summer season twitter
உலகம்

வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டும் பூமியின் வெப்பமான இடங்கள் எவை தெரியுமா?

உலகின் வெப்பமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பல இடங்கள் உலகம் முழுவதும் உள்ளன. வெப்பநிலை 50 டிகிரி முதல் 70 டிகிரி செல்சியஸைத் தாண்டிய சில இடங்கள் பற்றி இங்கே காண்போம்.

NewsSense Editorial Team

லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாகக் கோடை வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் போராடி வருகிறார்கள். இந்நிலையில், இந்திய வானிலை மையம் இந்த மாதம் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த மே மாதத்தில், இந்தியாவில் பல இடங்களில் வரலாற்றில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பநிலை காரணமாக, மக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தலைப்புச் செய்திகளாக அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த நெருக்கடியான சூழலானது, உலகின் மற்ற பகுதிகளில் வெப்பநிலை எப்படி இருக்கிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

உலகின் வெப்பமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பல இடங்கள் உலகம் முழுவதும் உள்ளன. வெப்பநிலை 50 டிகிரி முதல் 70 டிகிரி செல்சியஸைத் தாண்டிய சில இடங்கள் பற்றி இங்கே காண்போம்.

Kebili, Tunisia

கெபிலி, துனிசியா 55 ° C

அதன் நம்பமுடியாத வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, சோலார் திட்டத்திற்கான சிறந்த இடமாக வல்லுநர்கள் கெபிலியை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்த நகரம் ஆப்பிரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். 1920-1933க்கு இடையில், கெபிலி ஒவ்வொரு கோடைக்காலத்திலும் அதிகபட்ச வெப்பநிலை 50-55 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஆனால் 2000 முதல் அதன் முழுமையான அதிகபட்சம் 48.5°C (119.3°F) மட்டுமே பதிவாகி இருக்கிறது.

Tirat Zvi, Israel

டிரட் ஸ்வி, இஸ்ரேல் 54°C

ஆசியாவிலேயே காற்றில் அதிக ஈரப்பதம் இந்த நகரத்தில் பதிவாகியுள்ளது. இது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 722 அடிக்கு கீழே ஷென் பள்ளத்தாக்குக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஜோர்டான் நதி பாய்வதால், மிகவும் வளமான பகுதியாகக் காணப்படுகிறது.

Tirat Zvi நகரத்தின் சிறிய கிப்புட்ஸ், ஆசியாவிலேயே அதிக வெப்பமான 54 °C-ஐ ஜூன் 1942 இல் எட்டியதாகக் கூறுகிறது. குறைந்த வெப்பமான நாட்களில் கூட, இங்குச் சராசரியாக 37 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது.

இப்படி ஒரு தீவிரமான காலநிலை இருந்தபோதிலும், இந்த நகரம் இயற்கையாகவே வளமானதாகவே இருக்கிறது. இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையான நகரமாகவும் கருதப்படுகிறது.

3. Death Valley, America

டெத் வேலி, அமெரிக்கா 56° C

கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கு (டெத் வேலி) அமெரிக்காவின் மிகவும் வறண்ட இடமாகும். இங்குக் கோடையில் சராசரியாக 47°C வெப்பநிலை பதிவாகிறது. சில இடங்களில் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 86 மீ கீழே சரிவதே தீவிர வெப்பநிலைக்கான ஒரு காரணம்.

கலிபோர்னியாவின் டெத் பள்ளத்தாக்கில் 56.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்தப் பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது.

Al-Aziziyah, Libya

அல்-அஜிசியா, லிபியா 57.8° C

அல்-அஜிசியா, லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு தென்மேற்கே 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாஃபரா மாவட்டத்தில் உள்ள சிறியதொரு நகரமாகும்.

இங்கு அதிகபட்சமாக 1922-இல் 57.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. பொதுவாக, ஒவ்வொரு கோடையிலும் இங்கு வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

Cave of the Crystals, Mexico

Cave of the Crystals, மெக்சிகோ 58° C

Cave of the Crystals அல்லது Giant Crystal Cave என்பது மெக்சிகோவில் உள்ள நைக்கா, சிஹுவாஹுவாவில் 300 மீட்டர் ஆழத்தில் உள்ள நைக்கா சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட குகையாகும். இது சுரங்கம் 5,000 முதல் 6,000 கன மீட்டர் அகலத்துடன், சுமார் 109-மீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு குகையாகும்.

இங்கு அதிகபட்ச காற்றின் வெப்பநிலை 58 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதனால்தான் இந்த குகையை அதிகம் ஆய்வு செய்ய முடியவில்லை.

Flaming Mountains, Xinjiang, China

Flaming Mountains, சைனா 66.8° C

Flaming Mountains அல்லது ஹுயோயன் மலைகள், சீனாவின் சின்ஜியாங்கின் தியான் ஷானில் உள்ள தரிசு நிலமாகும். முன்பு இங்குக் காணப்பட்ட சிவப்பு மணற்கல் மலைகள் முழுவதுமாக அரிக்கப்பட்டு தரிசாக மாறிவிட்டது. இது தக்லமாக்கன் பாலைவனத்தின் வடக்கு விளிம்பிற்கு அருகில் உள்ள டர்பன் நகரின் கிழக்கே அமைந்துள்ளது.

2008ல் இங்கு வெப்பநிலை 66.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அந்த ஆண்டு இது உலகின் மிக அதிகமான வெப்பநிலையாகப் பதிவு செய்யப்பட்டது.

குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா 69.3° C

குயின்ஸ்லாந்தில் உள்ள "சன்ஷைன் ஸ்டேட்", ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான விடுமுறை இடமாகும். கோல்டன் கடற்கரைகள், அழகிய வெப்பமண்டல தீவுகள், அற்புதமான சர்ப் இடைவெளிகள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள மலைக்காடுகள், ஆறுகள், திட்டுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை மாநிலத்தின் இயற்கையான சுற்றுச்சூழலில் சிலவை ஆகும்.

2003-ஆம் அண்டு இங்கு 69.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

Dasht-e-Lut, Iran

Dasht-e-Lut, ஈரான் 70.7 ° C

பாரசீக மொழியில் Dasht-e Lut என்று அழைக்கப்படும், கிழக்கு ஈரானில் உள்ள இந்த பாலைவனம் பல ஆண்டுகளாகப் பூமியின் முதல் 5 வெப்பமான இடங்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. மேலும் அதன் 5,400 சதுர கிமீ பரப்பளவில், தாவரங்கள் மற்றும் விலங்குகள் என எந்த ஜீவராசியுமே இல்லை.

இங்கு 2005-ஆம் ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை 70.7 ° C ஆக பதிவானது. லூட்டின் பெரும்பகுதி எப்போதுமே வெப்பமாக இருப்பதால் இங்கு எந்த விலங்கும் வாழ முடியாது.

பந்தர்-இ மஹ்ஷர், ஈரான் 74° C

பந்தர்-இ மஹ்ஷர் என்பது ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள மஹ்ஷர் கவுண்டியின் ஒரு நகரம் ஆகும். ஜூலை 2015 இல் பந்தார்-இ மஹ்ஷர் 74 டிகிரி வெப்பத்தைப் பதிவு செய்தது.

மத்திய கிழக்கில் அதிகமான வெப்ப அலை நீடித்ததால், வரலாற்றின் இரண்டாவது மிக உயர்ந்த வெப்பநிலை என்று கூறப்படுகிறது. முன்னதாக இங்கே, அதிகபட்சமாக 51 டிகிரி வெப்பநிலை பதிவானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?