Tea: 18 கேரட் தங்கம், 1,600 வைரகற்கள் - கின்னஸ் சாதனை படைத்த டீ பாட்! twitter
உலகம்

Tea: 18 கேரட் தங்கம், 1,600 வைரகற்கள் - டீபாட்டுக்கு இவ்வளவு விலையா?

Keerthanaa R

உலகளவில் நிறைய பொருட்கள் நாம் எதிர்பார்க்காத அளவு விலை உயர்ந்ததாக இருக்கும். அவை அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் விலை நம்மை வியக்கச் செய்யும். இந்த பொருளுக்கு இவ்ளோ காசு தரணுமா என்று யோசிப்போம்.

அப்படி ஒரு பொருள் தான் இந்த டீபாட்!

முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர் கண்களை பறிக்கும் இந்த டீபாட் கின்னஸ் உலக சாதனை அங்கீகாரமும் பெற்றிருக்கிறது.

இந்த தேநீர் வைக்கப்படும் கோப்பையை தி ஈகோயிஸ்ட் என்று அழைக்கின்றனர்.

இங்கிலாந்தின் என் சேதியா அறக்கட்டளையிடம் தான் இந்த டீபாட் தற்போது உள்ளது. இதனை ஃபுல்வியோ ஸ்கேவியோ என்பவர் வடிவமைத்திருக்கிறார். இவர் இத்தாலிய நகைக்கடைக்காரர் ஆவார்

பார்ப்பவர் கண்களை பறிக்கும் இந்த கெட்டில் 18 கேரட் மஞ்சள் தங்கத்தால் ஆனது. மேலும் கெட்டில் முழுவதும் விலையுயர்ந்த 1,638 வைர கற்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 6.67 கேரட் பவள கற்களும் ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ளது.

இதன் கைப்பிடியும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது

இதன் மதிப்பு 30 லட்சம் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 24 கோடி. இதன் தனித்துவம் மற்றும் விலை மதிப்பு காரணமாக கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது தி ஈகோயிஸ்ட் டீபாட்.

என்னதான் இந்த டீபாட் இவ்வளவு சிறப்பு பெற்றிருந்தாலும், இணையவாசிகளை கவரவில்லை. நாம் அருந்தும் தேநீர் எந்த குடுவையில் வைக்கப்பட்டாலும், ஒரே மாதிரி தான் சுவைக்கபோகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?