Eiffel Tower ஐ 70,000 டாலருக்கு விற்ற நபர் - கில்லாடி திருடர் பிடிப்பட்டது எப்படி? ட்விட்டர்
உலகம்

Eiffel Tower ஐ 70,000 டாலருக்கு விற்ற நபர் - கில்லாடி திருடர் பிடிப்பட்டது எப்படி?

Keerthanaa R

உலகின் 7 அதிசயங்களில் ஒன்று பாரிஸிலுள்ள ஈஃபிள் டவர். காதலின் சின்னமாகவும் இது பார்க்கப்படுகிறது, உலகின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று.

இந்த கோபுரத்தை குஸ்தாவே ஈஃபிள் என்பவரின் நிறுவனம் வடிவமைத்து கட்டியது. ஈஃபிள் டவரை 1887 ஆம் ஆண்டில் தொடங்கி 1889ல் கட்டி முடித்தனர். இந்த கோபுரம் 1083 அடி உயரமாகும்.

தோழா படத்தில் காண்பிப்பதுபோல, இந்த கோபுரத்தின் உச்சியை காண்பது அவ்வளவு எளிதல்ல.

இந்த உலக அதிசயத்தை ஒருவர் இரு முறை விற்க முயன்றார் என்கிற கதை தெரியுமா? இரண்டு முறை முயற்சித்து ஒரு முறை வெற்றியும் பெற்றவர், கடைசியில் சிக்கியது எப்படி? எப்போது நடந்தது இந்த வேடிக்கை?

விக்டர் லஸ்டிக் என்கிற நபர் தான் ஈஃபிள் டவரை விற்க முயன்றவர். இவர் 1890ஆம் ஆண்டு செக் நாட்டின் ஹாஸ்ட்டைன் என்ற நகரத்தில் பிறந்ததாக இவரே கூறுவது தான் இவரை பற்றி நாம் அறிந்திருக்கும் தகவல். முகத்தில் இடது கன்னத்தில் ஒரு தழும்பும் இருக்கிறது விக்டருக்கு.

இவற்றை தவிர இவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை, இருக்கும் தகவலும் எந்தளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

விக்டர் நல்ல பேச்சு திறமையுள்ளவர். இதுவரை கேள்விப்பட்டிராத விஷயத்தை கூட நிஜம் என நம்பும் அளவுக்கு அதைப்பற்றி பேசுவார்.

இவர் தன் அசாதாரண பேச்சு திறனை வைத்து ஆண்கள் பெண்கள் என அனைவரையும் கவர்ந்தார். இவர் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பும் மக்களை ஏமாற்றி ஏதாவது ஒரு பொருளை விற்றுவிடுவார்.

அப்படித்தான் ஒரு முறை தன்னிடம் ஒரு ரகசிய பணப்பெட்டி இருக்கிறது எனவும், அது 100 டாலர் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்கும் ஒரு தனித்துவமான கருவி எனவும் கூறினார். அக்கருவியைப் பற்றி ஆசைவார்த்தைக் கூறி, பலரிடம் போலி பெட்டகம் ஒன்றை விற்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவார்.

இவர் மீது மாநில அளவிலும், தேசிய அளவிலும் சுமார் 40 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இப்படியாக சிறுகச் சிறுக மக்களை ஏமாற்றி வந்தவருக்கு ஒரு பலே ஆஃபர் கையில் சிக்கியது. இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு விக்டர் தப்பித்து வந்த அதே சமயத்தில், பிரான்ஸ் அரசு, ஈஃபிள் கோபுரத்தை பழுது பார்க்க வேண்டும் என அறிவித்திருந்தது.

இதனை ஒரு தரப்பு மக்கள் ஆதரித்தும் மற்றொரு தரப்பு எதிர்த்தும் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர்.

அப்போது பிரான்ஸ் நாட்டு அரசின் உயரதிகாரி ஒருவர், பாரிஸிலுள்ள Scrap Dealerகள் ஐந்து பேருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, மிக முக்கியமான விஷயம் குறித்து விவாதிக்க வேண்டும் என தன்னை சந்திக்குமாறு உத்தரவிட்டார்.

டீலர்களும் அவர் சொன்ன இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் இந்த உயரதிகாரி, அரசு ஈஃபிள் டவரை முற்றிலுமாக தகர்க்க முடிவெடுத்துள்ளதாகவும், அப்படி தகர்க்கும்போது அந்த நினைவுச்சின்னத்திலுருந்து 7000 டன் வரை ஸ்க்ராப் (குப்பை) கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த 7000 டன் எடைகொண்ட ஈஃபிள் டவரின் மிச்சங்களை அதிக விலை சொல்லுபவருக்கு ஏலம் விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வந்திருந்த வியாபாரிகளில் தன்னுடைய இலக்கு யார் என்பதை முன்கூட்டியே முடிவு செய்திருந்தார் அந்த அரசு அதிகாரி. அந்த அரசு அதிகாரி வேறு யாரும் இல்லை. விக்டர் தான்.

வருகை தந்திருந்த வியாபாரிகளில் ஆண்ட்ரே பாய்சன் என்பவரை தனிமையில் சந்தித்து பேசினார் விக்டர். தனது வழக்கமான பேச்சுத்திறனை வைத்து ஆண்ட்ரேயிடம் பேசியதில், ஏலம் தனக்கு சாதகமாக முடியவேண்டும் என விக்டரிடம் கேட்டுக்கொண்டார் ஆண்ட்ரே. இதற்காக விக்டருக்கு 70,000 டாலர்களை முன் தொகையாகவும் அளித்தார்.

தான் ஏமாற்றப்பட்ட விஷயத்தை ஆண்ட்ரே உணருவதற்குள் பணத்துடன் நாட்டை விட்டு தப்பித்திருந்தார் விக்டர். மேலும் தான் செய்த மோசடி குறித்த செய்திகள் ஏதேனும் வெளியாகியுள்ளதா என்பதையும் அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொண்டார்.

பெரிதாக யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என தெரிந்த பின் மீண்டும் ஒரு முறை ஈஃபிள் டவரை விற்க முயன்றார். ஆனால், கோபுரத்தை வாங்க வந்த நபர் சற்று சுதாரித்து காவல் துறையினரிடம் புகாரளித்தார்.

காவல் துறை தன்னை கைது செய்யும் முன்னர் அமெரிக்காவுக்கு தப்பித்துவிட்டார். அங்கு மீண்டும் 100 டாலர் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை விற்கத் தொடங்கினார்.

இப்படியாக பல ஆண்டுகள் மக்களை ஏமாற்றிவந்த விக்டரை, 1935 ஆம் அவரது காதலியின் உதவியோடு கைது செய்தது போலீஸ். தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட விக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனைக்காலம் முடிவடையும் முன்னரே 1949ஆம் ஆண்டு உயிரிழந்தார் விக்டர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?