தெருக்களே இல்லாத ஒரு அதிசய கிராமம்! ஒரே வீதியில் ஒன்றாக வாழும் 6000 பேர் - எங்கே?  facebook
உலகம்

தெருக்களே இல்லாத ஒரு அதிசய கிராமம்! ஒரே வீதியில் ஒன்றாக வாழும் 6000 பேர் - எங்கே?

இந்த ஊரில் ஒரே ஒரு சாலை தான் போடப்பட்டிருக்கிறது. 9 கிமீ தூரம் எந்த வித பிரிவுகளும் இல்லாமல் நீளும் இதுவே கிராமத்தின் பிரதான சாலை. இந்த சாலை ஊரின் தொடக்கம் முதல் எல்லை வரை நீள்கிறது. இரு புறமும் அருகருகே வீடுகள் கட்டப்படிருக்கின்றன.

Keerthanaa R

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல, ஒரே தெருவில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் போலந்தை சேர்ந்த இந்த கிராமத்தினர்.

பொதுவாகவே நமக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஏழாம் பொறுத்தம் எட்டாம் பொறுத்தம் தான்.

"குப்பைய என் வாசல்ல கொட்டாத, உங்க வீடு நாய் ஏன் எங்க வீட்டுக்கு வருது, எப்ப பாத்தாலும் சத்தமும் கூச்சலுமா இருக்காங்க" என்று விதவிதமாக, சில சமயம் இல்லாத புகார்களை கூட பக்கத்து வீட்டுக்காரர்கள் மேல் வைப்போம்.

ஆனால் இந்த கிராமத்தில் வாழும் அனைவரும் ஒரே தெருவில் குடியிருக்கின்றனர். பக்கத்து பக்கத்து வீடுகளில், ஆண்டாண்டு காலமாக, ஒற்றுமையாக!

எங்கே இருக்கிறது இந்த கிராமம்?

ஒரே தெரு 6000 வீடுகள்

போலந்தில் அமைந்துள்ளது சுலோஸ்வா என்கிற கிராமம். இங்கு மொத்தம் 6000 பேர் வசிக்கின்றனர். இந்த சுலோஸ்வா கிராமத்தில் மற்ற ஊர்களில் இருப்பது போல தெருக்கள் இல்லை. 6000 பேரும் குடியிருப்பது ஒரே தெருவில்!

இன்னும் தெளிவாக சொன்னால், இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு 5,999 பக்கத்து வீடுகள். என்னங்க சொல்றீங்க? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

ஆனால் அது தான் நெசம். தெற்கு போலந்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம், கிராக்கோ என்ற இடத்திலிருந்து 29 கிமீ தொலைவில் இருக்கிறது.

அதன் வழக்கத்துக்கு மாறுபட்ட வடிவமைப்பு காரணமாக 'லிட்டில் டஸ்கனி' என்று அழைக்கின்றனர்

எதிரெதிரே கட்டப்பட்ட வீடுகள்:

இந்த ஊரில் ஒரே ஒரு சாலை தான் போடப்பட்டிருக்கிறது. 9 கிமீ தூரம் எந்த வித பிரிவுகளும் இல்லாமல் நீளும் இதுவே கிராமத்தின் பிரதான சாலை. இந்த சாலை ஊரின் தொடக்கம் முதல் எல்லை வரை நீள்கிறது. இரு புறமும் அருகருகே வீடுகள் கட்டப்படிருக்கின்றன.

பக்கத்து வீடுகளுக்கு செல்ல ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன

அனைவரது வீடுகளுக்கு பின்னாலும் தோட்டங்கள், வயல்கள் இருக்கின்றன. இந்த வீடுகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பது பார்ப்பதற்கும் கண்கவர் காட்சியளிக்கிறது

ஆங்காங்கே வயல்களுக்கு மத்தியில் மரங்களும் உள்ளன. என்ன நடந்தாலும் இந்த இடத்தை விட்டு வெளியேறமாட்டோம் என்கின்றனர் இக்கிராமத்து வாசிகள்.

சமீபத்தில் இந்த கிராமத்தின் சாட்டிலைட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. அப்போது முதல் இந்த கிராம மக்களிடையே பேசு பொருளாகியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?