ஈராக், சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த குர்திஷ் சிறுபான்மையின மக்கள்தான் யசீதிகள். யசீதி என்றால் அரேபிய மொழியில் 'இன்னும் அதிகமாக' என்று அர்த்தம். சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கில் நடந்த யசீதி மக்கள் மீதான இனப்படுகொலை சம்பவம், உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது அது தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் யசீதிகளின் மதம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் பேசப்பட்டது. ஆனால், அப்போது யாருமே, யசீதி கலாச்சாரம் இந்து கலாச்சாரத்துடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது குறித்து பேசவில்லை. ஏனெனில் அப்படியான ஒற்றுமை இருப்பது குறித்துப் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.
பண்டைய காலத்திலிருந்தே இரண்டு கலாச்சாரங்களும், அவற்றின் பாதைகளில் பின்னிப் பிணைந்துள்ளதாக சொல்கிறார்கள் இது தொடர்பான வரலாற்று ஆய்வாளர்கள். பண்டைய காலத்தில் யசீதிகள் நாடோடிகளாக இருந்ததாகவும், தெற்கே இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர்கள் சுமார் 2,000 ஆண்டுகள் இப்பகுதியில் தங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த காலத்தில்தான், ஒரு பெரிய கலாச்சார ஊடுருவல் ஏற்பட்டதாக தெரிகிறது. யசீதிகளில் சிலர் இங்கே தொடர்ந்து வசித்தார்கள். சுமார் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த காலகட்டத்தில்தான், அவர்கள் இந்து கலாச்சாரத்தை தங்களுக்குள் உள்வாங்கி இருக்கக்கூடும். இரு கலாச்சாரங்களுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமைக்கு இதுவே முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரு மதங்களுக்கு இடையேயான முதல் கலாச்சார வேறுபாட்டை இந்து கோயில் அல்லது யசீதிகளின் கோயிலாக கருதப்படும் 'லாலிஷ்' வடிவத்தில் காணலாம். ஈராக்கில் உள்ள 'லாலிஷ்', யசீதிகளின் மிகவும் புனிதமான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து மதக் கோயில்களில் காணப்படும் சுவரோவியங்கள் மற்றும் இதர சித்தரிப்புகளுடன் கூடிய கலை போன்ற இந்து கலாச்சாரத்தையே இது கொண்டுள்ளது. உடைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பாரம்பரிய இந்து முறைகளுடன் மிகவும் ஒத்திருக்கிறது. ஆரத்தி எடுப்பது மற்றும் இதர சில இந்து மத வழிபாடுகள் கூட யசீதிகளின் சடங்குகளில் காணப்படுகின்றன.
இந்து கலாச்சாரத்தில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் ஆரத்தி விளக்குகள், யசீதிகள் பயன்படுத்தும் 'சஞ்சகாஸ்' எனப்படும் எண்ணெய் விளக்குகளைப் போலவே இருக்கும். இந்த சஞ்சகாஸ் உடன் தொடர்புடைய ஒரு புராணம் உள்ளது. பல நூற்றுக்கணக்கான ஆரத்தி விளக்குகளைக் கொண்டு நடத்தப்படும் வழிபாட்டை முன் உதாரணமாக கொண்டே, இரண்டு வகையான சஞ்சகாஸ் வழிபாடுகள் காண்ப்படுகின்றன. யசீதி தெய்வம், முதலில் அவர்களின் மதத்தில் அறியப்பட்ட ஏழு பெரிய தேவதைகளுக்கு, ஏழு சஞ்சகங்களைக் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. இவற்றில் ஐந்து இடம்பெயர்ந்தன, மேலும் இரண்டு மட்டுமே அவற்றின் பராமரிப்பில் எஞ்சியுள்ளன. இவை யெசிடிகளுக்கு மிகவும் புனிதமானவை. எனவே, ஆரத்தி வடிவத்தில் நெருப்பைப் பயன்படுத்தும் முறை இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையேயான ஒற்றுமையைக் காட்டுகிறது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்து மதத்தில் மயில் கடவுள் அவதாரமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிவனின் மகனான முருக கடவுளின் வாகனமாக வழிபாடு செய்யப்படுகிறது. அதே போன்றுதான் யசீதிகளின் முக்கிய கடவுள் 'தவ்சி மெலெக்'. இந்தக் கடவுளை 'மயில் ராஜா' அல்லது 'மயில் தேவதை' என்று அழைக்கிறார்கள் அவர்கள். இரண்டு தெய்வங்களும் மிகவும் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பது உண்மையிலேயே சுவாரஸ்யமானதுதான். புராணத்தின் படி, முருகன் மற்றும் தவ்சி மெலேக் இருவரும் குறும்புக்காரர்களாக அறியப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அமைதி மற்றும் மனிதநேயம் பற்றிய கருத்துக்களையே கடவுளின் வார்த்தையாக மனிதர்களுக்கு கொண்டு வந்தனர். இதனால், மயிலுடன் இவ்விரு மதங்களுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, ஒரு பெரிய ஒற்றுமையாகக் காணப்படுகிறது.
இந்த புராண ஒற்றுமைகள் தவிர, இரு பிரிவினருக்கும் அன்றாட வாழ்க்கையில் ஒரே மாதிரியாக இருக்கும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, மூன்றாவது கண் எனப்படும் நெற்றியில், இரு புருவங்கங்களுக்கு மத்தியில் திலகமிட்டு வழிபடும் முறை. இந்து மதத்தில் காணப்படும் இந்த திலக வழிபாட்டு முறையைப் போன்றே யசீதிகள் நெற்றியின் நடுப்பகுதியை புனித சின்னமாக கருதி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். புனிதமான நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்ப்படும் இந்த வழிபாட்டு முறையை, யசீதிகள் அப்படியே பின்பற்றுகின்றனர். கோயில்களில் நடக்கும் அபிஷேகம், சடங்குகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த இரண்டு கலாச்சாரங்களும் மிக நெருக்கமாக இருப்பதை அறியலாம்.
மேலும், இரண்டு மதங்களிலும் உள்ள பிரதான கடவுள்களுக்கு இடையே மிகவும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பதை வரலாற்று ரீதியாக அறிய முடிகிறது. இந்து கலாச்சாரத்தில், சிவன் தனது சக்தியின் வலிமையால் தனது மகன் முருகனை உருவாக்கினார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதே போன்றுதான், யசீதிகளின் முக்கிய கடவுளான 'தவ்சி மெலெக்' , ஒளிக்கடவுளாக கருதப்படும் அவரது தந்தையால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம், இரண்டு புராணக்கதைகளும் மயில்களுடனான தொடர்பில், ஒரே மாதிரியாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு, இரு கலாச்சாரங்களிலும் உள்ள படைப்பின் முதன்மைக் கடவுள்கள், அவர்கள் எவ்வாறு தோன்றினார்கள் போன்றவை ஒரே மாதிரியான புனைவுகளுடன் காணப்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.
இந்துக்கள் 'புனர் ஜென்மம்' அல்லது மறுபிறப்பு கருத்தை நம்புகிறார்கள். யசீதிகளிடையேயும் அதேபோன்ற மத நம்பிக்கை காணப்படுகிறது. ஒருவர் அடுத்த பிறவியில் இடம் மாறி பிறப்பார் என அவர்கள் நம்புகிறார்கள். மரணத்திற்குப் பின்னும், அதற்கு அப்பாலும் உள்ள வாழ்க்கை பற்றிய இந்த எண்ணம், இரு மதத்தினருக்கும் இடையிலான மற்றொரு ஒற்றுமையாக குறிப்பிடலாம். எனவே, இவ்விரு அம்சங்களும் இந்த இரண்டு கலாச்சாரங்களின் ஒரே பக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம், யசீதி கலாச்சாரம்,
இந்து கலாச்சாரத்துடன் மிகவும் ஒற்றுமையாக காணப்படுகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பூகோள ரீதியாக வேறுபட்ட இரு பிராந்தியங்களில் நிறுவப்பட்ட இரண்டு கலாச்சாரங்கள், எவ்வாறு குறிப்பிடத்தக்க பொதுவான வேர்களைக் கொண்டிருக்க முடியும் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust