Thai Cave Rescue: மரண குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் - மீண்டது எப்படி? திக் திக் கதை!
Thai Cave Rescue: மரண குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் - மீண்டது எப்படி? திக் திக் கதை! Twitter
உலகம்

Thai Cave Rescue: மரண குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் - மீண்டது எப்படி? திக் திக் கதை!

Antony Ajay R

ஒரு மலைக்குகைக்குள் சிக்கிக்கொண்ட 13 கால்பந்து வீரர்களை மீட்கும் இந்த நிகழ்வு 2018ம் ஆண்டு நடைபெற்றது. இன்றுவரை உலகம் முழுவதும் பெரிய அளவில் பேசப்படும் மீட்புக் கதை இதுவாகத்தான் இருக்கும்.

மாட்டிக்கொண்டவர்களை மீட்டுக்கொண்டுவரும் சாதாரண ரெஸ்க்யூ ஆப்ரேஷனாக இல்லாமல் தியாகம், விடாமுயற்சி, நம்பிக்கை, தலைமைத்துவம் என பல உணர்வுகளை இந்த நிகழ்வு உலகுக்கு கடத்தியது.

குகைக்குள் மாட்டிக்கொண்ட கால்பந்து அணிக்கு வைல்ட் போர்ஸ் என்று பெயர். 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 12 சிறுவர்களும் அவர்களின் 25 வயது கோச்சும் அதில் இடம் பெற்றிருந்தனர்.

அவர்கள் அணியில் உள்ள ஒரு சிறுவனின் பிறந்தநாளைக் கொண்டாட ஜூன் 23ம் தேதி தாம் லுவாங் நாங் என்ற குகைக்கு சென்றுள்ளனர். எதிர்பாராமல் வீசிய புயலால் பெருமழை வந்தது.

குகையில் தண்ணீர் நிரம்ப 5 கிலோமீட்டர் வரை குகைக்குள் சிக்கிக்கொண்டது அந்த கால்பந்து அணி.

Tham Luang Nang (தாம் லுவாங் நாங்)

நாம் சினிமாவில் இதுவரை பார்த்துள்ள குகைகளையும் விட ஆபத்தானது இந்த தாம் லுவாங் நாங். இந்த சிறுவர்களும் கோச்சும் அடிக்கடி இங்கு சென்று பழகியிருந்தாலும் மழையால் தண்ணீர் வர வர செய்வதறியாது குகையின் உள்ளே வெகுதூரம் சென்றனர் அந்த குழுவினர்.

குகையின் வாயில் பெரியதாக இருந்தாலும் உள்ளே செல்ல செல்ல ஒரு ஆள் நுழையும் அளவுதான் பாதையே இருக்கும். அதுவும் நேர் பாதையாக இல்லாமல் வளைந்து நெளிந்து செல்லும். சில இடங்களில் பாதை தலைக்கு மேலே தான் இருக்கும்.

மேடு பள்ளமாக இருப்பதனால் தண்ணீர் பள்ளங்கள் முற்றிலுமாக நிரம்பியிருந்தது. உள்ளே செல்ல வேண்டும் என்றால் உள் நீச்சல் அடித்துதான் சென்றாக வேண்டும்.

உள்ளிருப்பவர்கள் வெளியில் வரவேண்டும் என்றாலும் பல கிலோமீட்டர்கள் நீந்த வேண்டும். உள்ளே இருக்கும் சிறுவர்களுக்கோ நீச்சலே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்புப்பணிகள் துவக்கம்

சிறுவர்களை பெற்றோர்களும் உள்ளூர் காவல்துறையினரும் தேடி அவர்களது சைக்கிள் குகைக்கு வெளியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

குகைக்குள் எங்காவது சிக்கியிருக்கலாம் என நினைத்த உள்ளூர் மீட்பு குழுவினருக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. ஏனென்றால் கிட்டத்தட்ட அவர்களுக்கு தெரிந்தவரை குகை தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தது.

குகையின் வாயிலில் இருந்து தங்களது குழந்தைகளின் பெயரைக் கத்தி கூச்சலிட்ட பெற்றொர்களுக்கு தெளிவற்ற எதிரொலி மட்டுமே பதிலாக கிடைத்தது.

