elon musk Twitter
உலகம்

இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லையா..? எலான் மஸ்க் பதில் இணையத்தில் வைரல்

Priyadharshini R

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக வலம் வருகிறார்.

தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய எலான் மஸ்க் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்.

இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் நிபந்தனை விதித்தார்.

Elon Musk

இதற்கு பதில் அளித்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தியாவில் எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை விற்பனை செய்வதை வரவேற்கிறோம்.

ஆனால், டெஸ்லா கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். சீனாவில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது என்றார்.

இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்க டெஸ்லா நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று எலான் மஸ்க் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ட்விட்டரில் தனிநபர் ஒருவர் “ இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை எதிர்காலத்தில் அமைக்கும் திட்டம் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்வீட்டிற்கு பதிலளித்த டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்,

"முதலில் கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை உருவாக்காது" என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?