Elizebeth Friedman ட்விட்டர்
உலகம்

எலிசபெத் : உலக போரில் அமெரிக்கா வெற்றிபெற காரணமான பெண்- இவரின் கதை மறைக்கப்பட்டது ஏன்?

தன் தேசத்துக்காக ஆற்றியப் பணிக்கு எப்போதும் பெருமைக் கோரமாட்டேன் எனக் கூறி, இறக்கும்வரை இருளில் இருந்த ஒரு பெண்ணின் கதை இது. உலகம் அறிந்திடாத முதல் பெண் மறைநூல் பகுப்பாய்வாளரின் கதை இது

Keerthanaa R

நாட்டுக்காக பணியாற்ற வந்துவிட்டால், புகழையும் அங்கீகாரத்தையும் நாம் எதிர்பார்க்கக்கூடாது. அதே சமயம், நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் இங்கு இடமில்லை. ஒரு ரகசிய உலகத்தில் வாழவேண்டியிருக்கும்.

சிறு பிசகு கூட நாட்டையும், நாட்டு மக்களையும் ஆபத்தில் கொண்டுவிடும்!

தன் தேசத்துக்காக ஆற்றியப் பணிக்கு எப்போதும் பெருமைக் கோரமாட்டேன் எனக் கூறி, இறக்கும்வரை இருளில் இருந்த ஒரு பெண்ணின் கதை இது. உலகம் அறிந்திடாத முதல் பெண் மறைநூல் பகுப்பாய்வாளரின் கதை இது

பல தசாப்தங்களாகவே, அமெரிக்க அரசு ஒரு ரகசிய ஆயுதத்தை வைத்திருந்தது. அதன் பெயர் எலிசபெத் ஃப்ரீட்மேன். எலிசபெத் கிரிப்டாலஜியின் தாய் - Mother of Cryptology என அழைக்கப்படுகிறார். உலகப்போர் சமயத்தில் எதிரி நாடுகளால் பரிமாற்றப்பட்ட ரகசிய கோட்களை கனக்கச்சிதமாக மொழிபெயர்த்து தந்தவர் எலிசபெத்

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர், அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடைக்காலம், போன்ற சமயங்களில் அமெரிக்கா இவரது சொற்களுக்கு கட்டுப்பட்டே இருந்தது எனச் சொல்லலாம்.

எலிசபெத்திடம் இந்த ரகசிய கோட்களை உன்னிப்பாக கவனிக்கும் திறன் இருந்தது. மற்றவர் கண்களில் படாத பல நுணுக்கமான விஷயங்கள் கூட இவரது பார்வையிலிருந்து தப்பாது.

முதலாம் உலகப் போரின்போது செயல்பட்ட முதல் பெண் கோட்பிரேக்கராக திகழ்ந்தார் எலிசபெத். அடுத்த தசாப்த காலத்தில், அதாவது அமெரிக்காவில் தடைக்காலம் அமலில் இருந்தபோது, இவரும் இவரது உதவியாளரும் இணைந்து, மொத்தம் 12,000 ரகசிய குறியீடுகளை டீ-கோட் செய்திருந்தனர்.

தொடர்ந்து இரண்டாம் உலகப்போரில் நாஜிப் படைகளின் தாக்குதல் ஒன்றை முன்பே கணித்து தடுக்கவும் உதவினார்.

ஷேக்ஸ்பியர் காதல்:

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி 1896 ஆம் ஆண்டு இண்டியானாவில் பிறந்தவர் எலிசபெத். இவருக்கு வீட்டில் வைக்கப்பட்ட பெயர் க்லாரா எலிசபெத் ஸ்மித்

ஹண்டிங்டன் என்ற இடத்தில் பள்ளி கல்வியை முடித்தவர், தனது தந்தையின் விருப்பங்களை மீறி வெளியூர்களில் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார். ஓஹையோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்தபோது, கல்லூரிக் கட்டணத்தை தந்தையிடம் இருந்து இவர் கடனாக பெற்று சென்றார்.

ஆங்கில இலக்கியம், அப்லைடு சயின்சஸ் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றார். லத்தீன், கிரேக்கம் ஜெர்மன் மொழிகளையும் கற்றறிந்தார். புத்தகங்கள் வாசிப்பதில் அதீத ஆர்வம் கொண்ட எலிசபெத், பிரபல ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுத்துகளின் மேல் அதீத காதல் கொண்டிருந்தார்.

1915 ஆம் ஆண்டு, படித்துமுடித்த பிறகு ஓராண்டுகாலம் ஆசிரியராகவும், உள்ளூர் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார் எலிசபெத்.

ஜார்ஜ் ஃபாபியனின் அறிமுகம்

அதன் பிறகு 1916ஆம் ஆண்டு சிகாகோவிற்கு பயணித்தார் எலிசபெத். அப்போது அவருக்கு ஜார்ஜ் ஃபாபியன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஜார்ஜ் ஃபாபியன் Riverbank Laboratoriesல் பணியாற்றி வந்தார்.

