Thawee Nanra Twitter
உலகம்

தாய்லாந்து விநோதம்: இவரது சிறுநீர் நோய்களை குணமாக்குமென மக்கள் நம்புகின்றனர் - யார் இவர்?

Gautham

மனித இனம் அளப்பரிய பல்வேறு விஷயங்களைச் செய்து வந்தாலும்,மதன் நம்பிக்கைகளில் மட்டும் ஏனோ பெரிய முன்னேற்றம் எதையும் காண முடிவதில்லை.

இதற்கு சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் ஒரு சாமியார் நம்பியதாகக் கூறியது இங்கு நினைவுகூறத்தக்கது.

இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பலதரப்பட்ட ஆன்மிக, மத ரீதியில் மோசடி செய்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி சமீபத்தில் தாய்லாந்தில் தவேன் நான்ரா (Thawee Nanra) என்கிற மனிதர் அம்பலப்பட்டிருக்கிறார்.

யார் இவர்?

தவே நான்ரா ஒரு நம்பிக்கை அல்லது மதம் சார்ந்த கூட்டத்தின் தலைவராக வலம் வந்தவர். 75 வயதான இவர் தாய்லாந்தில் சயாபும் (Chaiyaphum) என்கிற மாகாணத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்தார். மேலாடை அணியாத வெள்ளை தாடி கொண்ட ஒரு ஆண் அவர்.

ஒரு ஏமாற்று போதகரைப் போலவே இவருடைய பயிற்சிகள் அறிவியலுக்கு எதிரானவையாகவே இருந்தன. இவர் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சிகளும் பொது நெறிமுறைகளுக்கு எதிரானவையாகவே இருந்தன. இருப்பினும் அவரை பின் தொடரும் பக்தகோடிகளுக்கு அவருடைய பயிற்சி முறைகளும் பரிசோதனைகளும் ஏதோ ஒரு விஷயத்தை உறுதி செய்வதாகவே இருந்தன.

இதை விட கொடுமையான விஷயம் என்னவென்றால், தவே நான்ராவின் சிறுநீர் போன்ற உடல்வழி வெளியேறும் திரவங்கள் நோய்களை குணமாக்கும் திறன் கொண்டவை என அவரது பக்தகோடிகள் நம்பியுள்ளனர்.

அவரோடு குறைந்தபட்சம் 12 பக்தர்களாவது எப்போதும் உடன் வாழ்ந்து அவருக்கு சேவையாற்ரி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் புத்தமதம்

ஏன் கைது செய்யப்பட்டார்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை தவே நான்ரா வாழ்ந்து வந்த இடத்தை தாய்லாந்தின் காவல்துறை சோதனை செய்தபோது 11 பிணங்களை கண்டெடுத்தனர். அப்பிணங்கள் அனைத்தும் அவரது பக்தகோடிகள் என தாய்லாந்தை சேர்ந்த உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சோதனைக்கு பிறகு தாய்லாந்து காவல்துறை தவே நான்ராவை கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்யும் போது அவரைப் பின்பற்றும் பக்தர்கள் பலரும் அலை மோதிய காட்சியை பல்வேறு ஊடக செய்திகள் மற்றும் காணொளிகளில் பார்க்க முடிகிறது.

இந்த நவீன காலத்திலும் இப்படிப்பட்ட விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருவது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக, இந்த சம்பவம் தொடர்பாக சயாபும் (Chaiyaphum) மாகாணத்தின் ஆளுநர் க்ரைசொன் கொங்சலாட் (Kraisorn Kongchalad) ஊடகங்களிடம் பேசிய போது கூறினார்.

இது போன்ற மூட நம்பிக்கைகளை இப்போதும் மக்கள் பின்பற்றி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இனி இது ஒரு தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல. அவருடைய வாழ்விடத்தில் பல பிணங்களைக் கண்டுபிடித்து இருக்கிறோம். அவரைக் குறித்தும், அவரைச் சார்ந்து இருக்கும் நபர்களைக் குறித்த உண்மைகளை பல்வேறு அரசு முகமைகள் உடன் இணைந்து பணியாற்றிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாகாண ஆளுநர் க்ரைசொன் கொங்சலாட்.

பொதுவாகத் தாய்லாந்தில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தைத் தழுவிப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் பலர் தங்களுடைய மதத்தைத் தாண்டி ஆவிகளையும் பேய்களையும் நம்பி வழிபட்டு வருவதாகவும் தி கார்டியன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவே நான் ராவின் இந்த அமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எவராலும் கவனிக்கப்படாமல் அமைதியாக அவரது வீட்டைச் சுற்றி இயங்கி வந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

தாய்லாந்து

எப்படி கண்டுபிடித்தனர்?

தவே நான்ராவின் பக்தர்களில் ஒருவரின் மகள், மதரீதியிலும், ஆன்மிக நம்பிக்கையின் பெயரிலும் மக்களைத் தவறாக வழிநடத்தும் மனிதர்களை அம்பலப்படுத்தும் விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர். அவர் தான் முதன்முதலில் தவே நான்ராவைக் குறித்து சமூக வலைதளங்களில் பேசினார். அப்போதுதான் வெளிஉலகுக்கு தவே நான்ரா என ஒருவர் இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்து வருவது தெரியவந்தது.

தொடக்கத்தில் தவே நான்ரா காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பிறகு தாய்லாந்தின் நோய் கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு முரணாக சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டியது தொடர்பாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவர் வீட்டில் மேற்கொண்ட பரிசோதனையின்போது பல்வேறு இறந்த பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

திங்கட்கிழமை அவர் ஜாமீன் கேட்டு தாய்லாந்து நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது, ரத்து செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. தற்போது தாய்லாந்து காவல்துறை அவர் செய்திருக்கும் மற்ற பல தவறுகளையும் தோண்டித் துருவி எடுத்து வழக்கு தொடுக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில் சட்டவிரோதமாக தன் பக்தர்களை கொலை செய்து உடல்கள் கண்ட இடங்களில் எறிந்ததும் அடக்கம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?