”மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்கக்கூடாது” கறார் செய்யும் தாலிபான் அரசு twitter
உலகம்

”மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்கக்கூடாது” கறார் செய்யும் தாலிபான் அரசு

10 வயதுக்கு மேல் இருக்கும் எந்த பெண் குழந்தையும் பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை. நாட்டின் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களிடம், பெண்களின் வயதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

Keerthanaa R

தலிபானில் இனி பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கூடாது என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை ஆட்கொண்டது தாலிபான். அப்போது முதல் நாட்டுக்குள் பல விதமான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது.

குறிப்பாக பெண்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. பெண்கள் பணிக்கு செல்லக் கூடாது, வெளியில் சென்றால் ஆண் துணையுடன் தான் செல்லவேண்டும், கண்டிப்பாக கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற விதிமுறைகள் திணிக்கப்பட்டன.

செப்டம்பர் 2021 முதல் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை பெண்கள் கல்வி நிறுவனங்களுக்கு திரும்ப அனுமதியில்லை என்று கூறப்பட்ட நிலையில், முதலில் 6 ஆம் வகுப்பு வரை பெண்கள் கல்வி பெறலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்விகற்க அனுமதி என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிபிசி பெர்சியாவின் அறிக்கையின்படி, பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பெண் பிள்ளைகளை மூன்றாம் வகுப்புக்கு மேல் சேர்க்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

10 வயதுக்கு மேல் இருக்கும் எந்த பெண் குழந்தையும் பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை. நாட்டின் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களிடம், பெண்களின் வயதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிகாரிகள் பள்ளிகளில் கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் வயதை கண்டறிந்து 10 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான அழகு நிலையங்கள் நடத்தக்கூடாது, அழகு நிலையம் நடத்த இடம் தரக்கூடாது, இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு சாரா நிறுவனங்களிலும் பெண்களை பணியமர்த்தக் கூடாது, மால்களில் பெண்கள் பணியாற்றக் கூடாது, பெண்கள் மருத்துவம் படிக்கக்கூடாது, பெண்களுக்கு ஆண் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கக்கூடாது என்பது போன்ற உத்தரவுகள் ஏற்கனவே அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?