Elon Musk Twitter
உலகம்

Elon Musk: ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் கால் பதிக்கும் டெஸ்லா CEO- Pi Phone Features என்னென்ன?

Gautham

'உசரப் பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது' என்பர். அந்தப் பழமொழி 1990களுக்கு முன்பு வரை பல நாடுகளில் உண்மையாக இருந்தது எனலாம். ஆனால் தற்போது அந்த நிலையே தலைகீழாக மாறிவிட்டாது.

இணையம் மனித இனத்துக்குத் தேவையான நன்மை, தீமை, பொழுது போக்கு, தீவிரவாதம், கல்வி, வியாபாரம், வணிகம், பங்குச் சந்தை... என எல்லாவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் ஒரு துறையில் ஜாம்பவானாக வேண்டுமென்றால் ஒரு மொபைல் ஃபோனும், ஒரு இண்டர்னெட் இணைப்பும் இருந்தால் போதும்.

பாடங்கள் படித்து, தேர்வெழுதி, வேலை கூட வாங்கிவிடலாம். அப்படிப்பட்ட இணைய வெளியில், இன்று ஸ்மார்ட்ஃபோன்கள் ஒரு முக்கிய கண்ணிகளாக இருக்கின்றன. 1995-ல் பிறந்தவர்களுக்கு டெஸ்க்டாப் கணினியே ஒரு மொக்கை சாதனமாகத் தோன்றுகிறது. அவர்கள் லேப்டாப், ஐபேட்களில் வேலை பார்ப்பதை விட, பெரும்பாலும் ஃபோனிலேயே எல்லா வேலைகளையும் செய்து கொள்கின்றனர்.

அடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் ஸ்மார்ட்ஃபோன்களின் பங்களிப்பு இன்னும் எப்படியெல்லாம் அதிகரிக்கும் என்பதை எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இனி மனித இனம் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர வேண்டுமானால் ஸ்மார்ட்ஃபோன் மிக அவசியம் என்பதை மட்டும் மறுப்பதற்கு இல்லை.

அந்த ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பிடிக்க எத்தனையோ நிறுவனங்கள் (இதில் உலகறிந்த பெரு நிருவனங்களும் அடக்கம்) முயன்று தோற்றுப் போயுள்ளன, பல நிறுவனங்கள் இப்போதும் போட்டியில் இருக்கின்றன.

ஸ்மார்ட்ஃபோன் என்கிற பதத்தை முதன்முதலில் வெகுஜன உலகில் பிரபலப்படுத்திய பிளாக் பெர்ரி காலப் போக்கில் காணாமல் போய்விட்டது. இந்தியாவில் ஒரு காலத்தில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக இருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

ஹெச் டி சி, பிலிப்ஸ், மைக்ரோசாஃப்ட், ஏசர், சோனி (இந்தியா உட்பட பல சந்தைகளில் இருந்து பின்வாங்கப்பட்டது) என பல நிறுவனங்கள் ஸ்மார்ட்ஃபோன் துறையில் இருந்து பெரிய அளவில் பின்வாங்கியுள்ளனர் அல்லது முற்றிலும் கடையை மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்கிறது வரலாறு.

அப்பேற்பட்ட சிக்கலான, அதீத போட்டி நிறைந்த சந்தையில் எலான் மஸ்க் தன் வலது காலை எடுத்து வைக்கவிருப்பதாக 'மேஷபிள் இந்தியா' வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இணைய நிதி சேவையில் ஒரு புதிய பாய்ச்சலைக் கொண்டு வந்த பே பல், எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய புரட்சியைக் கொண்டு வந்த டெஸ்லா, விண்வெளிப் பயணத்தில் எவரும் தொடாத உச்சத்தைத் தொட்ட ஸ்பேஸ் எக்ஸ் என பல சாதனைகளை ஒரு சில தசாப்தங்களில் கண் முன்னே நிகழ்த்திக் காட்டிய எலான் மஸ்க் பை ஃபோன் (Pi Phone) என்கிற பெயரில் ஒரு புதிய ஸ்மார்ட்ஃபோனை வரும் டிசம்பர் 2022ல் களமிறக்கவிருக்கிறாராம்.

156.8 x 72.1 x 7.6 (மில்லி மீட்டர்) நீள * அகல * உயரத்தில் இருக்கும் அந்த ஸ்மார்ட்ஃபோனின் எடை சுமார் 202 கிராம் இருக்குமாம். ஓலெட் பேனல்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோன் 6.7 இன்ச் கொண்டதாகவும், 1284 x 2778 பிக்ஸல் ஸ்கிரீன் ரெசல்யூஷன் கொண்டதாகவும், 458 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டி கொண்டதாகவும் இருக்குமாம். பை ஃபோனின் கண்ணாடி ஸ்கிராட்ச் ரெசிஸ்டெண்டாகவும் இருக்கும்.

பின் பக்கத்தில் 3 கேமராக்கள் இருக்கும். ஒவ்வொன்றும் 50 எம் பி தெளிவுத் திறன் கொண்டதாக இருக்கும். dual-pixel PDAF, dual-LED dual-tone flash, HDR (photo/panorama), ProRes, Cinematic mode, stereo sound recording என எல்லா வசதிகளும் இருக்கும்.

முன்பக்கத்தில் 40 எம் பி தெளிவுத் திறனோடு ஒரு செல்ஃபி கேமரா, ஜென் Z & 2 கே கிட்ஸ்களுக்கும், இன்ஸ்டா டூட்களுக்கும் விருந்தளிக்கும். இதெல்லாம் போக கைரோ இ ஐ எஸ், ஹெச் டி ஆர், வை-ஃபை 802.11 போன்ற மற்ற இத்தியாதிகளும் பை ஃபோனில் இருக்கும். ஜி பி எஸ், குளோனாஸ், 5.2 ப்ளூடூத் போன்ற மற்ற அடிப்படை வசதிகளுக்குப் பஞ்சமில்லை.

இதில் நம்மைப் போன்ற ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்கள் மற்றும் சக ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர்கள் பார்த்து ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், இந்த பை ஃபோனில் டெஸ்லா நிறுவனமே தன் சொந்த ஜிபியூ, சிபியூவைப் பயன்படுத்தவிருக்கிறது.

இது எப்போது இந்தியாவுக்கு வரும், இந்தியாவில் இந்த ஃபோன் விற்பனைக்கு வந்தால், என்ன விலைக்கு விற்கப்படலாம் என்பதெல்லாம் யூகத்திலேயே இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் ஸ்டார்லிங்க் பெயரில், நூற்றுக் கணக்கான செயற்கைக் கோள்களை ஏவி, இணைய சேவையை வழங்கி வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?