மழை நிற்காமல் பெய்து தண்ணீர் அதிகமானதால், உள்ளே இருப்பவர்களின் நிலையை அறியமுடியாமல் போனது. பிரச்னை தீவிரமானது.

குகை இருக்கும் சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநர் முதலில் மீட்பு "சாத்தியமற்றது" என்று நினைத்தார்.

குகையின் உள்ளே ஒரு உயரமான இடத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார் கோச் எகபோல் சாண்டவோங்(Ekapol Chantawong). அவர் புத்த மடாலயத்தில் பயிற்சி பெற்றவர்.

குகைக்குள் அடர்ந்த இருளில் இருந்தவர்களால் எதையும் பார்க்க முடியவில்லை. தங்களுக்கு அருகில் இருப்பவர்களைக் கூட தடவிப்பார்த்துதான் கண்டுபிடிக்கும் சூழலில் இருந்தனர்.

அந்த அசாதாரண சூழலிலும் தனது மாணவர்களை அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வைத்தார் கோச். அவர் அவர்களுக்கு தியானம் செய்ய கற்றுக்கொடுத்தார். அதன் மூலம் பசி பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்க மாணவர்கள் முயன்றுள்ளனர். குகையின் மேற்புறத்தில் இருந்து வழியும் தண்ணீரை மட்டுமே குடித்து அவர்கள் 13 பேரும் உயிர் பிழைத்திருந்தனர்.

சிறுவர்களிடம், தங்களுக்கு உதவி கிடைக்கும், மீட்கப்பட்டு வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கை மங்காமல் பார்த்துக்கொள்ளு ஒளியாக கோச் திகழ்ந்தார். இப்படியே 10 நாட்கள் வரை அடர்ந்த இருளில் அவர்கள் இருந்தனர்.

சர்வதேச வீரர்கள் வருகை

இந்த கால்பந்து அணியை மீட்க 30 அமெரிக்க வீரர்கள்(17 ஏர் ஃபோர்ஸ் வீரர்கள் உட்பட), ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிரிட்டிஷ் ஆகிய நாடுகளில் இருந்து சிறந்த டைவர்கள், குகை டைவர்கள், மீட்பு குழுவினர், மருத்துவக் குழுவினர் வந்து சேர்ந்தனர்.

குகைக்கு உள்ளே சிறுவர்கள் உயிருடன் இருக்கிறார்களா எனக் கூட மீட்பு வீரர்களுக்கு தெரியாது. முதல் கட்டமாக குகைக்கு உள்ளே இருந்து முடிந்தவரை தண்ணீரை வெளியே எடுத்தனர்.

பல்லாயிரம் லிட்டர்கள் தண்ணீர் வெளியில் எடுக்கப்பட்டதால் பக்கத்தில் இருந்த விவசாய நிலங்களில் பயிர்கள் பாழாகின. இருந்தாலும் அந்த ஊர் விவசாயிகள், "பயிர்களைப் பற்றி கவலை வேண்டாம் 13 உயிர்களை காத்திடுங்கள். அதுதான் முக்கியம் எனக் கூறிவிட்டனர்." இதற்காக அவர்கள் எந்த இழப்பீடும் பெற்றுக்கொள்ளவில்லை.

மீட்பு பணியில் இருக்கும் வீரர்களுக்கு உணவளிக்க, அவர்களது துணிகளை உலர்த்திக்கொடுக்க, டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களை வழங்க என ஆயிரக்கணக்கில் உதவிக்கரங்கள் நீண்டன.

ஒரு பிரிட்டிஷ் குகை நீச்சல் நிபுணர் 4 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் குகைக்குள் சென்றார். உள்ளே மேடான பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றிக்கொள்வது அவரது திட்டம்.

அப்படி அவர் உயிரைப் பணயம் வைத்து உள்நீச்சலடித்து 13 பேரும் இருந்த இடத்தை அடைந்தார். 10 நாட்கள் கழித்து நம்பிக்கையின் ஒளிக்கீற்று அவர்கள் மீது விழுந்தது.

தங்களைக் காக்க வந்தவருக்கு சிறுவர்கள் நன்றி சொல்லும் அந்த வீடியோ இன்றளவும் இணையத்தில் பிரபலம். நீங்களும் பார்த்து வாருங்கள்...

