The earthquake in Turkey and Syria is not just a natural disaster? Twitter
உலகம்

துருக்கி நிலநடுக்கம் : குர்து இன மக்களை அழிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டதா? உண்மை என்ன?

NewsSense Editorial Team

இந்த பூமி பந்தில், அவ்வப்போது இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதும், அதனால் ஈடுகட்ட முடியாத அளவுக்கு மனித உயிரிழப்புகள் நிகழ்வது, பொருட்சேதங்கள் ஏற்படுவதும் வழக்கமானது. ஆனால் நிலநடுக்கம், சுனாமி, மழை, வெள்ளம்… போன்ற இயற்கை பேரிடர்கள் மனிதர்களால் நேரடியாக உருவாக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட மக்களை அழிக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது கேட்கும் போதே எத்தனை வேடிக்கையாக இருக்கிறது?

அப்படி சமீபத்தில் துருக்கி நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என ஒரு குழு கூறிக் கொண்டிருக்கிறது.

“துருக்கியில் உள்ள , இஸ்லாத்துக்கு எதிரான குர்து இன மக்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல் தான் இந்த நிலநடுக்கம். இது தேர்தல் ஆண்டு, அதிபர் ரெசீப் தயீப் எர்தோகன் தன் பதவியில் இருந்து விலக விரும்பவில்லை” என பொருள் படும் தொனியில் சமூக வலைதளத்தில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன?

பூகோளவியல் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் அனைத்தும் இயற்கையாக ஏற்பட்டதே என்று கூறியுள்ளனர். பூமியின் கண்டத் தகடுகளில் ஏற்பட்ட அழுத்தம் அதிகரித்து, அது வெளியானதாலேயே பூகம்பம் ஏற்பட்டது என்றும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

மிகப்பெரிய கட்டிடங்களை கட்டுவது, நீர் தேக்கங்கள் குளம் குட்டைகளை உருவாக்குவது, ஹைட்ரோ கார்பன் எரிவாயுக்களை நிலத்தில் இருந்து எடுப்பது, ஜியோ தெர்மல் மின்சார திட்டங்கள் போன்றவைகளால் நிலநடுக்கங்கள் ஏற்படலாம். ஆனால், மனிதர்களால் இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை செயற்கையாக ஏற்படுத்த முடியாது என்கிறார்கள். எனவே இப்படி ஒரு சிலர் சொல்லி வருவது தவறான செய்தி.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களை தாண்டி, பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் சுமார் 20,000 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Earth

பிபிசி சொல்வது என்ன?

பூமியின் மேல் ஓடு, பிளேட்ஸ் (Plates) என்றழைக்கப்படும் தகடுகளால் ஆனது. அது ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு இருக்கும். இந்த தகடுகள் எப்போது நகர்ந்து கொண்டே இருக்க முயலும், ஆனால் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு இருப்பதால் இரண்டுமே நகர முடியாமல் அதன் உராய்வில் சிக்கிக் கொள்ளும். ஆனால் திடீரென ஒருநாள், தகடுகளுக்குள் இருக்கும் அழுத்தம் வெளிப்பட்டு, ஏதேனும் ஒரு தகடு சட்டென நகரும் போது, ஒட்டுமொத்த நிலபரப்பும் நகரும்.

தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்துக்கு அரேபிய கண்டத் தகடு வடக்கு நோக்கி நகர்வதும், அனடோலியன் தகட்டோடு உராய்ந்து கொண்டிருப்பதால் உருவானது என பிபிசி வலைதளம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த இரு கண்டத் தகடுகளுக்கு இடையிலான உராய்வுகள் காரணமாக கடந்த காலங்களிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. 1822 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி 7.4 ரிக்டர் அளவுக்கு ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலநடுக்கத்தின் போதும் இந்த நிலப்பரப்பு மிக மோசமான பாதிப்புகளையும், அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் 7,000 பேருக்கு மேல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?