The Most Unusual And Beautiful Train Routes In The World Twitter
உலகம்

உலகின் மிகவும் விசித்திரமான ரயில் பாதைகள் - எங்கே இருக்கிறது தெரியுமா?

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வளைந்து நெளிந்து போகும் நீர்நிலைகளை, எழில் கொஞ்சும் மலைகள் என இந்த ரயில் பயணத்தின் போது இயற்கையின் அழகியலை அனுபவிக்க முடியும். அதிலும் உலகில் தனித்துவமான ரயில் பாதைகள் உள்ளன.

Priyadharshini R

ரயில் பயணம் பலருக்கு பிடித்தமான போக்குவரத்து. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் போக்குவரத்து ஒரு சிறந்த மற்றும் மிகவும் சிக்கனமான வழிகளில் ஒன்றாகும்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வளைந்து நெளிந்து போகும் நீர்நிலைகளை, எழில் கொஞ்சும் மலைகள் என இந்த ரயில் பயணத்தின் போது இயற்கையின் அழகியலை அனுபவிக்க முடியும். அதிலும் உலகில் தனித்துவமான ரயில் பாதைகள் உள்ளன.

உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் அனுபவிக்க வேண்டிய உலகின் மிகவும் அசாதாரணமான ரயில் வழித்தடங்களுக்கு இப்போது உங்களை அழைத்து செல்ல போகிறோம்.

மேக்லாங் சந்தை இரயில்வே, தாய்லாந்து

இது உலகின் மிகவும் அசாதாரணமான ரயில் வழித்தடங்களில் ஒன்றாகும்.

இது தாய்லாந்தில் உள்ள சந்தை வழியாக பயணிகளை அழைத்துச் செல்கிறது. இரயில் தண்டவாளத்திலேயே சந்தை அமைக்கப்பட்டுள்ளது என்பது தான் கூடுதல் சுவாரஸ்யமே!

இங்கு அதிக இடவசதி இல்லாததால், கடைக்காரர்கள் தங்கள் விளைபொருட்களை விரைவாக ரயில் வருவதற்கு முன்பு கட்டிவைத்து, ரயில் சென்றதும் மீண்டும் வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு பலமுறை இவ்வாறு செய்ய வேண்டியிருக்குமாம்.

ரயில் கடந்து சென்றதும், சந்தையின் சலசலப்பு முன்பு போலவே மீண்டும் தொடங்குகிறது!

அலாஸ்கா இரயில் பாதை, அலாஸ்கா

இந்தப் பாதையில் பயணம் செய்வது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அலாஸ்காவில் உள்ள கரடுமுரடான மற்றும் கண்கவர் பிரதேசத்தின் காட்சிகளை ரயிலில் அமர்ந்தபடி கண்டு ரசிப்பது தான்.

நீங்கள் டபுள் டெக்கர் டோம் கார்களில் ஏறி பயணிக்கலாம். அதில் இருக்கும் பால்கனிக்கு செல்லலாம் அல்லது மேல் மட்டத்தின் உட்புறத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்.

ஹிராம் பிங்காம் ரயில்

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு, லாஸ்ட் சிட்டி ஆஃப் தி இன்காஸ் வழியாக இந்த ரயில் பயணிக்கிறது.

இந்த பழங்கால ரயிலில் 1920-களில் புல்மேன் பாணியில் பெட்டிகள் உள்ளன.

உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் அனுபவிக்க வேண்டிய பயணமாகும் இது

காதல் சுரங்கப்பாதை, உக்ரைன்

இந்த பசுமையான சுரங்கப்பாதை வழியாக செல்லும் ரயில் பயணம் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இந்த 1.8 மைல் நீளமுள்ள அசாதாரண இரயில் பாதை, மனிதனால் உருவாக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?