எலிசபெத் மிகவும் விரும்பிய ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், கவிதைகள் உண்மையில் மற்றொரு ஆங்கில எழுத்தாளரான ஃபிரான்சிஸ் பேக்கன் என்பவரால் எழுதப்பட்டவை என்று வாதிட்டார் ஜார்ஜ். இதனால், ஷேக்ஸ்பியரின் எழுத்துகளில் ஒளிந்திருக்கும் பேக்கனின் ரகசிய குறியீடுகளை கண்டுபிடிக்க உதவுமாறு எலிசபெத்தை பணியமர்த்தினார் ஜார்ஜ்

அப்போது தான் தனது வருங்கால கணவர் வில்லியம் ஃப்ரீட்மேனை சந்தித்தார் எலிசபெத். குறியீடுகளின் உள்ளர்த்ததை கண்டுபிடிப்பதில் இருவருக்கும் இருந்த ஆர்வம் இவர்களுக்குள் இருந்த அன்னியோனியத்தை அதிகரித்தது.

முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, தனது அணியில் இருந்த கோட்பிரேக்கர்களை அழைத்துக்கொண்டு, போர் குழுவுக்கு உதவ சென்றார் ஃபாபியன். அவர்களில் எலிசபெத் மற்றும் வில்லியமும் அடக்கம்.

ரகசியங்களை உடைத்தெறிந்த தம்பதி:

“அமெரிக்கா முதலாம் உலகப்போரில் பங்கேற்க முடிவெடுத்தபோது, குறியீடுகள் மற்றும் மறைக்குறியீடுகள் பற்றிய புரிதல் அவ்வளவாக இருக்கவில்லை. நாங்களுமே தொடக்க நிலையில் தான் இருந்தோம். கற்றுக்கொண்டே பணியாற்றியும் வந்தோம்” என்கிறார் வில்லியம்

தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின்படி, முதலாம் உலகப்போரின்போது, எலிசபெத் மற்றும் அவரது கணவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றினர். அதில் முதல் 8 மாதங்கள் எலிசபத் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவர் மட்டுமே முழுவீச்சில் அனைத்து ரகசிய குறியீடுகளையும் கண்டறியும் பொறுப்பில் இருந்துள்ளனர்.

இன்றும் தேசத்தின் பாதுகாப்பு சார்ந்து நாடுகளுக்கு இடையில் பரிமாற்றிக்கொள்ளப்படும் ரகசிய குறியீடுகளை கண்டுபிடிக்கும் பல வழிமுறைகளை வகுத்தது எலிசபெத் மற்றும் அவரது கணவர் வில்லியம் தான்.

தடைக்காலம்:

முதலாம் உலகப்போருக்கு பிறகு, வில்லியம் இராணுவ ரிசர்வ் சிக்னல் கார்ப்ஸிலும், எலிசபெத் கடலோர காவல்படையிலும் பணியமர்த்தப்பட்டனர்

உலகப்போர் முடிந்து சற்றே பெருமூச்சு விட்டபோது வந்தது அடுத்த சோதனை. 1920 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தடைக்காலம் விதிக்கப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக சிலர் கடல் மூலம் மதுபானங்களை கடத்த முயற்சித்தபோது, அமெரிக்க அரசு எலிசபெத்தின் உதவியை நாடியது. அவர்களுக்குள் இருந்த ரகசிய சம்பாஷனையை உடைத்தெறிய எலிசபெத் தேவைப்பட்டார்.

இந்த சமயத்தில் எல்லாம், எலிசபெத்திற்கு ரகசிய குறியீடுகளை கண்டறிவது கை வந்த கலையாகியிருந்தது. அவரும் அவரது உதவியாளரும் இணைந்து மொத்தம் 12,000 கோட்களை கண்டறிந்திருந்தனர். இதன் மூலம் 650 குற்றவாளிகள் பிடிப்பட்டதாக டைம் தளத்தின் அறிக்கை கூறுகிறது.

பறிக்கப்பட்ட அங்கீகாரம்:

இவ்வளவு நாட்களாக பணியில் மட்டுமே எலிசபெத்திற்கு இருந்த சவால்களும் தடைகளும், இரண்டாம் உலகப்போரின்போது வேறு விதமாக வெடித்தது.

முதன் முறையாக பெண் என்ற காரணத்தால் ஒடுக்கப்பட்டார் எலிசபெத். அவர் மிகக் கடினமான ஜப்பானிய மற்றும் ஜெர்மனிய அரசுகளின் குறியீடுகளை கண்டறிய விருப்பப்பட்டார். ஆனால், பதவியிலிருந்து நீக்கப்பட்டு நாஜி உளவாளிகளை நோட்டமிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.

தன் முன் வந்த தடைகளை தகர்த்தெறிந்து, நாஜி உளவாளிகளை கண்டறிய அமெரிக்காவுக்கு உதவினார் எலிசபெத். 4000 ரகசிய செய்திகள், 48 ரேடியோ தகவல்தொடர்புகள் மூன்று எனிக்மா கோட்களை கண்டறிந்தார்.

இருப்பினும், நாட்டுக்காக எலிசபெத்தின் அர்ப்பணிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை. இவரது வெற்றிகளுக்கான நற்பெயர்களை பெரும்பாலும் எலிசபெத்தின் உயரதிகாரி எட்கர் ஹூவர் பெற்றார்.

1980ஆம் ஆண்டு உயிரிழந்தார் எலிசபெத். இறக்கும் வரை தனது பணிக் குறித்தோ அவர் ஆற்றிய சாதனைகள் குறித்தோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

கடைசியில் கடந்த 2008 ஆம் ஆண்டு இவரது சாதனைகள் குறித்த கோப்புகள் வகைப்படுத்தப்பட்டன. அப்போது தான், எலிசபெத் குறித்த உண்மையை உலகம் அறிந்தது. அதன் பிறகே அவருக்கு Mother of Cryptology என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?