மலைகள், காடுகள், பள்ளதாக்குகள், கடற்கரைகள் என பல்வேறு இயற்கையான விஷயங்களை இந்த அண்டம் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிங்க் ஏரி, நியூஸ்லாந்தில் இருக்கும் ஒளிரும் குகைகள், ஜப்பானின் அதிசய கடல் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த அதிசய கடல், மணல், பனி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் காட்சியளிக்கின்றன. இவை அனைத்தும் இயற்கையானவை, மற்றொரு புறம்நவீன வளர்ச்சிக்கு ஏற்றார் போல் லாப நோக்கத்துடன் செயற்கையான விஷயங்களை உருவாக்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று செயற்கையான கடற்கரை பற்றி தான் சொல்ல போகிறோம்.
இலங்கையின் கொழும்பில் தான் இந்த செயற்கையான கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முதல் செயற்கை கடலை, துறைமுகத்திற்குள் அமைத்து, அதைத் தற்போது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்துள்ளது சீனா. சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
துறைமுக நுழைவாயிலில் இருந்து சுமார் 3 கி.மீ வரை பயணிக்கும் போது, இந்த செயற்கை கடற்கரையை அடைய முடியும். நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி, கொழும்பு துறைமுக நகரத்திற்குச் சொந்தமான மொபைல் செயலி மூலம் பதிவு செய்து, அதன் கியூ.ஆர் பயன்படுத்தி உள்ளே செல்ல முடியும்.
இந்த கடற்கரைக்குள் செல்லும் வழியில் உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பாரிய கற்களைக் கொண்டு, கடலுக்கு நடுபகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடலில் பெரிய அலைகள் காணப்படுவதில்லை.
இந்த கடலில் படகு சேவைகளும் வழங்கப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த செயற்கை கடற்கரையைப் பார்வையிடலாம்.
ஆழமற்ற கடல் பகுதியில் மணல் நிரப்பப்பட்டு, புதியதாக ஒரு நிலப்பரப்பை உருவாக்கி, அதில் கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில் குறைவான அலைகளே கரைக்கு வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கற்கள் நிரப்பப்பட்டு, அலையின் சீற்றம் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடற்கரையில் அலையின் சீற்றம் குறைவாகவே காணப்படுகிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியில் ஆழம் குறைவாகவும் அலையின் சீற்றம் குறைவாகவும் இருக்கும் என்பதால் மக்கள் அச்சமின்றி நீராட முடியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust