நகரும் மரம், பறவைகளை கொல்லும் மரம் என வித்தியாசமான மரங்கள் குறித்தெல்லாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், இயற்கையாகவே வளைந்தே வளரும் மரங்களை பற்றிய கட்டுரை தான் இது.
போலந்து நாட்டின் மேற்கு போமரேனியா பகுதியிலுள்ள கிரிஃபினோ என்ற நகரத்தில் அமைந்துள்ளது இந்த க்ரூக்கட் ஃபாரஸ்ட், அதாவது வளைந்த காடு.
இங்குள்ள மரங்கள் 1930ஆம் ஆண்டு நடப்பட்டவை. மொத்தம் 400 மரங்கள் இந்த காட்டில் உள்ளன. இந்த காட்டில் காணப்படும் மரங்களில் சில சரியாக 90 டிகிரிக்கு வடக்கு பக்கமாக வளைந்து பின்னர் நேராக வானை நோக்கி வளருகின்றன.
இவை வளைந்து காணப்பட்டாலும், எல்லா மரங்களும் நல்ல ஆரோக்கியமாக உள்ளது மற்றும் 50 அடி வரை வளர்கிறது
இங்குள்ள 400 மரங்களும் அப்படி வளைந்திருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சுமார் 100 மரங்கள் மட்டுமே இப்படி இருக்கின்றன.
இந்த மரங்கள் ஏன் குறிப்பாக ஒரு பக்கம் வளைந்து பின்னர் நேராக வளர்கிறது என்பதற்கு நம்பகத் தன்மையான சான்றுகள் இல்லை. அந்த மரங்கள் உள்ள இடத்தின் புவியீர்ப்பு விசையின் காரணமாக அவை வளைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால் புவியீர்ப்பு விசை ஒரு பொருளை மேலிருந்து கீழே தான் இழுக்கும். வளைக்காது.
மற்றொரு புறம், மரங்கள் சிறியதாக இருக்கும்போது கடும் பனிப்பொழிவு இருந்ததாகவும், அதன் எடையை தாங்க முடியாத மரங்கள் வளைந்துகொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு சிலர் இதனை மரபணு மாற்றம் எனவும், ஏலியன்களின் செயல் எனக் கூட கூறுகின்றனர்.
சிலரோ உள்ளூர் விவசாயிகள் இதன் வடிவத்தை மாற்றியிருக்கலாம் என்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1970கள் வரை இவ்விடம் மனிதர்களற்று இருந்தது. இந்த காலக்கட்டத்திற்கு முன்னர் அங்கு வசித்த மக்களுக்கு காரணம் தெரிந்திருக்கலாம்!
ஆனால் இவை வளைந்து காணப்பட எந்த ஒரு காரணமும் இன்று வரை கண்டறியப்பட முடியவில்லை.
போலந்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த க்ரூக்கட் ஃபார்ஸ்ட்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust