Siberian Forest Cat Twitter
உலகம்

ஒரு பூனை 2.47 லட்சமா? உலகின் விலையுயர்ந்த பூனை இனங்கள் குறித்து தெரியுமா?

Priyadharshini R

பூனைகள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு விருப்பமான செல்லப்பிராணிகளாக உள்ளது.

வெவ்வேறு இனங்களில் இருக்கும் இந்த பூனைகள் உலகில் செல்லப்பிராணிகளுக்கான தேர்வில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பல பூனை இனங்கள் விலையுர்ந்தவையாக இருக்கின்றன. அப்படி உலகின் மிகவும் விலையுயர்ந்த பூனை இனங்கள் குறித்தும், அவற்றின் தனித்துவமான குணாதிசயங்கள், அவை ஏன் அதிக விலையில் உள்ளன என்பது குறித்தும் இங்கே காணலாம்.

எகிப்திய மாவ் பூனை

விலை $900 - $1600

(இந்திய மதிப்பில் ரூ.74,112 முதல் ரூ.1,31,755 வரை ஆகும்)

எகிப்திய மாவ் என்பது உள்நாட்டு பூனைகளின் இனமாகும்.

அவை பயிற்சியளிக்கக்கூடிய பூனை இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

எகிப்திய மாவ் ஒரு அரிய வகை பூனை இனம். இதனாலேயே அவை விலையுர்ந்ததாக கருதப்படுகிறது.

சைபீரியன் காட்டு பூனை

$600 - $2000

(இந்திய மதிப்பில் ரூ.49,408 முதல் ரூ.1,64,694 வரை ஆகும்)

சைபீரியன் காட்டு பூனை என்று அழைக்கப்படும் இது ரஷ்யாவில் தோன்றிய பூனை இனமாகும். அவை கருப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது.

அவை நட்பு, பாசம் மற்றும் ஆளுமைக்கு பெயர் பெற்றது.

ஸ்காட்டிஷ் பூனை

$800 - $2000

இந்திய மதிப்பில் ரூ. 65,877 முதல் ரூ.1,64,694 வரை ஆகும்

ஸ்காட்டிஷ் பூனைகள் விலையுயர்ந்த பூனை இனங்களில் ஒன்றாகும். இந்த பூனைகள் மற்ற இனங்களைப் போன்று அல்ல. அவற்றின் தனித்துவமான மடிந்த காதுகளுக்கு பெயர் பெற்றவை.

பெங்கால் பூனை

$1800 - $3000

இந்திய மதிப்பில் ரூ.1,48,225 முதல் ரூ.2,47,042 வரை ஆகும்

பெங்கால் பூனை என்பது ஒரு உள்நாட்டு பூனை இனமாகும். அவை வளர்ப்பவர்கள் மீது அதீத அன்பும், விசுவாசமும் கொண்டிருக்குமாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?