்கரின் நீர்வீழ்ச்சி, லக்ஷபனா நீர்வீழ்ச்சி, ராவண நீர்வீழ்ச்சி, கார்ட்மோர் நீர்வீழ்ச்சி, கிரிண்டி எல்ல நீர்வீழ்ச்சி, செயின்ட் கிளேர் ஆகியவை முக்கிய நீர் வீழ்ச்சிகளாகும்.

தொட்டுபொல கந்த, லக்கேகல மலைக்குன்று , எல்ல மலைஉச்சி, கிரிகல்பொத்த, நக்கிள்ஸ் மலைத்தொடர், அதாமின் சிகரம் ஆகியவை சுற்றுலா விரும்பிகளிடம் பிரபலமான மலைகள்.

காலி கோட்டை, பின்னவல யானைகள் இல்லம், யாலா தேசிய பூங்கா, பெய்ரா ஏரி, தம்புள்ளை குகைக் கோயில், சிகிரியா, யாழ்பாணம், டூத் ரெலிக் கோயில், சிலோன் டீ டிரெயில்ஸ், நீர் கொழும்பு ஆகிய இடங்களும் சுற்றுலாப் பயணிகள் மிஸ் செய்யக் கூடாத பகுதிகளாகும்.

இலங்கையில் அற்புதமான புத்த தலங்கள் இருக்கின்றன. இவ்வளவு இடங்கள் இருக்கும் இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்றால் சுற்றுலா விரும்பிகளுக்கு ஜாக்பாட் தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?