2000 கதவுகள், 160 அறைகள் கொண்ட அமானுஷ்ய வீடு - பேய்களை குழப்ப கட்டப்பட்டதா? twitter
உலகம்

8 அறை 160 அறைகளாக மாறியது எப்படி? அமானுஷ்ய வீடு கட்டப்பட்டதன் பின்னணி என்ன?

Keerthanaa R

கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் என்ற இடத்தில் ஒரு மாபெரும் மாளிகை உள்ளது. இதன் முகப்பே பார்ப்பதற்கு சந்திரமுகி படத்தில் வருவது போல, "கேட்ட பாத்தாலே பயமா இருக்கே!" என்ற ஃபீலிங்கை நமக்கு கொடுக்கும்.

உலகின் பிரபலமான, அமானுஷ்யமான பின்னணியை கொண்ட சுற்றுலா தலங்களில் இந்த வீடும் ஒன்று.

இதன் உரிமையாளர் சாரா வின்செஸ்டர். இந்த வீட்டை கட்டி முடிக்க 38 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதன் மர்மமான பின்னணி என்ன?

சாரா வின்செஸ்டர் கனெக்டிகட் மாகணத்தின் நியூ ஹாவென் என்ற இடத்தை சேர்ந்தவர். இந்த வீட்டை அவர் சொந்தமாக்கும்போது, 8 அறைகள் கொண்ட சிறிய வீடாக தான் இருந்தது.

இந்த 38 ஆண்டுகளில் வீட்டை கட்டிமுடிக்கும் வரை அதில் ஏதாவது ஒரு மாற்றத்தை சாரா செய்துகொண்டே இருந்திருக்கிறார்.

2000 கதவுகளும் ரகசிய அறைகளும்

இந்த வீட்டில் மொத்தம் 160 அறைகள் உள்ளன. 2000 கதவுகள், 10,000 ஜன்னல்கள், தலா 47 படிக்கட்டுகள், நெருப்பு மூட்டிகள், 13 பாத்ரூம்கள், 6 சமையல்யறைகளை கொண்டுள்ளது.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 2000 கதவுகளும் திறந்தால் ஒவ்வொரு இடத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். ஒரு கதவு நேரே சமையலறைக்கு, ஒரு கதவு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு என வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

படிக்கட்டுகளில் சில ஏறினால் அப்படியே விட்டத்தில் சென்று தான் முடிகின்றன. அழகிய கலை நயம் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜன்னல்கள், வெளிச்சமே படாத இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தவிர நார்னியாவில் வருவது போல நிறைய ரகசிய பாதைகளும் உள்ளன.

ஒரு குறிப்பாக அலமாரியை திறந்தால், வீட்டிலுள்ள இன்னும் 30 அறைகளுக்கு அது நம்மை கூட்டிச் செல்கிறது

மர்மம் என்ன?

சாரா வின்செஸ்டரின் கணவர் மற்றும் அவர்களது குழந்தை இறந்த பின்னர் தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யமாக நடப்பதை உணர்ந்தார் சாரா.

இது பற்றி உள்ளூரு மந்திரவாதி ஒருவரிடம் கேட்டபோது, வின்செஸ்டரின் நிறுவனம் கண்டுபிடித்த துப்பாக்கியால் கொல்லப்பட்டவர்களின் ஆவி தான் சாராவை துரத்துவதாக அவர் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அவர் அப்போது வசிக்கும் இடத்திலிருந்து மேற்கே சென்று தங்கவேண்டும், அங்கு ஒரு வீட்டை வாங்கி அதனை இடைவிடாது கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த வீட்டை கட்டி முடிக்கும் நேரத்தில் சாரா இறந்துவிடுவார் எனவும் அந்த மந்திரவாதி கணித்துள்ளார்.

சாரா தன்னை துரத்தும் ஆவிகளிடம் இருந்து தப்பிக்கவே இப்படி குழப்பக்கூடிய வடிவில் வீட்டை வடிவமைக்கத் தொடங்கியுள்ளார். மேலும் ஒரு ஒரு இரவும் அவர் ஒரு ஒரு படுக்கயறையை பயன்படுத்தினார்

பூகம்பம்

1906 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில், வீட்டின் முதல் மூன்று தளங்கள் சிதிலமடைந்தன. அதன் விளைவாக அடுத்த நான்கு தளங்களும் சேதத்தை சந்தித்தது.

இதனை ஒரு சமிக்ஞையாக எடுத்துக்கொண்ட சாரா, சீக்கிரம் வீட்டை கட்டிமுடிக்க முயற்சிகள் செய்தார். பின்னர் 1922ல் அவர் இறந்தும்போனார்.

இன்றும் இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்களை நம்மால் பார்க்கமுடிகிறது

இன்றும் கேட்கும் காலடி சத்தம்

இந்த வீட்டைப் பற்றி கூறப்படும் கதைகள் உண்மையா என அறிய 1990ல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிறிஸ்டோபர் சாகோன் என்ற பாரா சைக்காலஜிஸ்ட் மற்றும் அமானுஷ்ய புலனாய்வாளர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

சுமார் ஒரு மாதக் காலம் நடந்த இந்த ஆராய்ச்சியில், ஒரு மாத கால, 300 க்கும் மேற்பட்ட நபர்களை நேர்காணல் செய்து, அவர்களின் அனுபவங்கள் சேகரிக்கப்பட்டன.

தவிர ஏதாவது அசாதாரணமாக நடந்தால்அதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 2018 இல், பிரபலமற்ற வீடு மற்றும் அதற்குள் வாழும் ஆவிகள் பற்றி ஒரு திகில் படம் எடுக்கப்பட்டது.

அப்போது மூடப்பட்ட அறைகளுக்குள் இருந்து காலடி சத்தங்கள் கேட்டதாகவும், கதவுகளின் பூட்டுகள் தானாக திறந்தன எனவும் கண்டறியப்பட்டது.

2018 ஆண்டு இந்த வீட்டை மையமாக வைத்து ஒரு படமும் எடுக்கப்பட்டுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?