இறந்தவர்களுக்கு திருமணம்; பிணங்களை திருடும் குற்றவாளிகள் - சீன சடங்கின் பின்னணி என்ன?
இறந்தவர்களுக்கு திருமணம்; பிணங்களை திருடும் குற்றவாளிகள் - சீன சடங்கின் பின்னணி என்ன? Twitter
உலகம்

இறந்தவர்களுக்கு திருமணம்; பிணங்களை திருடும் குற்றவாளிகள் - சீன சடங்கின் பின்னணி என்ன?

Antony Ajay R

சீனாவில் உள்ள பழைய பாரம்பரிய திருமண முறை நம்மை நடுங்க வைப்பதாக இருக்கிறது.

மிங்குன் என்று அறியப்படும் அந்த பாரம்பரிய சடங்கை பேய் திருமணம் என அழைக்கின்றனர்.

இது சாதாரண சடங்குகளைப் போன்றது அல்ல. இது இறந்த மனிதர்களுக்கு நடத்தப்படுகிறது.

இந்த சடங்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தடைசெய்யப்பட்டிருந்தாலும் சீனாவின் சில இடங்களில் இதனை இன்றும் மேற்கொள்கின்றனர்.

இந்த சடங்கை மேற்கொள்ள நிழல் சந்தையில் இருந்து பிணங்களை வாங்குகின்றனர். இது என்ன சடங்கு, எப்படி நடக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இறந்தவர்களின் ஆன்மா மரணத்துக்கு பின்னும் வாழ்கிறது என்ற நம்பிக்கை தான் இந்த சடங்குகளுக்கு மூல காரணமாக இருக்கிறது

இறந்தவர்களுக்கு திருமணம் செய்யும் சடங்கு ஏன்? எப்போது தொடங்கப்பட்டது?

இந்த சடங்கு எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் துல்லியமாக கிடைக்கவில்லை. சிலர் 3000 ஆண்டுகள் பழமையானது என்றுக் கூறுகின்றனர்.

சீன பண்பாட்டைப் பொறுத்தவரையில் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடத்தி வைக்காத பெற்றோர் மோசமான மனிதர்களாக கருதப்படுகின்றனர். கபூசியஸ் மதமும் இதையேக் கூறுகிறது.

இதனால் இறந்த மனிதருக்கு மற்றொரு பிணத்துடன் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. சில நேரங்களில் இறந்த ஆணுக்கு உயிருடன் இருக்கும் பெண்ணுடனும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது.

பரம்பரையை முன்னெடுக்கவும் இந்த திருமணங்கள் உதவுகின்றன. ஆண் மரணமடைந்துவிட்டால், அவரை திருமணம் செய்யும் பெண் ஒரு மகனைத் தத்தெடுத்துக்கொண்டு வம்சாவளியைத் தொடருவாள்.

ஒரு குடும்பத்தில் மூத்தவருக்கு முன் இளையவருக்கு திருமணம் செய்யக் கூடாது என்கிறார்கள். மூத்தமகன் இறந்து விட்டால், அவருக்கு இந்த சடங்குமுறையில் திருமணத்தை நடத்திவிட்டு இளையவருக்கு திருமணம் செய்வர்.

இறந்தவர்களின் ஆன்மா மரணத்துக்கு பின்னும் வாழ்கிறது என்ற நம்பிக்கை தான் இந்த சடங்குகளுக்கு மூல காரணமாக இருக்கிறது என கலாச்சார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாழ்ந்த போது திருமணம் செய்துகொள்ளாதவர்கள் மரணத்துக்கு பின்னரும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு பெண் நிச்சயம் செய்திருந்த ஆண் இறந்துவிட்டால் அந்த பெண் பிரம்மசாரியாக அந்த ஆணின் குடும்பத்துடனேயே வாழ்ந்து வருகிறார்.

ஆனால் ஒரு ஆணுக்கு நிச்சயம் செய்திருந்த பெண் இறந்துவிட்டால் அந்த ஆண் அதையே பின்பற்றுவதில்லை.

சடங்குகள் எப்படி நடத்தப்படும்?

இந்த சடங்குக்காக மூங்கில் குச்சிகள், காகிதம் மற்றும் துணியைக் கொண்டு உருவ பொம்மைகள் செய்யப்படுகின்றன. இந்த பொம்மைகளை இறந்தவராக கருதி சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

இந்த பொம்மைக்கு இறந்த பெண்ணின் பிணத்துடன், நிச்சயதார்த்தம் செய்திருந்தால் உயிருள்ள பெண்ணுடன் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

பேய் திருமணங்களுக்கான தடை முதன்முதலில் ஏகாதிபத்திய சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சீன கம்யூனிச கட்சி 1949ல் இதற்கு முழுமையாக தடை விதித்தது.

இருந்தபோதிலும் தற்போது சீனாவின் சில பகுதிகளில் பேய் திருமணம் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது.

பிணங்கள் ஏலம்

சீனாவில் ஆண்கள் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து பெரிதும் பெண்கள் நகரங்களுக்கு குடியேறி வருவதனால் இந்த பிரச்னை கிராமங்களில் அதிகமாக இருக்கிறது.

இதனால் ஒரு இளம் பெண் இறந்துவிட்டால் அவரை வைத்து தன் மகனுக்கு திருமணம் செய்ய பலர் வரிசையில் நிற்பர். இதனால் ஏலம் அறிவிக்கப்பட்டு அதிகமாக பணம் தருபவர்களுக்கு தங்கள் பெண்ணைத் தருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

சில லட்சங்கள் கூட இந்த இறந்த பெண்களுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் கல்லரையில் இருந்து பிணங்கள் திருடப்பட்டும் இந்த சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2013ம் ஆண்டு நான்கு திருடர்கள் பெண் பிணங்களை திருடி விற்றதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிய 10 பிணங்களை 30,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு விற்றுள்ளனர்.

தொடர்ந்து பல பிணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பலர் கைது செய்யப்பட்டனர்.

2016ம் ஆண்டு மா சோங்கா என்ற நபர் இரண்டு பெண்களை கொலை செய்து, அவர்களின் உடலை 5000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனை செய்துள்ளார்.

வடக்கு மற்றும் மத்திய சீனாவின் கிராமபுறங்களில் இந்த சடங்குகள் அதிகமாக நடைபெறுகின்றன. சிங்கப்பூர், தைவானிலும் உள்ள சீனர்கள் இதனைப் பின்பற்றுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?