மீட்பும் மரணமும்

உடல் மெலிந்து காணப்பட்ட 13 பேருக்கும் முதலில் மருந்துப்பொருட்களை வழங்கினர். டார்ச் விளக்கு, உணவு ஆகியவற்றை நேவி வீரர்களும் குகை நீச்சல் வீரர்களும் சென்று வழங்கினர்.

குகை நீச்சல் வீரர்கள் 5 மணிநேரத்தில் உள்ளே சென்று திரும்புகின்றனர். ஆனால் நேவி வீரர்களுக்கு பல மணி நேரம் எடுத்திருக்கிறது.

குளிர்ந்த நீரில் மிகவும் குருகிய ஒரு ஆள் மட்டுமே நுழையக் கூடிய அந்த பாதையில் நீந்துவது நேவி வீரர்களுக்கு சுலபமானதாக இல்லை. ஆனால் குகை நீச்சல் வீரர்களின் அனுபவம் அவர்களுக்குக் கைகொடுத்தது.

உயிரிழந்த நேவி வீரர்

ஒருமுறை உள்ளே 2 நேவி வீரர்களும் 2 குகை நீச்சல் வீரர்களும் சென்றனர். 5 மணி நேரத்தில் குகை நீச்சல் வீரர்கள் திரும்ப, நேவி வீரர்கள் வரவே இல்லை.

வெகு நேரம் கழித்து வெளியில் வந்த ஒரு நேவி வீரர், தன்னுடைய சக நீச்சல் வீரர் உள்ளே ஆக்ஸிஜன் இல்லாமல் நடு வழியில் சிக்கிக்கொண்டதாகவும், அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தயார் நிலையில் இருந்த மீட்புப்பணியினர் உடனடியாக விரைந்து சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு நேவி வீரரின் உயிர் பிரிந்தது.

குகைக்குள் மாட்டிக்கொண்டுள்ள 13 பேரையும் வெள்ளத்தின் வழியாக வெளியே கொண்டுவருவது எளிதாக காரியமல்ல என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

நேவி வீரர்களே திணறும் குகைவழியே நீச்சல் தெரியாத சிறுவர்களை எப்படி மீட்பது? கவர்னரும், முக்கிய வீரர்களும் இணைந்து 3 திட்டங்களை வகுத்தனர்.

முதலாவது நீர் வற்றும் வரை அவர்களுக்கு தேவையான உணவு, உதவிகளை வழங்கி அவர்களை அங்கேயே தக்கவைப்பது. இதற்கு 3 மாதம் கூட ஆகலாம், ஒரு வேளை மழை அதிகரித்து தண்ணீர் அதிகமாக செல்லும் அபாயமும் இருக்கிறது.

இரண்டாவது மலையின் வேறொரு வழியாக துளையிட்டு அவர்களை மீட்பது. 13 பேரு தங்கியிருந்த மேட்டுப்பகுதிக்கு இரண்டு புறமும் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் அதற்கும் வழியற்றிருந்தது.

மூன்றாவது திட்டம் சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து ஒரு டைவருடம் நீந்தி வெளியில் வரவழைப்பது. இதில் மூன்றாவது திட்டத்தைத்தான் கையில் எடுத்தனர்.

ஆனால் சிறுவர்கள் ஆழமான வெள்ள நீரில் நீந்தும் போது பயந்துவிட வாய்ப்புகள் இருப்பதனால் அவர்களை விழிப்புடன் அழைத்து வருவது இயலாத காரியமாக இருந்தது.

இதனால் சிறுவர்களுக்கு மயக்க மருந்துகொடுத்து அவர்களை தூலியில் வைத்து இரண்டு வீரர்கள் சேர்ந்த தூக்கி வர திட்டமிட்டனர்.

சிறுவர்கள் வெளியில் வந்த உடனேயே அவர்களைப் பரிசோதிக்க மருத்துவர் குழு தயாராக இருந்தது. இந்த வழியில் 13 பேரும் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் 30 நாட்கள் வரை மருத்துவ முகாமில் இருந்தனர். இவர்கள் உயிருடன் திரும்பியதை மொத்த உலகும் கொண்டாடியது.

மொத்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்த சிறுவர்கள் நாங்கள் 13 நாட்கள் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்ததற்கு தங்களது கோச் தான் காரணம் எனக் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?