இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்துவருகிறது. இதையொட்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 9-ந் தேதி இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் துள்ளிக் குதித்து விளையாடி, அறைகளில் தூங்கிக் கிடந்தனர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் இலங்கையை விட்டுத் தப்பி விட்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால், சபாநாயகர் கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். விமானப்படை விமானம் மூலம் இலங்கையிலிருந்து தப்பி கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவில் இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.
தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
கொரோனா பெருந்தொற்று காலம் பலரையும் பொருளாதார ரீதியாக நிலைகுலையச் செய்திருக்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்கள் தொழிலை நேரடியாகவோ, வாரிசு தாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்க அல்லது புதிய தொழில் தொடங்க உதவும் வகையில் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற்றுக்கொள்ளலாம்.
2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் கொரோனா நோய்த் தொற்றால் தொழில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்க முடிவு செய்திருந்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விற்க டிவிட்டர் நிர்வாகம் எலான் மஸ்க் உடன் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் எலான் மஸ்க், டிவிட்டரில் உள்ள போலிக் கணக்குகள் உட்பட சில விவரங்களைத் தரும்படி டிவிட்டர் நிர்வாகக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், டிவிட்டர் நிறுவனம் அதை வழங்க மறுத்து வந்தது. இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டிவிட்டர் நிறுவனம் வழிக்குத்தொடர்ந்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp